அகத்தி வேகாமல் கெட்டது முருங்கை வெந்து கெட்டது... உணவுப் பழக்கம் பழமொழி வடிவில்!

Feb 18, 2026,04:08 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


நாம் அன்றாடம் உண்ணும் உணவு மற்றும் உணவு சார்ந்த தமிழ் பழமொழிகள் நம் கலாச்சாரத்தில் உணவின் முக்கியத்துவத்தையும் அதன் அவசியத்தையும் உணர்த்துகின்றன.


பழமொழி வடிவில் இருக்கும் உணவு சார்ந்த பழமொழிகள் சிலவற்றினை பற்றி இன்றைய தலைப்பில் நாம் அறிந்து கொள்வோம்.


1. அகத்தி வேகாமல் கெட்டது முருங்கை வெந்து கெட்டது.




விளக்கம்:


அகத்திக்கீரை சமைக்கும் பொழுது நன்றாக வேக வைக்க வேண்டும். முருங்கைக்கீரை அதிகமாக வேக வைக்கக் கூடாது. இந்த முருங்கைக் கீரையும் அகத்திக் கீரையும் சரியான அளவில் வேக வேண்டும். உடலுக்கு தேவையான சக்தி கிடைப்பதோடு நன்றாக செரிமானம் ஆகும். அதனாலே தான் இரவில் கீரை உண்ணக்கூடாது. ஏனெனில்,அவை எளிதில் ஜீரணம் ஆகாது. இரவு உணவில் கீரை உட்கொள்வதை தவிர்ப்பது நல்லது. குழந்தைகளுக்கு கீரை உணவில் கொடுக்கும் பொழுது நன்றாக மசித்து கொடுப்பதனால்  எளிய முறையில் ஜீரணம் ஆகும்.


2. பித்தம் தணிக்க நெல்லிக்காய்.


விளக்கம்:


நமது உடல் வாதம், பித்தம் கபம் என எந்த தன்மையோடு இருந்தாலும் பெரிய நெல்லிக்காய் உட்கொள்வதனால் நம் உடலை சமன் செய்வதில் சிறந்த பங்கு வகிக்கும். பித்தம் அதிகமாகும் போது உடல் சூடு,அஜீரணம், மலம் கடினமான மாற்றம், அல்சர்,கோபம்,வாயில் உப்பு சுவை போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இவை அனைத்திற்கும் ஒரே உணவு ஆம்லா எனப்படும் பித்தம் தணிக்கும் நெல்லிக்கனி சிறந்த உணவாகும். நெல்லிக்கனி இயற்கையாகவே தண்ணீர் சத்து மற்றும் வைட்டமின் சி நிறைந்ததால் பித்தத்தை சமநிலைப்படுத்தும் தன்மை கொண்டது.

 எனவே கோடை காலம் ஆரம்பித்த நிலையில் அன்றாடம் ஒரு நெல்லிக்கனியை உணவில் சேர்த்துக் கொள்வது சிறந்தது.


3.வாய் துர்நாற்றம் தீர்க்க ஏலக்காய்.


விளக்கம்:


நம் சமையலறையில் அஞ்சரை பெட்டியில் முக்கிய இடம் வகிக்கும் ஏலக்காய் (எலாச்சி) என்றும் ஆங்கிலத்தில் கார்டமம் (cardamom) என்றும் அழைக்கப்படுகிறது. இதனை நறுமணத்தின் 'பொக்கிஷம் ' அழைப்பர்.இது வாசனைக்காக மட்டுமல்லாமல் நன்றாக செரிமானம் ஏற்படும்,வாய் துர்நாற்றம் போக்கும்.


நல்ல பசி உண்டாக்கும், ஜீரண உறுப்புகள் சீராக இயங்கும், நெஞ்சில் சளி கட்டி மூச்சு விட சிரமப்படுவர்களுக்கு, சளியால் இருமல் வந்து அடிக்கடி இருமி வயிற்று வலி வந்தவர்களுக்கும் ஏலக்காய் நல்ல மருந்தாக பயன்படுகிறது. ஏலக்காயில் உள்ள "வாலட் டைல் "எனும் எண்ணெய் தான் நறுமணத்தை தருகிறது. தொண்டை அழற்சி இருப்பவர்கள் ஏலக்காய் 2, லவங்கப்பட்டை தலா இரண்டு சேர்த்து கொதிக்க வைத்த தண்ணீரில் கொப்பளித்து வந்தால் தொண்டைக்கு இதமாக இருக்கும். காய்ச்சலால் ஏற்படும் தொண்டை கட்டு குணமடையும்.


