வானம் அருளும் மழைத்துளியே!
Nov 19, 2025,11:08 AM IST
- ஞா.சொர்ணதீபம்
பூமி பசுமை போர்த்திடுமே
பூவுலக வாழ்வு உயர்ந்திடுமே,
பறவைகள் பாடி பறந்திடுமே
விலங்குகள் யாவும் மகிழ்ந்திடுமே
விவசாயம் வளமாய் பெருகிடுமே
விவசாயி வாழ்வும் உயர்ந்திடுமே
விளைபொருள் பொங்கிப் பெருகிடுமே
மானிடர் வயிறு நிறைந்திடுமே
விண்ணின் பரிசாய் வந்திடவே
மண்ணின் மகிழ்ச்சி நிறைந்திடவே
உலகம் செழிக்க
செய்திடுமே