- மைத்ரேயி நிரஞ்சனா
இந்த வார்த்தைகள் ஒரே பொருள் உடைய ஒத்த வார்த்தைகள் என்று சொன்னால் மிகை ஆகாது.. Love, Respect and Freedom Are Synonymous..
அது எப்படி என்று தானே கேட்கத் தோன்றுகிறது? நிபந்தனையற்ற அன்பு (Unconditional Love) இந்த வார்த்தையை கேட்கும் போதே அவ்வளவு இனிமையாக உணர முடியும்.. அன்பு என்றாலே நிபந்தனை அற்றது..
இந்த அன்பை பொதுவாக பெற்றோர் குழந்தைகள் மீது வைக்கும் அன்பை சொல்லலாம்.. அதுவே குழந்தைகள் பெரியவர்கள் ஆன பிறகு பெற்றோருக்கு அதேபோல அன்பு நிலைக்குமா என்பது சந்தேகமே! அக்கறை என்ற பெயரில் குழந்தைகளை (Adults) தன் போக்கிலேயே நடக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிற பெற்றோர்களின் கட்டுப்பாட்டினை அன்பு என்று கூற முடியுமா? பறவை தன் குஞ்சுகளை அது தனியாக செயல்படும் வரை பாதுகாத்து வளர்க்கும்.. அதன் பிறகு குஞ்சுகளை பறந்து செல்ல அனுமதிக்கும்!
எங்கு நிபந்தனைகளும் கட்டுப்பாடுகளும் இருக்கின்றனவோ அதை அன்பு என்று கூறுவதற்கு இல்லை.. அது எப்படி?
கட்டுப்பாடு இல்லாமல் போனால் மனிதன் தாறுமாறாகி விடுவான் என்று நமக்குள்ளே பயம்.. எங்கே கட்டுப்பாடு இருக்கிறதோ அங்கே புத்திசாலித்தனம் மலர்வதற்கு வாய்ப்பில்லை.. நமது தேவை இல்லாத பயம் நாம் மிகவும் அன்பு செலுத்துகிறோம் என்று நினைக்கும் உறவு முறைகளில் அதிகமாக கட்டுப்படுத்த வைக்கிறது.. (Intelligence flowers when there is No Control)
இதை உணர்ந்த மனிதன் மற்றவர்களை கட்டுப்படுத்துவதில்லை.. தன்னையும் கட்டுப்படுத்த அனுமதிப்பதில்லை..
மரியாதை என்பது நாம் பணத்திற்கும் ஸ்டேட்டஸ் க்கும் மட்டுமே தான் கொடுக்கிறோமோ இல்லை ஒரு மனிதனை மனிதனாக மதிக்கிறோமா? இதை நமக்கு நாமே கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி..
ஒரு மனிதனைப் பற்றிய அபிப்ராயங்களை மற்றும் பழைய அனுபவங்களை நமக்குள்ளே வைத்துக் கொண்டு ஒரு மனிதனை பார்த்தால் அவன் இப்போது எப்படி இருக்கிறான் என்று நம்மால் பார்க்க முடிவதில்லை.. இந்த மூட்டை கட்டி வைத்துக் கொள்ளுதல் என்பது மனிதனிடம் மட்டுமே உள்ள குணம்.. அந்த மூட்டைகள் நம்முடைய பார்வையை (Present is the only time) இப்போது என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை பார்க்க முடியாதவாறு மறைக்கும் திரைகளாக செயல்படுகின்றன.. அது நம்முடைய குறையே.. இதை நமக்கு நாமே பார்க்கும்போது தான் நம் உண்மையான தன்மையை உணர்வது சாத்தியம்.. பார்த்தல் மட்டுமே போதுமானதாக இருக்கிறது.. (Seeing is the only action that can transform us)
அன்பு என்பது இந்த க்ஷணத்தில் வாழ்வது.. இந்த க்ஷனத்தில் எது தேவையோ அதை செய்வோம்.. அதற்காக எது நடந்தாலும் மறு கன்னத்தை காண்பிப்போம் என்று அர்த்தம் இல்லை.. இந்த க்ஷணத்தில் சண்டை போட வேண்டியிருந்தால் போடுவோம்.. இயேசு கூட அவர் காலத்தில் சிலரை அடித்ததாக நான் படித்திருக்கிறேன்.. அவர்கள் பொழுது போகாமல் கோயிலில் வைத்து சீட்டாடிக் கொண்டிருந்ததாகவும்.. இயேசு சிலமுறை அவர்களிடம் சொல்லிப் பார்த்து ஒன்றும் நடக்கவில்லை ஆதலால் அவர்களை கட்டையை வைத்து அடித்ததாக படித்திருக்கிறேன்..
ஒரு சிறு கதையை பார்ப்போமா..?
