தமிழக சட்டமன்றத்தில் இன்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2026-27 ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, திமுக அரசை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில், இந்த பட்ஜெட்டில் கவர்ச்சிகரமான வார்த்தைகள் மட்டுமே உள்ளன. ஆனால் மக்களுக்குத் தேவையான உருப்படியான திட்டங்கள் ஏதுமில்லை. இது வெறும் வார்த்தை ஜாலமான பட்ஜெட்டாக இருக்கிறது. 2021 தேர்தலில் திமுக அளித்த வாக்குறுதிகளில் நான்கில் ஒரு பங்கைக்கூட (25%) இன்னும் நிறைவேற்றவில்லை. அந்த வாக்குறுதிகள் என்ன ஆனது என்பதற்கு இந்த பட்ஜெட்டிலும் பதில் இல்லை.

தமிழகத்தின் கடன் அளவு வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருகிறது. வரவுக்கும் செலவுக்கும் தொடர்பில்லாமல் நிர்வாகத் திறமையற்ற முறையில் நிதிநிலை அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. மக்களுக்குப் பயன் தரும் பெரிய திட்டங்கள் ஏதுமில்லாத இந்த பட்ஜெட், தாகத்திற்குத் தண்ணீர் கிடைக்காத கானல் நீர் போன்றது. அத்திப்பழம் வெளியே அழகாக இருக்கும். உற்றுப்பார்த்தால் தான் உள்ளே இருக்கும் சொத்தை தெரியும். அப்படி தான் உள்ளது இந்த நிதிநிலை அறிக்கை.
நிதிநிலைமையை சரி செய்ய ரகுராம் ராஜன் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. அதன்பின்னர் தான் கடன் தொகை அதிகரித்துள்ளது. மத்திய அரசை குற்றம் சாட்டும் நிதி அமைச்சர் மாநில அரசின் வருவாய் குறைந்தது பற்றி பேசவில்லை. வேளாண் பட்ஜெட் என்று விவசாயிகளை ஏமாற்றுகின்ற பட்ஜெட்டை போட்டு உள்ளார்கள் என்று தெரிவித்துள்ளார்.
387 வயசு இளமையான சென்னை.. எத்தனை எத்தனை சிறப்புகள்!
உதவியை உயர்ந்தவர்களுக்கு செய்வதை விட ஒருவரை உயர்த்துவதற்காக செய்!
"அன்னை மொழி அதுவே நம் விழி"
Motivational Short Story: சிற்றுயிர்களின் விழிப்புணர்வு மாநாடு
பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டது.. முதல்வர் விஜய் சட்டசபையில் அறிவிப்பு
Short Story: ருத்ர தாண்டவம்!
பாஜகவிலிருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் இணைகிறார் நடிகர் தேவன்: பரபரப்பு பேட்டி!
70 வயதிற்கு மேற்பட்ட நிர்வாகிகளுக்கு பதவி கிடையாது: திமுக தலைமை அதிரடி
Short Story: "யாரும்மா அது? ஞாயிற்றுக்கிழமைல!
{{comments.comment}}