Sripirya Short story: முதலில் படிப்பு, பின்பு திருமணம்!

Su.tha Arivalagan
Apr 09, 2026,01:00 PM IST

ச. ஸ்ரீபிரியா


என் தோழி பள்ளியில் முதல் வரிசை மாணவி. ஆசிரியர்கள் பாராட்டும் கணக்கு, அறிவியல் மதிப்பெண்கள், வீட்டுப்பாடம் முடித்து நேரத்துக்கு படுக்கும் பழக்கம்.எல்லாம் ஒழுங்காய் இருந்தது. கல்லூரி சேர்ந்த முதல் மாதமே வகுப்பில் பழகிய ஒரு மாணவனைக் காதலித்து, பெற்றோரிடம் சொல்லாமல் திருமணம் செய்துகொண்டாள். வீட்டில் பெரும் எதிர்ப்பு; இருவரும் தனியாக வாழத் தொடங்கினர்.


பணம் இல்லை, நிலை இல்லை, குடும்ப ஆதரவு இல்லை. குழந்தைகள் பிறந்தன; "இப்போதாவது அப்பா,அம்மா ஏற்பார்கள்" என நினைத்தது வீணாயிற்று. மூன்று ஆண்டுகள் கடந்து, அவள் தந்தை வந்தார். கோபத்தை விழுங்கி, "மேற்படிப்பை முடி" என்றார். 


தோழி மீண்டும் புத்தகங்களை எடுத்தாள், தவறை உணர்ந்தாள். தந்தை அவளுக்கு வேலை அமைத்துக் கொடுத்தார்; கணவனுக்கும் தொழில் வாய்ப்பு கிடைத்தது. கஷ்டம் குறைந்தது; ஆனால் இழந்த ஆண்டுகள் மனதில் நின்றன.




பின்னாளில் அவள் சொல்வாள்: "படிப்பு முடித்து, வேலை கிடைத்து, பெற்றோர் சம்மதத்தோடு மணம் செய்திருந்தால் வாழ்க்கை சொர்க்கமாய் இருந்திருக்கும். தான்தேடிய வேகம் சிலருக்கு மட்டும் இனிக்கும்; பலருக்கு அது பெரும் விலை."


இதிலிருந்து தெளிவாகிறது. படிக்கும் வயதில், குறிப்பாக பெண் கல்வி, உயிர்நாடி. படித்து வேலையில் நின்று, சொந்தக் காலில் உறுதியாக நின்றபின், பெற்றோர் சம்மதத்தோடு வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தால் அது நிலைக்கும். கல்வியே விடுதலை; அதுவே பெண்ணுக்கு கவசம், வாழ்வின் வெளிச்சம்.