4. உஷ்ணம் தவிர்க்க கம்பங் களி:


விளக்கம்:


'Pearl millet 'என்று அழைக்கப்படும் கம்பு நம் உடல் உஷ்ணத்தை தணித்து குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள நம் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இன்றைய காலங்களில் பெரும்பாலானோர் அன்றாட உணவில் சிறுதானியங்களை உணவில் சேர்த்து வருகின்றனர்.


கம்பு பல அத்தியாவசிய சத்துக்கள் நிறைந்த உணவு. இதனை  களியாக செய்து உணவில் சேர்த்து கொள்ள கெட்ட கொழுப்புகள் தங்குவதை தடுத்து,தசைகளுக்கு நல்ல இறு க்கம்  தந்து உடல் பலத்தை பெருக்கும். நோய் எதிர்ப்பு திறன் மேம்பட,பல நோய்களிலிருந்து காத்துக் கொள்ள, பல வேதிப்பொருள்களும், வைட்டமின்களும் நிறைந்த சத்தான உணவு ஆகும்.


பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் சமயங்களில் அடி வயிற்று வலியும் அதிக ரத்தப்போக்கும் இருக்கும் அந்த சமயத்தில் கம்மங்கூழ்  தயிர் அல்லது மோருடன் சேர்த்து உட்கொள்வது, உடல் உபாதைகளில் இருந்து   விடுபட உதவும்.


கம்பு உட்கொண்டால் அவர்களின் தோலில் சுருக்கங்கள் ஏற்படுவது தடுத்து, தோல் பளபளப்பை தரும். இளமை தோற்றம் தந்து முதுமை அடைவது தள்ளிப் போகும்.


முடி கொட்டாமல் இருக்க "கெரோட்டின் 'எனும் புரதம் அவசியம். இது கம்பில் அதிகமாக உள்ளது எனவே கம்பு உணவில் சேர்த்துக் கொள்ள முடி கொட்டும் பிரச்சனையும் தீரும்.


உடல் எடை குறைப்புக்கும் சிறந்த உணவு.


இவ்வாறு உணவே மருந்தாக,பழமொழி வாயிலாக நல்ல உணவு பழக்கத்தை பழமொழி வடிவில் நாம் அறிந்து கொண்டோம்.


மேலும் இது போன்ற சுவாரசியமான தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன். வரைந்து எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி பாலசுப்ரமணி.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழக தலைமை செயலாளர் முருகானந்தம், லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் டேவிட்சன் தேவாசீர்வாதம் மாற்றம்

news

Gpay Pocket Money: ஜிபே அறிமுகப்படுத்தியுள்ள பாக்கெட் மணி.. இது ஸ்கேம் அல்ல.. சூப்பரான ஸ்கீம்!

news

Sa No to Drugs: போதைக்கு நோ செல்லுங்க... இளைஞர்களுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அட்வைஸ்

news

திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம்: தனி நீதிபதியின் உத்தரவுகளுக்கு ஐகோர்ட் இடைக்காலத் தடை

news

மற்றவர்களுக்கு இது தேர்தல், நமக்கு இது எமோஷன் - நெல்லையில் அனல் பறக்கப் பேசிய விஜய்

news

Rathi's Kitchen: மறைந்தும் மறந்தும் போன பாரம்பரிய சத்தான சிறுபயறு குழம்பு.....!

news

நெல்லை, தூத்துக்குடியில் விஜய் ரோடுஷோ... தொண்டர்களால் தொடரும் விபத்துக்களால் பரபரப்பு

news

IPL 2026.. ஐபிஎல் டி20 கிரிக்கெட் 2026 : டெல்லி கேபிடல்ஸ்.. குஜராத் டைட்டன் அணிகள் இன்று மோதல்

news

Motivational Story: இன்றைய குழந்தைகள் நாளைய தலைவர்கள்

அதிகம் பார்க்கும் செய்திகள்