சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் ராமதாஸ் தரப்பு பாமக எம்.எல்.எ அருள் சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், பாமகவின் சேலம் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அருள், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியை இன்று (பிப்ரவரி 17, 2026) நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். பாமகவின் இரு முக்கியத் தலைவர்களான மருத்துவர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே சில கருத்து வேறுபாடுகள் இருந்த நிலையில், ராமதாஸ் ஆதரவாளராக அறியப்படும் அருளின் இந்தச் சந்திப்பு மிகுந்த அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

தமிழக அரசியலில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பு எம்.எல்.ஏ அருள் நேரில் சந்தித்தது, தேர்தல் கூட்டணி தொடர்பான முக்கிய திருப்பமாக கருதப்படுகிறது. அன்புமணி தரப்பு அதிமுக கூட்டணியில் இணைந்த நிலையில், ராமதாஸ் தரப்பு பாமக தனியாக செயல்பட்டு வந்த சூழலில், இந்த திடீர் சந்திப்பு கூட்டணி முயற்சிகளை வலுப்படுத்துவதாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு மட்டுமே. தொகுதி வளர்ச்சிப் பணிகள் குறித்துப் பேசினேன் என்று அருள் தரப்பில் கூறப்பட்டாலும், தேர்தல் நேரத்தில் நடைபெறும் இத்தகைய சந்திப்புகள் கூட்டணி மாற்றத்திற்கான அச்சாரமாகவே பார்க்கப்படுகின்றன. இருப்பினும், ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகிய இரு தரப்பையும் ஒரே மேடையில் எடப்பாடி பழனிசாமி எப்படிச் கையாள்வார் என்பதே தற்போதைய எதிர்பார்ப்பாக பார்க்கப்படுகிறது. இதன்பின்னர் என்ன நடக்கும் என்பதனை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Thentamil Editorial: மனதை நேசிப்போம், நிம்மதியாய் வாழ்வோம்.. உலக மனநல நாள் பிரகடனம்
தனிமை
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக அமோக வெற்றி.. விஜய்யின் அடுத்த மூவ் என்ன?
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் முடிவுகள்...திமுக.,வுக்கு லாபமா.. நஷ்டமா?
3வது இடத்திற்கு தள்ளப்பட்ட அதிமுக.. கொங்கு மண்டலத்தில் செல்வாக்கை இழக்கும் இரட்டை இலை!
மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தலில்.. மொத்தமாக சரிந்து போன நாம் தமிழர் கட்சி!
Jo's quick Film review: "பத்தா".. மினிமம் 10 முறையாவது பார்க்க வேண்டும்!
2026 அமைதிக்கான நோபல் பரிசு: தமிழ் வம்சாவளி மனித உரிமை வழக்கறிஞர் நவநீதம் பிள்ளைக்கு அறிவிப்பு!
சமையல் With ஸ்வர்ணா.. கொங்கு நாட்டு பாரம்பரிய சந்தகை!
{{comments.comment}}