சென்னை: சட்டப்பேரவைத் தேர்தலுக்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள சென்னை வருகிறார் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார்.
இந்தியாவின் 26-வது தலைமை தேர்தல் ஆணையராகப் பொறுப்பேற்றுள்ள ஞானேஷ் குமார், தமிழகத் தேர்தல் முன்னேற்பாடுகளை நேரடியாக ஆய்வு செய்ய வரும் 26,27 ஆகிய தேதிகளில் சென்னை வருகிறார். அவருடன் தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சாந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோரும் வருகை தருகின்றனர்.
சென்னையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளைச் சந்தித்து, தேர்தல் சுமுகமாக நடைபெற அவர்களின் ஆலோசனைகள் மற்றும் புகார்களைக் கேட்டறிவார். மேலும், தமிழகத்தின் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனைக் கூட்டம் நடத்த உள்ளார். இதில் வாக்குச்சாவடி பாதுகாப்பு, பதற்றமான பகுதிகள் மற்றும் தேர்தல் நடத்தை விதிகள் குறித்து விவாதிக்கப்படும்.

அண்மையில் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் பெயர்கள் நீக்கம் மற்றும் சேர்ப்பு தொடர்பான புகார்கள் குறித்து அதிகாரிகளிடம் விளக்கம் கேட்பார். தேர்தல் ஆணையக் குழு நேற்று (பிப்ரவரி 17, 2026) மற்றும் இன்று அஸாம் மாநிலத்தில் ஆய்வுப் பணிகளை முடித்துள்ளது. இதனைத் தொடர்ந்து அடுத்த கட்டமாக தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்குப் பயணம் மேற்கொள்கின்றனர்.
இந்த ஆய்வுக் கூட்டங்களுக்குப் பிறகு, மார்ச் மாதத்தின் முதல் அல்லது இரண்டாம் வாரத்தில் தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ தேதிகள் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}