இந்த பிரபஞ்சம் நீயே (You are the Universe )

Oct 23, 2025,10:42 AM IST

- மைத்ரேயி நிரஞ்சனா


நம் விரல்களைப் பார்த்தோமானால், தனித்தனியாக ஐந்து விரல்கள் உள்ளது என்று பார்ப்போம். ஆனால் அது உள்ளங்கையுடன் இணைந்து இருக்கிறது.. உள்ளங்கை கையுடன் இணைந்து இருக்கிறது.. கை தோளுடன் இணைந்து இருக்கிறது தோள் உடல் பாகமாக இருக்கிறது..


இப்படி எல்லாமே இணைந்து இருக்கும்போது.. இந்த உடல் மட்டும் தனியாகவா இருக்கிறது? 


இந்த மண்ணில் விளையும் பொருட்களையும் தண்ணீரையும் சாப்பிட்டு இது வளர்ந்து இருக்கிறது.. நெருப்பும் காற்று இந்த வெளியும் இதன் அங்கமாக இருக்கிறது.. இந்தப் பிரபஞ்சத்திலிருந்து நான் என்று பிரித்துக் கொள்வது இந்த நினைப்பு (Mind)  மட்டுமே இல்லையா? 




நான்.. எனது.. என்னுடையது என்று பிரித்துக் கொள்வது.. பிடித்துக் கொள்வது.. இந்த நினைப்பு மட்டுமே தான்.. இந்த பிரபஞ்சத்தில் பிரிவு என்பதே இல்லை.. இந்த பூமியை கூறு போட்டு பிரித்துக் கொண்டோம்.. நாடுகள் என்றும் மாநிலங்கள் என்றும் என் வீடு என்றும் பிரித்துக் கொண்டோம்.. இது எல்லாம் ஒரு வசதிக்காக மட்டுமே அன்றி இதில் உண்மை இல்லை.. மனிதர்களையும் தரம் பார்த்து பிரித்துக் கொள்கிறோம்.. எல்லா உயிர்களும் சமம்.. அத்தோடு இந்த பிரபஞ்சத்தில் இருக்கும் அனைத்தும் இந்த பிரபஞ்சத்தின் வெளிப்பாடே..(Function and Expressions of Universe).


இந்த பிரிவினைகளை சீரியசாக எடுத்துக் கொள்வதால், நாம் பல விதங்களில் அவதிப்படுகிறோம்.. இது உண்மையா இல்லையா சிந்தித்துப் பார்க்க வேண்டிய விஷயம்..


ஒரு சிறிய கதையை பார்ப்போமா? 


காஷ்முஷ் ஒரு ஞானியாக அப்போது இருந்தார்.. அந்த ஊர் ராஜா அவரை அவைக்கு அழைத்து மரியாதை செய்ய .. அழைத்து வர சொல்லி தன்னுடைய மந்திரியை அனுப்பினார்.. மந்திரியும் காஷ்முஷ் வீட்டிற்கு சென்று அவரை அழைத்தார்.. காஷ்முஷ் சொன்னார் அவைக்கு வருகிறேன்.. ஆனால் காஷ்முஷ் என்று எவரும் இங்கு இல்லை என்று கூறினார்.. மந்திரிக்கு ஒன்றுமே புரியவில்லை.. ஆனாலும் அரசரிடம் சென்று விஷயத்தை கூறினார்.


அரசர் ஒரு தேரை அனுப்பினார்.. காஷ்முஷ் அவைக்கு வந்து சேர்ந்தார்.. திரும்பவும் அரசரிடம் காஷ்முஷ் என்ற எவரும் இல்லை என்று கூற அரசர் நீங்கள் தானே.. அது நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரியவில்லை என்று கூறினார்..

