வாடிக்கை மறந்ததும் ஏனோ?

Jul 02, 2026,02:01 PM IST

- மைத்ரேயி நிரஞ்சனா


இந்த தலைப்பு ஒரு ஆர்வத்தை உண்டு பண்ண மட்டுமே.. இன்று நாம் பார்க்க இருப்பது பழக்கவழக்கங்கள் பற்றி..


காஷ்முஷ் தனது குருவை சென்று சந்தித்தார்.. அவருடைய குருவின் மேல் அவருக்கு அளவில்லாத அன்பு மற்றும் நம்பிக்கை..


அவர் குருவிடம் கேட்டார்.. புகை பிடிப்பது எனக்கு ரொம்ப பழக்கமாகிவிட்டது.. என்ன முயன்றும் நிறுத்த முடியவில்லை.. இது ஒரு பெரிய பாவம் தானே என்று வருத்தத்துடன் கேட்டார்..


குரு என்பவர்.. ஞானி என்பவர் அளவில்லாத அன்பு உடையவர்.. அவர் சொல்லும் கருத்துக்கள் உங்களுக்கும் உபயோகமாக இருக்கக்கூடும்..அவர் பேச ஆரம்பித்தார்.. 


இதற்கு முன்னால் உள்ள சமயவாதிகள் புகைபிடித்தல் பெரும் பாவம் என்று கூறி வைத்து சென்றிருக்கிறார்கள்.. அதனாலயே ஒரு குற்ற உணர்ச்சிக்கு ஆளாகி இருக்கிறாய்.. இது தேவையில்லாதது.. பழக்கம் என்றாலே அது நல்ல பழக்கம் ..கெட்ட பழக்கம் என்பதை பற்றி அல்ல.. எல்லா பழக்கங்களுமே தவறுதான்.. ஏனெனில் அது மெக்கானிக்கலாக நடைபெறுகிறது.. சிலர் ராம் ராம் என்று மந்திரத்தை மிக வேகமாக மெக்கானிக்கல் ஆக உச்சரிப்பார்கள்.. அதுவும் தவறுதான்.. 




ஆனால் அது சமுதாயத்தினால் தவறு என்று பார்க்கப்படுவதில்லை ஏனென்றால் சுவாமி நாமத்தை கூறுவது புண்ணியம் என்று சொல்லப்பட்டு வந்திருக்கிறது..


நீ புகை பிடிப்பது கூட பிராணயாமம் செய்வது போன்றது தான்! மூச்சை எடுத்துக்கொண்டே புகையை உள்ளிழுக்கிறாய் பின்பு.. புகையை வெளியே விடுகிறாய்.. அசுத்தமான காற்றை நீ உள்ளே இழுக்கிறாய். இது முட்டாள்தனம் என்று சொல்லலாம்..


இதனால் நீ இரண்டு வருடம் முன்னதாக இறந்து போகக்கூடும் அல்லது TB வரக்கூடும்.. அதற்கு கூட மருந்து இருக்கிறது..


புகைப்பிடித்தல் பாவமல்ல ஆனால் அந்தக் காரியத்தை எவ்வளவு மெக்கானிக்கலாக செய்கிறாய் என்பது தான் பாவம்.. ராம் ராம் என்ற உச்சரிப்பையும் மெக்கானிக்கலாக சொன்னால் அதுவும் அதே அளவு பாவம்தான்.. ஆனால் அனைவரும் அதை ஒத்துக் கொள்வதால் நாம் அதை பாவம் என்று உணர்வதில்லை..


நான் ஒரு வழிமுறை சொல்கிறேன் அதன்படி செய்து பார்.. புகை பிடிக்கும் எண்ணம் வரும் போது.. பாக்கெட்டில் இருந்து மிக மெதுவாக சிகரெட்டை எடுத்து அதை அழகு பார்.. மெதுவாக முகர்ந்து பார் ஒரு பத்து முறை மெதுவாக தட்டிப்பார்.. எல்லாவற்றையும் கான்சியஸ் ஆக செய்து வா.. நெருப்பை கடவுளாக நினைக்கும் போது லைட்டர் ஏன் கடவுளாக நினைக்க முடியாது..? அதையும் மிகச் சிரத்தையுடன்..


பக்தியுடன் எடுத்து அதில் நெருப்பு வரும்போது அதையும் பக்தியுடன் பார்த்து உணர்ந்து பற்ற வைத்து ஒவ்வொரு முறை புகை இழுத்து விடும் போது மிக மெதுவாக.. இழுத்து விடவும்.. 


