- மயிலாடுதுறை வீ.யோகாஸ்ரீ வீரமணிகண்டன்
புத்தர் என்ற சிறப்பு பெயர் பெற்றவரே!
மக்கள் மனதில் இடம் பிடித்தவரே!
வீரத்திலும் தீரத்திலும் சிறந்தவரே!
பன்னிரெண்டு ஆண்டுகள் தானம் செய்தவரே!
ஜினன் என்ற பட்டம் பெற்றவரே !
ஆன்மீகத்தின் பெருமையை எடுத்துரைத்தவரே!

அகிம்சை வழியில் நின்றவரே!
தாவர உணவு முறையை ஊக்குவித்தவரே!
முப்பது வயதில் உலக வாழ்க்கையை துறந்தவரே!
உயிரினங்களிடம் அன்பு காட்டியவரே!
சமத்துவத்தை உலகுக்கு உணர்த்தியவரே!
சாந்தகுணம் கொண்டு சினம் வென்றவரே!
எண்வகை வழிகளைப் போதித்தவரே!
எளிமை வாழ்வை உலகிற்கு காட்டியவரே!
அமைதி ஒன்றே பேரின்பம் என்றவரே!
தர்மச் சக்கரத்தை சுழலச் செய்தவரே!
தன்னலமற்ற சேவையைச் சிறந்ததென்றவரே!
புவி எங்கும் கருணையைப் படரவிட்டவரே!
(வீ.யோகாஸ்ரீ, அஞ்சல் அட்டையில் 1330 திருக்குறளை எழுதி முப்பால் விருது பெற்றுள்ளார். வண்ணத்துப்பூச்சிகள் 2025 முப்பெரும் விழாவில் சிறந்த நிகழ்ச்சி தொகுப்பாளர் விருது பெற்றுள்ளார். கலைத் திருவிழாவில் மாறுவேடம் மற்றும் தனிநபர் நடிப்பில் மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பெற்றுள்ளார். பேச்சுப் போட்டியில் சுதந்திரா சொற்சுடர் விருது பெற்றுள்ளார் . தடம் பதிக்கும் தளிர்கள் திருவண்ணாமலை குழுமத்தில் 3 முறை உலக சாதனை செய்துள்ளார்)
எனக்காகவும் கொஞ்சம் வாழ்கிறேன் - ரம்யாவின் கவிதைத் தோட்டம் – (2)
டெல்லிக்கு ராஜான்னாலும் ஆச்சி சொல்லைத் தட்டாதே !
எட்டு எட்டா மனித வாழ்வை பிரிச்சுக்கோ - ஏன் பிரிச்சு வச்சிருக்காங்க தெரியுமா?
தென்தமிழ் தலையங்கம்: மழையை ரசிக்க மறந்த மனிதன் - ஏன் இவ்வளவு பயம்??
பிரியாணிக் காதல்!
வடகிழக்கு பருவமழை: 15 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்...தமிழகத்தில் வெளுத்து வாங்க போகும் மழை
தென்தமிழ் தலையங்கம்: உயிருக்குக் குறி வைத்த ஒரு சொல்.. அனோஜன் கற்றுக் கொடுத்த பாடம்!
இந்தியாவை விட்டு வெளியேற பாலிவுட் நடிகர் இம்ரான் கானுக்கு உத்தரவு
Know about El Nino: அக்டோபர் அனலும் எல் நினோவும்..!
{{comments.comment}}