- பூரணவள்ளி சேகர்
காவியாவின் மீது அளவுகடந்த அன்பு வைத்திருந்தான் கண்ணன். எல்லா விஷயத்திலும் காவியாவிற்கே முதலிடம்.
வீட்டில் ஏதேனும் நிகழ்வு என்றாலும் காவியாவிடம் கேட்டு அவளுக்கு எப்போது நேரம் கிடைக்குமோ அப்போதே நடக்கும். காவியாவின் பேச்சிற்கு மறு பேச்சு பேசாமல் நடந்து கொண்டான் கண்ணன்.
பள்ளியிலும் கல்லூரியிலும் கூட அவளை யாரும் எதுவும் சொல்லிவிடக் கூடாது. பள்ளியில் ஆசிரியர் ஏதாவது திட்டிவிட்டால் மறுநாள் கண்ணன் பள்ளிக்குச் சென்று ஆசிரியரிடம் பேசி காவியாவை மனம் நோகும்படிப் பேச வேண்டாம் என்று கேட்டுக் கொள்வான் கண்ணன்.

தன் மனைவி மகனை விட காவியாவிற்கே முதலிடம் கொடுத்தான் கண்ணன். காவியாவின் திருமணத்தை சிறப்பாக நடத்தினான். காவியா தற்போது சூல் கொண்ட நிலையில் இருந்தாள். கண்ணனின் மனைவிக்கு உடல்நலமில்லாமல் இருப்பதால் துணைக்கு கமலா பாட்டியை வைத்துக் கொண்டு காவியாவிற்கு பிரசவமும் பார்த்தாள்.
காவியாவின் அம்மா கமலாவின் மரணத்திற்குப் பிறகு அவளைத் தூக்கி வளர்த்தது கண்ணன் தான். கமலாவின் உடன் பிறந்த ஒரே தம்பி கண்ணன்.
ஆம் தாய்மாமன் தாயுமானவன் ஆனான்.
(ப.பூரணவள்ளி சேகர், இடைநிலை ஆசிரியர் , ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி , விரகனூர் , திருப்பரங்குன்றம் ஒன்றியம்)
மறவோம் பெருந்தலைவரை.. விருதுநகரின் வீர நாயகனை!
When anyone lies they will face the consequences
சமையல் With ஸ்வர்ணா: ஈவினிங் ஸ்நாக்ஸ்க்கு ஏற்ற சேலம் ஸ்பெஷல் தட்டுவடை செட்!
இந்து தர்மத்தில் ஆண் பெண் வேறுபாடே இல்லை.. காரைக்கால் அம்மையார் கதை!
CREATE YOURSELF
தாயுமானவன்.. ஒரு நிமிடக் கதை (27)
கழுதை கெட்டா குட்டிச் சுவரு.. அறிவோம் பழமொழியின் உண்மை அர்த்தத்தை!
அன்பின் மொழி
இறுதி அஞ்சலி!
{{comments.comment}}