இவை எல்லாவற்றையும் சிறு சிறு ஆக்சன் களாக பிரித்து.. ஒவ்வொன்றையும் மெதுவாக கான்ஷியஸ் ஆக செய்து வா.. விரைவில் இந்த பழக்கம் குறைந்து கொண்டே வந்து இல்லாமல் போய்விடும்..


ஒரு மெக்கானிக்கலாக நடக்கும் ஒரு விஷயம் நமக்கு எஜமானனாக ஆகிவிடும் போது.. நமக்கு அடிமைப்பட்ட உணர்வு வருகிறது.. வாழ்க்கையில் எந்த விதமான அடிமைத்தனமும் இல்லாமல் வாழ்வது முழுமையான வாழ்க்கை.. 


சிலர் மிகப் பணக்காரர்கள் ஆகிவிடும் போது கூட சில வகையான பழக்கங்களுக்கு அடிமையாகி இருப்பார்கள்.. அவர்கள் ஏழ்மையில் இருக்கும்போது அல்லது மிகவும் இறுக்கத்தில் வேலை செய்யக்கூடிய நிலையில் இருக்கும்போது ஏற்பட்ட சில பழக்கங்கள் அவர்கள் அந்த நிலையில் இருந்து மீளும்போது கூட அந்தப் பழக்கவழக்கங்கள் மிகவும் ஆழமாக வேரூன்றி இருக்கும்.. 


ஹைதராபாத் நிசாம் ஒரு பெரும் பணக்காரர்.. ஆனால் அவர் ஒரு மகா கஞ்சன்.. தன்னுடைய விலை உயர்ந்த தொப்பியை 40 வருடமாக அணிந்திருந்தார் என்று கேள்விப் பட்டிருக்கிறேன்.. துவைத்தது கூட இல்லையாம்.. 

அவருக்கு வேறு ஒரு பழக்கமும் இருந்தது.. எத்தனை பார்க்க வரும் விருந்தினர்கள் சென்றவுடன்.. வேகமாக சென்று Ashtray ல் இருக்கும் சிகரெட் துண்டுகளை எடுத்து புகை பிடிப்பாராம்.. 


சிலர் ஒன்றை நிறுத்திவிட்டு இன்னொன்றை பிடித்துக் கொள்வார்கள்.. இதுவும் பிரச்சனைதான்.. இதற்கான மூல காரணத்தை அறியும்போது மட்டுமே முழுமையாக எந்த பழக்கத்திலிருந்தும் வெளிவர முடியும்.. 


நாம் பல் துலக்குவது.. நடப்பது, உண்பது தண்ணீர் அருந்துவது போன்ற எளிமையான காரியங்களை கான்ஷியஸ் ஆக செய்து பழகுவோம்.. 


கான்ஷியஸாக செய்வது என்பது என்ன? நாம் கையை அசைக்கும் போது நம்முடைய ஈடுபாடு இல்லாமல் கவனம் இல்லாமல் அசைக்க முடியும்.. அது கான்ஷியஸ் இல்லாமல் செய்யும் செயல்.. அதேபோல முழு ஈடுபாட்டுடன் முழு கவனத்துடன் கையை அசைக்க முடியும்.. இதுதான் கான்ஷியஸ் ஆக செய்யும் செயல்.. இது ஒன்றே முழுமையான வாழ்க்கையை வாழ உதவும்.. புண்ணிய வாழ்க்கை இதுவே..


Love & Peace to You All 

நாம் தொடர்வோம்

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

வைகை ஆற்றை மீட்க வேண்டும்: ஆளுநர் விஸ்வநாத் அர்லேகர் வேண்டுகோள்!

news

வாடிக்கை மறந்ததும் ஏனோ?

news

உண்மையான துரோகிகள் இபிஎஸ் உடன் தான் இருக்கிறார்கள்: செங்கோட்டையன் கடும் தாக்கு

news

தவெக-வில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர்

news

DMK: "கொல்லைப்புறமாக ஆட்சிக்கு வரமாட்டோம்" – திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி உறுதி!

news

"திமுகவால் ஆட்சியில் இல்லாமல் இருக்க முடியவில்லை!" – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடும் கண்டனம்!

news

ஜூலை 12ல் 'We The Leaders' அமைப்பின் முதல் மாநாடு : அண்ணாமலை அறிவிப்பு

news

வாட்ஸ்அப்பில் யூசர்நேம் வசதி: மெட்டா நிறுவனத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ்!

news

இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, எஸ்பிபி, பாரதிராஜா, பாக்யராஜ்.. மனதை கசக்கிய மரணங்கள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்