காஷ்முஷ் ஒரு ஞானியிடம் (Zen Master) சீடராக இருந்தார்.. அந்த ஞானி வயோதிகத்தால் இறக்கும் தருவாயில் இருந்தார். அவரை சுற்றி அவரது சீடர்கள் அமர்ந்திருந்தனர்.. அப்போது காஷ்முஷ் வேகமாக மார்க்கெட்டுக்கு ஓட ஆரம்பித்தார்.. அவரது வழியில் பார்த்த சிலர் உனது குரு மரணப்படுக்கையில் இருக்கும் போது நீ எங்கே செல்கிறாய் என்று கேட்க.. எனது குருவிற்கு பிடித்த ஒரு வகை கேக் வாங்க செல்கிறேன் என்று கூறினார்.. பல இடங்களில் அலைந்து கேக்கை வாங்கி திரும்பும்போது சாயங்காலம் ஆகிவிட்டது..
அந்த ஞானியும் ஏதோ எதிர்பார்ப்பதை போல அப்பப்போ கண் திறந்து திரும்ப மூடி கொண்டிருந்தார்.. காஷ்முஷ் வந்தவுடன் எங்கே கேக் என்று கேட்க… கொடுத்தவுடன் அதை வாங்கி மகிழ்ச்சியாக சாப்பிட ஆரம்பித்தார்..
அப்போது அவரை சுற்றி இருந்த சீடர்கள் நீங்கள் போகும் முன் என்ன மெசேஜ் சொல்ல விரும்புகிறீர்கள் என்று கேட்க..
“ஆஹா! ஆஹா! இந்த கேக் எவ்வளவு ருசியாக இருக்கிறது.. “ என்று ஆனந்தமாக கூறிக்கொண்டே இறந்துவிட்டார்..
இந்த கதையை ஆழமாக பார்த்தோமானால்.. இந்த க்ஷணத்தில் வாழ்வது என்பது இது தான் என்பதை உணர்த்திவிட்டு அந்த ஞானி சென்றதை காண முடியும்.. அதுதான் மெசேஜ் இல்லையா? எல்லா மனிதருக்கும் புத்திசாலித்தனம் உண்டு. அதை நாம் மலர அனுமதிக்கும்போது தான் அது மலரும்..
எங்கு நிபந்தனை அற்ற அன்பு இருக்கிறதோ அங்கு தனி மனித சுதந்திரம் நிலவும்.. அதுதான் நாம் அந்த மனிதருக்கு கொடுக்கும் மரியாதை இல்லையா!? அந்த சூழலில் தனிமனித புத்திசாலித்தனம் ( Individuality of a human being ) மலரும்..
நாம் தொடர்வோம்…..!
மைத்ரேயி நிரஞ்சனா.. எழுத்தாளர், பேச்சாளர் என பன்முகத் திறமையாளராக வலம் வருகிறார். இல்லத்தரசி என்ற நிலையிலும் சிறந்து விளங்குபவர். மதுரையில் பிறந்தவர், சேலத்தில் வசிப்பவர். அடிப்படையில் ஒரு பொறியாளர். கடந்த 15 வருடமாக ஆன்மீகம் மற்றும் தியானத்தில் அதிக ஈடுபாடு. ஒரே மனித குலம் அமைய வேண்டும் என்ற கனவுடன் வலம் வருபவர். ஆன்மிகம் மட்டுமே மனிதகுலத்தை பயமற்ற, போட்டியில்லாத புதிய உலகிற்கு அழைத்துச் செல்லும், அங்கு பணம் மற்றும் போட்டிக்குப் பதிலாக அன்பு மட்டுமே அடிப்படையாக இருக்கும். பொறுப்புடன் கூடிய சுதந்திரமே புதிய மதமாக இருக்க வேண்டும் என்பதில் நம்பிக்கை கொண்டவர்.
கரூர் சம்பவத்திற்கு சிபிஐ விசாரணை வேண்டும்... சுப்ரீம் கோர்ட்டில் பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன் மனு
ஹர ஓம் நமசிவாய.. திருவண்ணாமலையில் கிரிவலம் செய்வதால் என்ன நன்மை?
உங்களுடன் நான் இருக்கிறேன்...கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுடன் வீடியோ காலில் பேசும் விஜய்
அக்டோபர் 12 ல் நயினார் நாகேந்திரனின் சுற்றுப் பயணம்...அனுமதி கிடைக்குமா?
ஒரு சீட்டுக்காக திமுக அரசை ஆதரித்து நடிக்கிறார் கமல்ஹாசன்.. அண்ணாமலை பாய்ச்சல்
அன்பு, மரியாதை & சுதந்திரம்
கோலி, விராத்தை ஓரங்கட்டுகிறார் கம்பீர்.. இதெல்லாம் நல்லதுக்கில்லை.. மனோஜ் திவாரி பாய்ச்சல்
தன்னம்பிக்கை பேச்சாளர்.. கை நிறைய விருதுகள்.. 600 புக்ஸுடன் வீட்டிலேயே லைப்ரரி.. அசத்தும் ஜெய்சக்தி
விடிவெள்ளி (சிறுகதை )
{{comments.comment}}