திமுக.,வின் அடுத்த தலைவர் உதயநிதியா?...முதல்வர் பேசியதற்கு என்ன அர்த்தம்?

Feb 09, 2026,05:40 PM IST

சென்னை : தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது மகனும் துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலினிடம் திராவிட முன்னேற்றக் கழகத்தை இளைஞர்களிடமும் அடுத்த தலைமுறையினரிடமும் கொண்டு சேர்க்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.இதனால் திமுக.,வின் அடுத்த தலைவராக உதயநிதி பொறுப்பேற்ற போகிறாரா என்ற பேச்சுக்கள் அரசியல் வட்டாரத்தில் எழ துவங்கி உள்ளது. 


சமீபத்தில் விருதுநகரில் நடைபெற்ற திமுக இளைஞரணி மாநாட்டு நிகழ்ச்சியில் பேசிய தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், "எங்களைத் தொடர்ந்து, உதயநிதி கட்சியை இளைஞர்களிடம் கொண்டு செல்லும் பணியை மிக அற்புதமாகச் செய்து வருகிறார். வன்மத்தைக் கொண்டுள்ள எதிரிகள், திமுகவில் இளைஞர்கள் இணைவார்களா என்ற பிம்பத்தை உருவாக்கினார்கள். ஆனால், மாநிலம் முழுவதும் இளைஞர் அணிக்கு 5 லட்சம் நிர்வாகிகளை நியமிப்பதன் மூலம் உதயநிதி அந்தப் பொய்ப் பிரச்சாரங்களை உடைத்தெறிந்துள்ளார்."




கட்சியின் இளைஞர் அணியின் வரலாற்றை நினைவுகூர்ந்த ஸ்டாலின், "1980-ல் நாங்கள் இளைஞர் அணியைத் தொடங்கினோம். 1949-ல் இளைஞர்களால் தொடங்கப்பட்ட திமுகவை, அடுத்த தலைமுறை இளைஞர்களிடம் கொண்டு செல்வதற்காகவே இளைஞர் அணியை உருவாக்கினோம். அப்போது என்னுடன் இருந்தவர்கள் இப்போது அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் எனப் பல பொறுப்புகளில் உள்ளனர். தற்போது அந்தப் பணியை உதயநிதி மிகச் சிறப்பாகச் செய்து வருகிறார்."


இளைஞர்களிடையே திமுகவின் செல்வாக்கு குறித்த விமர்சனங்களுக்குப் பதிலளித்த அவர், "திமுகவில் இளைஞர்கள் சேர்வார்களா என்று கேள்வி எழுப்பிய எதிரிகளின் கூற்றை, 5 லட்சம் நிர்வாகிகளை நியமித்ததன் மூலம் உதயநிதி தகர்த்துள்ளார்" என்று மீண்டும் வலியுறுத்தினார். நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், இளைஞர்கள் தங்கள் பக்கம் இருப்பதாக முன்வைக்கும் கருத்துக்குப் பதிலடி கொடுக்கும் விதமாகவும், திமுகவின் பலத்தை நிரூபிக்கும் வகையிலும் இந்த இளைஞர் அணி மாநாடு மற்றும் ஸ்டாலினின் இந்தப் பேச்சு அமைந்துள்ளதாகக் கருதப்படுகிறது.


நடிகர் விஜய் ஒரு கட்சியின் தலைவராக இருந்து வரும் தமிழக சட்டசபை தேர்தலை சந்திக்க போகிறார். அதோடு தவெக.,வின் முதல்வர் வேட்பாளராகவும் அவரே முன்னிலைப்படுத்தப்படுகிறார். ஆனால் உதயநிதி இரண்டாம் நிலை தலைவர் என்ற அளவிலேயே கட்சியில் இருப்பதாக கருதப்படுகிறது. அதனால் விஜய்க்கு டஃப் கொடுப்பதற்காக வரும் சட்டசபை தேர்தலிலேயே உதயநிதியின் செல்வாக்கை உயர்த்திக் காட்ட திமுக திட்டமிட்டுள்ளது. அதே போல் விஜய் பக்கம் இருக்கும் இளைஞர்கள் ஓட்டுக்களையும், குறிப்பாக ஜென்சி ஓட்டுக்களை பெறவும் உதயநிதியை முன்னிலைப்படுத்த திமுக வியூகம் வகுத்து வருவதாக சொல்லப்படுகிறது.


திமுக தலைமை உதயநிதியிடம் கை மாற போவதை மறைமுகமாக எடுத்துக் காட்டும் விதமாக தான் சமீப காலமாக நடக்கும் அனைத்து திமுக கூட்டங்கள், மாநாடுகளிலும் முதல்வர் ஸ்டாலின் மட்டுமின்றி கனிமொழி உள்ளிட்ட மற்ற தலைவர்களும் உதயநிதியின் கட்சி பணியை வெகுவாக பாராட்டி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Summer to peak in Tamil Nadu: வெப்பம் அதிகரிக்கும் அபாயம்.. டாப் 10 மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு

news

1971 சாதனையை முறியடிக்க இலக்கு: கூட்டணி கட்சிகளுக்கு 'செக்' வைக்கும் திமுக

news

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக கண்டனத் தீர்மானம்

news

அரசியல் அலசல்.. அதிமுகவில் காளியம்மாள்.. நல்ல பேச்சாளரை நழுவ விட்ட திமுக, தவெக!

news

சித்ரா பௌர்ணமி நாளில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் இந்திரன்.. அன்னை தடாதகை - 3

news

தைப்பொங்கல்.. காலங்கள் கடந்தும் கரையாத நினைவலைகள்!

news

பேச்சை விட நேர்மையான உணர்வுகளுக்கே முக்கியத்துவம்!

news

என் உடலைப் பேணத் தொடங்கியபோது.. I started taking care of my body when...

news

பழுக்கக் காய்ச்சிய இரும்பை சுத்தியால் அடித்தால்.. The hammer hits the heated steel!

அதிகம் பார்க்கும் செய்திகள்