கன்னியாகுமரி: பாஜக என்கிற டப்பா எஞ்சினை நம்பி அதிமுக இருக்கிறது. அதிமுக என்கிற மூழ்கும் கப்பலை நம்பி பாஜக இருக்கிறது. பூஜ்ஜியமும் பூஜ்ஜியமும் சேர்ந்தால் பூஜ்ஜியம்தான், ராஜ்ஜியம் கிடைக்காது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் தமிழக அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் கலந்து கொண்ட முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், தமிழ்நாட்டை அனைத்து வகைகளிலும் தாழ்த்தி வீழ்த்த பாஜக நினைக்கிறது. வளர்ச்சி அடையக்கூடிய மாநிலங்களில் பாஜக இருக்காது. பாஜக இருந்தால் அங்கு வளர்ச்சி இருக்காது. அண்மையில் கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது, இந்தியா முழுக்க கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. மகாராஷ்டிரத்தில் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு ரத்து. மணிப்பூர் இன்றும் பற்றியெரிந்து கொண்டிருக்கிறது.

பீகாரில் பள்ளிகள் அருகே இறைச்சிக் கடைகள் இருந்தால், அகற்றுவோம் என்று மாநில துணை முதல்வர் பேசுகிறார். இப்படியொரு நிலைமையை தமிழ்நாட்டில் கட்டமைக்கத்தான் அவர்கள் தவியாய் தவிக்கின்றனர். ஆனால், நமது திராவிட மாடல் அரசில் மத நல்லிணக்கமும் ஒற்றுமையும் பேணப்படுகிறது.
பாஜகவினர்களுக்கு கிடைத்த சரியான ஆள்தான் எடப்பாடி பழனிசாமி. ஒருவர் நாட்டு மக்கள் எல்லோருக்கும் ரூ. 15 லட்சம் தருவதாக வடை சுட்ட மாதிரி, பழனிசாமியும் இப்போது வகைவகையாக வடை சுடுகிறார். இந்த வடைகளையெல்லாம் மக்கள் நம்பத் தயாராக இல்லை. பாஜக டப்பா என்ஜினை நம்பி அதிமுக இருக்கிறது; அதிமுக என்கிற மூழ்குகிற கப்பலை நம்பி பாஜக இருக்கிறது. பூஜ்ஜியமும் பூஜ்ஜியமும் சேர்ந்தால், பூஜ்ஜியம்தான். ராஜ்ஜியம் கிடைக்காது.
இந்த ஆட்சியில் வரலாற்றிலேயே இல்லாத எண்ணிக்கையாக 4,000 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு செய்துள்ளோம். வக்ஃபு திருத்தச் சட்டம், சிஏஏ-வுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். இங்கு சிறுபான்மையினர் பாதுகாப்பாக உள்ளனர்; பெரும்பான்மையினர் சகோதரத்துவத்துடன் இருக்கின்றனர். அனைவரும் சமமாக நடத்தப்படுகின்றனர்.
பாஜகவிடம் வெளிப்படையாகவே கேட்கிறேன். நீங்கள் எப்போதுதான் வன்முறையை விட்டுவிட்டு வளர்ச்சியைப் பற்றி பேசுவீர்கள்? எப்போது வெறுப்பையும் பிரிவினையையும் விதைப்பதை நிறுத்திவிட்டு, தமிழ்நாட்டுக்கான நல்ல விஷயங்களை பேசுவீர்கள்? தமிழ்நாட்டைக் குறைசொல்லிப் பேசுவதற்கு உங்களுக்குத் தகுதி இருக்கிறதா? நீங்கள் ஆளக்கூடிய எந்த மாநிலம், தமிழ்நாட்டைவிட சிறப்பாக ஆளப்படுகிறது? என்று கேள்வி எழுப்பியுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
ஸ்கூல் பெஞ்ச்.. என் ஸ்கூல் அனுபவங்கள் (பார்ட் 1)
விண்வெளியில் இந்தியாவின் வரலாற்று சாதனை.. புவி கண்காணிப்பு செயற்கைக் கோளை செலுத்தியது
CJP in Crisis: காக்ரோச் ஜனதாக் கட்சியில் திடீர் பிளவு.. புதிய அமைப்பு பிறந்தது!
அரசு பள்ளி மாணவர்களுக்கு கணினி கல்வி மறுக்கப்படுகிறதா?.. 60,000 கணினி ஆசிரியர் குடும்பங்கள் கேள்வி
வானொலியுடன் என்றும் இணைந்து இருங்கள்: மாணவர்களுக்கு அறிவிப்பாளர் வேல்முருகன் அறிவுரை
It's Okay mean, It's not Okay. But it's Okay
செல்வமா? செல்வாக்கா?
"கதிரவனாய் இருக்கிறாய் மெழுகுவர்த்தியாய் தியாகம் செய்கிறாய்!"
கொட்டுகிற மழையினிலே குடையின்றி நடந்து வந்தேன் !
{{comments.comment}}