சும்மா இருக்கும் மனம் தெய்வீகத்தின் பட்டறை/பணியிடம்
- மைத்ரேயி நிரஞ்சனா
சும்மா இருக்கும் மனம் பிசாசுகளின் பட்டறை என்று தான் பழமொழி நமக்கு சொல்லப்பட்டிருக்கிறது.. இந்த அறிவுரைகள் நாம் குழந்தையாக இருக்கும்போது இருந்து ஆரம்பித்து விடுகிறது.. ஒரு குழந்தை சும்மா இருக்கும்போது அது தன் இயல்பான நிலையில் (Natural State) இருக்கிறது.. அப்போதுதான் அந்த குழந்தையின் கற்பனை திறனும் படைப்பாற்றலும் முழுமையாக இருக்கும்.. அதை நாம் அனுமதிப்பதில்லை.. அடுத்து என்ன செய்ய வேண்டும்.. என்ன முயற்சிகள் எடுக்க வேண்டும்.. என்ன சாதிக்க வேண்டும் என்று பலவிதத்திலும் அறிவுரை கூறப்படுகிறது..
சும்மா இருத்தல் என்பது சோம்பேறியாக இருப்பதல்ல.. சோம்பேறியாக இருத்தல் என்பது இந்த ஷணத்தில் இருக்கும் வேலைகளை தட்டி கழிப்பது.. ஆனால் சும்மா இருத்தல் என்பது அதுவல்ல.. அது நம்முடைய ஆதார மூலத்துடன் இணைப்பில் இருப்பது.. (To be connected with our source/ center).. இயக்கங்களும் செயல்பாடுகளும் தேவைதான்.. ஆனால் எப்போதுமே பிசியாக இருப்பது எப்போதுமே இயக்கத்தில் இருப்பது.. நம்மை நம்முடைய மூலத்துடன் உள்ள தொடர்பை துண்டித்து விடும்.. (disconnect from our source) எப்போதும் பிஸியாக இருப்பதை ஆக்கம் என்று கூறுவதற்கில்லை.. அது Life ல் இருந்து நம்மை Distract செய்யும் விஷயமாக இருக்கிறது.
நாம் இயற்கையை கூர்ந்து கவனித்தோமானால்.. சும்மா இருத்தல் (Stillness) மற்றும் இயக்கம் இயற்கையின் இயல்பான தாளத்திற்கு ஏற்ப ( Lifes own rhythm) நடந்து கொண்டிருக்கிறது..
பூக்கள் தானாகவே மலர்கின்றது.. அதுவரை சும்மா இருப்பது போல் தோன்றும்.. மலரை நாம் கட்டுப்படுத்தி மலர வைக்க முடியாது.. மரங்களும் எப்போது இலைகள் வரவேண்டுமோ அப்போது இலைகள் வரும் எப்போது உதிர வேண்டுமா அப்போது உதிரும்.. (Music is with pauses) வாழ்க்கையும் சங்கீதத்தைப் போன்றது.. Without pauses, music is not music.. அமைதியான மனம் (Unoccupied mind) தெளிவான ஓடை போன்றது.. நமக்கு தீர்வுகள் வேண்டி.. மூளையை கசக்கி விட்டுக் கொண்டே இருந்தோம் ஆனால் நமக்கு தீர்வு கிடைப்பதில்லை.. நாமே உணர்ந்திருப்போம்.. நாம் ஷவரில் குளிக்கும் போதோ.. இலக்கில்லாமல் நடந்து கொண்டிருக்கும்போது.. திடீரென்று யோசனைகள் வரும்.. பல விஞ்ஞானிகளும் கலைஞர்களும் கூறுவது இதைத்தான்!
ஒரு சிறிய கதையை பார்ப்போமா?
