செங்கோட்டையன் செல்லாத நோட்டு... விஜயை எந்த நாட்டுக்கு முதல்வராக்க போகிறார்: செல்லூர் ராஜூ பேட்டி

Feb 09, 2026,05:40 PM IST

மதுரை: செங்கோட்டையன் செல்லாத நோட்டு. அவர் ஆயிரம் பேசுவார். விஜயை எந்த நாட்டுக்கு முதல்வரக்க போகிறார் செங்கோட்டையன் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.


இது குறித்து மதுரையில் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசுகையில், செங்கோட்டையனுக்கு வயசு என்ன தெரியுமா? இனிமே இவர் நாட்டுக்காக பேராடி என்ன செய்ய போகிறார். செங்கோட்டையன் செல்லாத நோட்டு. செல்லாத நோட்டு எதாவது பேசும். அவர் எங்க கட்சியில இருந்தவரு அவரை பற்றி நாங்கள் பேசக்கூடாது. அவரை யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் ஆயிரம் பேசுவார். விஜயை எந்த நாட்டுக்கு முதல்வரக்க போகிறார் செங்கோட்டையன். ஏதாவது கல்லூரிக்கு வேண்டுமானால் முதல்வர் ஆக்கலாம். எல்லோரும் தன்னை எம்ஜிஆர் என சொல்லிக் கொள்ளலாம். மக்கள் அதை ஏற்க மாட்டார்கள். 




ஆதவ் அர்ஜூனா தூய்மையின் பிறப்பிடம். நாட்டுக்காக தியாகம் செய்த குடும்பம் அது. அவர் பேச வேண்டியது தான். இந்த நாட்டில் ஏழைகளின் உயிரை உருச்சி அட்டைப்பூச்சியை போல் ரத்தத்தை குடித்த குடும்பம் அது. பல மாநிலங்களில் லட்டரி சீட்டை நடத்தியது அந்த குடும்பம் தான். அவர் என்ன பேசினாலும் ஒன்றும் ஆகப்போவது கிடையாது. தேர்தலுக்கு பின்னர் தவெக என்னவாக போகிறது என்பது இப்போதா தெரிகிறது. ஆதவ்வின் பேச்சை விஜய்யின் ரசிகர்கள் ரசிக்கலாம். மக்கள் ரசிக்க மாட்டார்கள்.


ஆதவ் அர்ஜூனா எத்தனை ஊர்களுக்கு போயி மக்கள் பிரச்சனையை தீர்த்து வைத்துள்ளார். வரும் தேர்தலில் அதிமுகவிற்கும் திமுகவிற்கும் தான் நேரடியான மோதல். ஊடகங்கள் எங்களை திசை மாற்றுகின்றனர். தவெகவை பற்றி எங்களிடம் எதுவும் கேட்காதீர்கள். ஒரு காலத்தில் கருணாநிதியா?  எம்ஜிஆர் ரா? என்று இருந்தது. அதன்பின்னர் கலைஞரா? அம்மாவா என்று இருந்தது. இன்று ஸ்டாலினா? எடப்பாடியாரா என்று தான் உள்ளது. அதிமுகவிற்கும் திமுகவிற்கும் தான் நேரடி போட்டி என்று தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

முதல்வர் ரிவ்யூ கூட்டம் நடத்தவில்லை; Reels தான் எடுத்துள்ளார்! - மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு

news

ஜெம் வீரமணி போக்சோ வழக்கு: சாந்தி மற்றும் கணவருக்கு ஜாமீன் வழங்க காவல்துறை எதிர்ப்பு

news

மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார் கலந்து கொண்ட விழாவில் மின்தடை

news

தென்தமிழ்த் தலையங்கம்: உலகம் இதற்கு முன்பு எதைப் பார்த்தெல்லாம் பயந்திருக்கிறது?

news

"2027 உலகக் கோப்பையே எனது கடைசி ஆட்டம்" – விராட் கோலி நெகிழ்ச்சி

news

இத்தாலியில் பள்ளி மாணவிகள் புர்கா அணிய தடை: அமைச்சரவை ஒப்புதல்

news

சினிமா படப்பிடிப்புக்கான அனுமதியை இனி ஆன்லைனில் பெறலாம்: தமிழக அரசு அறிவிப்பு

news

அப்பா மாதிரி நாமளும் ஆகணும்!

news

இரயில் சினேகம்.. ஒரு நிமிடக் கதை (21)

அதிகம் பார்க்கும் செய்திகள்