இப்போது காஷ்முஷ் அரசரிடம் அதுவா உன்னுடைய தேர் என்று கேட்டார்..  பிறகு அதில் இருக்கும் சக்கரங்களை எடுக்க சொன்னார்.. இந்த சக்கரமா உன்னுடைய தேர் என்று கேட்டார்.. அரசரும் இல்லை என்று கூற அதில் இருக்கும் குதிரைகளை எடுக்க சொன்னார். அதுவா தேர் என்று கேட்டார்.. அரசர் இல்லை என்று கூற தேரின் ஒவ்வொரு பாகமாக எடுத்து விட்டு இதுவா இதுவா என்று கேட்க அரசரும் இல்லை இல்லை என்று கூறிக் கொண்டே வந்தார்.. எல்லாமே ஒவ்வொன்றாக எடுத்த பிறகு அதில் ஒன்றுமே இல்லை..  தேர் எங்கு போனது.. Nothing Remained ..


அரசருக்கு மெதுவாக விளங்கியது.. தேர் ஒரு அசெம்பிளி.. நிறைய பொருட்களை சேர்த்து அது உருவாக்கப்பட்டிருக்கிறது.. நான் என்பதும் அப்படித்தான்.. நீ என்பதும் அப்படித்தான்.. நீ உள்முகமாக தேடிப் பார்த்தால் அந்த நான் என்பது எங்கேயுமே இல்லை என்பதை அறிவது.. இந்த தேரை போல நான் என்பதும் பலவற்றின் தொகுப்பு..(Manifestation of many energies) இந்த நான் என்பதையும் ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்தோமானால் கடைசியில் இருப்பது ஒன்றுமே இல்லை..(Nothingness will remain) இந்த ஒன்றுமே இல்லாத தன்மை  தான் கடவுள் தன்மை.. இந்த ஒன்றுமே இல்லாத தன்மையில் இருந்துதான் அன்பு பிறக்கிறது.. இந்த அன்புக்கு பிரித்து பார்க்கும் தன்மை இல்லை..(This is the Love of the Universe)


Nothingness is NOT Nothing.. It's Whole and Universal..


நாம் தொடர்வோம்..


மைத்ரேயி நிரஞ்சனா.. எழுத்தாளர், பேச்சாளர் என பன்முகத் திறமையாளராக வலம் வருகிறார். இல்லத்தரசி என்ற நிலையிலும் சிறந்து விளங்குபவர். மதுரையில் பிறந்தவர், சேலத்தில் வசிப்பவர். அடிப்படையில் ஒரு பொறியாளர். கடந்த 15 வருடமாக ஆன்மீகம் மற்றும் தியானத்தில் அதிக ஈடுபாடு. ஒரே மனித குலம் அமைய வேண்டும் என்ற கனவுடன் வலம் வருபவர்.  ஆன்மிகம் மட்டுமே மனிதகுலத்தை பயமற்ற, போட்டியில்லாத புதிய உலகிற்கு அழைத்துச் செல்லும், அங்கு பணம் மற்றும் போட்டிக்குப் பதிலாக அன்பு மட்டுமே அடிப்படையாக இருக்கும். பொறுப்புடன் கூடிய சுதந்திரமே புதிய மதமாக இருக்க வேண்டும் என்பதில் நம்பிக்கை கொண்டவர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த திமுக முன்வர வேண்டும்: அன்புமணி ராமதாஸ்!

news

பிரபல பின்னணி பாடகரும், தேவாவின் சகோதருமான சபேஷ் காலமானார்

news

கொடிது கொடிது இளமையில் வறுமை!

news

இலந்தை பழப் பாட்டி (குட்டிக் கதை)

news

தொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை... இன்றைக்கு எவ்வளவு குறைவு தெரியுமா?

news

நீரில் மூழ்கிய நெற்பயிர்களுக்கு உடனடி நிவாரணம் வேண்டும்: நயினார் நாகேந்திரன்

news

அண்ணன் எங்க அண்ணன்.. கல்வி மாபெரும் ஆயதம்.. அதுவே உயர்த்தும்.. இது ஒரு உண்மைக் கதை!

news

பால் காவடி பன்னீர் காவடி புஷ்பக் காவடி.. முருகப்பெருமானுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?

news

இந்த பிரபஞ்சம் நீயே (You are the Universe )

அதிகம் பார்க்கும் செய்திகள்