புயலும் கோபமும் ஒன்றுதான்!
- டி.கலைமணி
புயலும் கோபமும் ஒன்றுதான்
வீசும் போதும் பேசும்போதும் தெரியாது
அடங்கிய பிறகுதான்
தெரியும்.
தேவையான மாற்றம் இல்லாமல் முன்னேற்றம் சாத்தியமற்றது.
தவறான எண்ணங்களை மாற்றிக் கொள்ள
முடியாதவர்களால் வேறு எதையும்
மாற்ற முடியாது.
ரொம்ப சிந்தித்தால் மனசு வலிக்கும்
அப்புறம் தலை வலிக்கும்
வாழ்க்கையும் மனுஷங்களையும்.!
அவங்க அவங்க போக்கிலேயே விட்டுடனும் '
அதுதான் நமக்கு நல்லது.
வாழ்க்கை கடினம் அல்ல வாழ்வதும் கடினம் அல்ல
நம்மை சுற்றி உள்ளவர்களை சமாளிப்பது தான் மிகமிக கடினம்.
அடுத்தவரின் துன்பம் கண்டு உன் மனம் எப்பொழுது வலிக்கிறதோ
உன் கண்கள் என்று கலங்குகிறதோ
அன்றே நீ உன் துன்பத்தில் தோல் கொடுக்கும் உறவுகளை சம்பாதித்து விட்டாய்.
ஒரு நல்லப் புத்தகம் நூறு நல்ல நண்பர்களுக்கு சமம்,
ஆனால் ஒரு நல்ல நண்பன் ஒரு நூலகத்திற்கே சமம் .
நீயாக வாழ கற்றுக்கொ.ள் சிலர் உன்னை விரும்புவார் சிலர் உன்னை வெறுப்பார். கவலைப் படாதே, இது உன் வாழ்க்கை .
காயமில்லாமல் கனவுகள் காணலாம், ஆனால் வலி இல்லாமல் வெற்றிகள் கான முடியாது.
பணம் சம்பாதிக்க நல்லவன், கெட்டவன் எல்லோராலும் முடியும்.
மனிதர்களை சம்பாதிக்க நல்ல மனசுள்ள மனிதனால் மட்டும்தான் முடியும்.
(சென்னையைச் சேர்ந்த டி. கலைமணி, பக்தி, தத்துவம் என பல் சுவை பாடல்கள், கவிதைகள், கட்டுரைகள் எழுதுவதில் நாட்டம் உடையவர்)