- மைத்ரேயி நிரஞ்சனா
சமுதாயம் ஆன்மிகத்திற்கு எதிரானது என்றால் அதை நம்புவதற்கு கடினமாக இருக்கிறது இல்லையா?
ஆன்மீகம் என்பது கோயிலுக்கு சென்று வழிபாடு பூஜைகள் நடத்துவது என்பதல்ல.. ஆன்மீகம் தனிப்பட்ட மனிதனை உருவாக்குகிறது.. தனிப்பட்ட மனிதன் என்பவன் தன்னுடைய உள்ளுணர்வை (Intuition)கவனித்து வாழ ஆரம்பிக்கிறான்..
சமுதாயம் என்பது ஒரு கட்டுக்கோப்பான அமைப்பு.. விதிகளும் கட்டுப்பாடுகளும், எப்படி வாழ வேண்டும்.. எப்படி இருக்க வேண்டும் என்று பல கட்டுப்பாடுகள் உள்ள வலை பின்னல் (Network). தனி மனிதனால் (Individual) இந்த கட்டுக்கோப்புக்குள் வர இயலாது.. ஆனால் அவனால் சமுதாயத்திற்கு ஒரு தொந்தரவும் கிடையாது.. அவன் சமுதாயத்தில் வாழ்ந்தாலும் சமுதாயத்தை விட்டு விலகி வாழ்கிறான். ஏனெனில் சமுதாயம் பணம் பதவி மரியாதை(Status) குறிக்கோள்(Goals) என்பதற்கு மட்டுமே மதிப்பு கொடுக்க பழகி இருக்கிறது. சமுதாயம் என்பது ஒரு வலை என்றாலும் அந்த வலைக்குள் இருப்பவர்கள் சமுதாயத்தை உருவாக்குபவர்களாக இருக்கிறார்கள்... அவர்களால் தனி மனிதர்களை புரிந்து கொள்ள முடிவதில்லை.. அதனால் அவனை முட்டாள் என்று ஒதுக்கி வைக்கிறது.. ஆனால் அதைப் பற்றி கூட தனி மனிதனுக்கு கவலை கிடையாது..
சமுதாயம் தனி மனிதர்களை அனுமதிப்பதில்லை..

தனி மனிதனாய் இருப்பது.. சமுதாயத்தை விட்டு ஒதுங்கி இருப்பது.. என்பது இந்த சமுதாய வலை பின்னலை அடிப்படையில் குலைக்கும் வல்லமை உடையது.. அப்படிப்பட்ட தனி மனிதர்களால் தான் இந்த உலகம் .. முழுவதும் பித்து பிடித்து போகாமல் இருக்கிறது என்றால் மிகையாகாது.. (They are the light )
அவர்கள் தங்களுக்குள் நிறைத் தன்மையுடன்(Contented) இருக்கிறார்கள்.. அவர்கள் மனத்திருப்தியுடன் அமைதியாக அமைதியுடன் வாழ்கிறார்கள்.. அவர்களுக்கு இன்று எந்த குறிக்கோளும் கிடையாது.. (What's the purpose of Life? Life itself is the purpose) இப்படி வாழும் வாழ்க்கை சுதந்திர வாழ்க்கை.. சுதந்திரம் (முக்தி)என்பது நாளையோ சாவிலோ கிடைக்கும் விஷயமல்ல.. இந்த க்ஷணத்தில் தான் உள்ளது.. இது உணரும் விஷயம்..
இரண்டு நாள் பேசாமல் அமைதியாக இருந்தது நாம் பிறந்ததிலிருந்து இன்று வரை.. நமக்கு என்ன எல்லாம் சொல்லப்பட்டிருக்கிறது.. இதில் ஏதாவது உண்மை இருக்கிறதா என்று பார்த்தோமானால்.. இந்த சமுதாய வலை பின்னல் என்ற அமைப்பை தெளிவாக பார்க்க முடியும்.. அந்த புரிதல் நம்மை தனி மனிதனாய் ஆக்குவதற்கான ஆரம்பம். அது புரிந்து விட்டால்.. அந்த வலை பின்னலுக்குள் நம்மால் திரும்பிச் செல்ல முடியாது..(Once seen it cannot be unseen.. Right?)
நாம் தொடர்வோம்
மைத்ரேயி நிரஞ்சனா.. எழுத்தாளர், பேச்சாளர் என பன்முகத் திறமையாளராக வலம் வருகிறார். இல்லத்தரசி என்ற நிலையிலும் சிறந்து விளங்குபவர். மதுரையில் பிறந்தவர், சேலத்தில் வசிப்பவர். அடிப்படையில் ஒரு பொறியாளர். கடந்த 15 வருடமாக ஆன்மீகம் மற்றும் தியானத்தில் அதிக ஈடுபாடு. ஒரே மனித குலம் அமைய வேண்டும் என்ற கனவுடன் வலம் வருபவர். ஆன்மிகம் மட்டுமே மனிதகுலத்தை பயமற்ற, போட்டியில்லாத புதிய உலகிற்கு அழைத்துச் செல்லும், அங்கு பணம் மற்றும் போட்டிக்குப் பதிலாக அன்பு மட்டுமே அடிப்படையாக இருக்கும். பொறுப்புடன் கூடிய சுதந்திரமே புதிய மதமாக இருக்க வேண்டும் என்பதில் நம்பிக்கை கொண்டவர்.
தமிழ்நாடு தலைகுனியாது.. 234 தொகுதிகளிலும்.. பிரச்சாரத்தைத் தொடங்கும் திமுக
விஜய்யின் நிலைப்பாடு என்ன என புரியவில்லை... செங்கோட்டையன் விவகாரம் குறித்து டிடிவி தினகரன் விளக்கம்
ஜனநாயகன் பட வழக்கை மீண்டும் தனி நீதிபதி விசாரிக்க சென்னை ஹைகோர்ட் உத்தரவு
திமுக - அதிமுக ஜல்லிக்கட்டு.. எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட 2 முக்கிய அறிவிப்புகள்!
கல்விக்கடன் தள்ளுபடி வாக்குறுதி என்ன ஆனது? திமுக அரசிற்கு ராமதாஸ் கேள்வி!
மதுரையிலிருந்து ஏன் என்னை வம்புக்கு இழுக்கிறீர்கள்.. எம்.எல்.ஏ தளபதிக்கு ஜோதிமணி கேள்வி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
சென்னை விமான நிலையத்தில் திடீர் தீ விபத்து: பயணிகள் அலறியடித்து ஓட்டம்!
மக்கள் பாதுகாப்பைப் பறிக்கும் திமுக அரசின் முடிவுகாலம் வெகு தொலைவிலில்லை: நயினார் நாகேந்திரன்
{{comments.comment}}