காஷ்முஷ் அப்போது ஒரு ஞானியிடம் சிஷ்யராக இருந்தார்.. அவர்கள் இருவரும் ஒரு சொற்பொழிவிற்காக அடுத்த ஊருக்கு நடந்து செல்லும் போது .. ஞானிக்கு தாகம் எடுத்தது.. காஷ்முஷ் இடம் அருகில் ஓடை ஓடும் சத்தம் கேட்கிறது.. நான் இங்கு மரத்தடியில் ஓய்வு எடுக்கிறேன்.. நீ போய் தண்ணீர் கொண்டு வா என்று ஞானி கூறினார்.. காஷ்முஷ் தன்னிடம் உள்ள ஒரு கலயத்தை எடுத்துக் கொண்டு ஓடத்திற்கு சென்றார்.. அப்போதுதான் இரு சிறுவர்கள் அங்கு குளித்துவிட்டு கிளம்பினர்.. தண்ணீர் ஒரே கலங்கலாக இருந்தது.. இவரும் கலயத்தை விட்டு தண்ணீர் எடுக்க முயன்றார்.. தண்ணீர் ஒரே கலங்கலாகவே வந்தது.. எவ்வளவு முறை முயற்சித்தும் அதே போலவே இருந்தது.. ஞானியிடம் சென்று கூற.. ஞானி நீ சிறிது நேரம் அமைதியாக உட்கார்.. ஒரு பத்து நிமிடம் கழித்து இப்போது போய் எடுத்துக் கொண்டு வா என்று கூற இப்போது ஓடை மிகத் தெளிவாக இருந்தது.. இப்போது தண்ணீர் எடுத்துக்கொண்டு வந்தார்..
இது என்ன பிரமாதம்? என்று தானே நமக்கு தோன்றும்? ஆனால் நாம் இதே தான் செய்து கொண்டிருக்கிறோம்.. நம்முடைய மனம்(Mind) இந்த ஓடையை போன்றது.. நம் உறவு முறைகளில் கூட ஒருவரை நம் விருப்பப்படி மாற்றி விட வேண்டும் என்று எவ்வளவு முயற்சிக்கிறோம்.. அந்தக் கண்ட்ரோல் .. குறுக்கீடு (Interference) இல்லாவிட்டால் அந்த ஓடை போல தானாகவே ( Natural rhythm) சரியான சூழ்நிலை வாய்க்க பெறும்..
சும்மா இருத்தலில்.. நம் படைப்பாற்றலும்.. இயக்கமும் வாழ்க்கையின் இயல்பான தாள லயத்திற்கு(Life has its own rhythm) ஏற்றார்போல் Graceful ஆக நடக்கும்.. சும்மா இருத்தல் என்பது யோசித்துக் கொண்டே இருப்பதல்ல.. மொபைலில் youtube Shorts பார்த்துக் கொண்டே இருப்பதும் அல்ல.. இலக்கில்லாமல் அடுத்து என்ன என்ற எல்லா சிந்தனையும் விடுத்து சும்மா இருத்தல்..
சும்மா இருக்க பழகுவோம்…
நாம் தொடர்வோம்
மைத்ரேயி நிரஞ்சனா.. எழுத்தாளர், பேச்சாளர் என பன்முகத் திறமையாளராக வலம் வருகிறார். இல்லத்தரசி என்ற நிலையிலும் சிறந்து விளங்குபவர். மதுரையில் பிறந்தவர், சேலத்தில் வசிப்பவர். அடிப்படையில் ஒரு பொறியாளர். கடந்த 15 வருடமாக ஆன்மீகம் மற்றும் தியானத்தில் அதிக ஈடுபாடு. ஒரே மனித குலம் அமைய வேண்டும் என்ற கனவுடன் வலம் வருபவர். ஆன்மிகம் மட்டுமே மனிதகுலத்தை பயமற்ற, போட்டியில்லாத புதிய உலகிற்கு அழைத்துச் செல்லும், அங்கு பணம் மற்றும் போட்டிக்குப் பதிலாக அன்பு மட்டுமே அடிப்படையாக இருக்கும். பொறுப்புடன் கூடிய சுதந்திரமே புதிய மதமாக இருக்க வேண்டும் என்பதில் நம்பிக்கை கொண்டவர்.