சிறிய எறும்பு சித்துவும் நண்பர்களும்
- சு. மலர்விழி, மதுரை
மரங்கள் அடர்ந்த காட்டில் சித்து என்ற சிறிய கட்டெறும்பு வாழ்ந்து வந்தது. அது அனைவரிடமும் அன்பாகப் பழகும் குணம் கொண்டது.
ஒருநாள் சித்து சந்தைக்குச் செல்லத் திட்டமிட்டது. வழியில் தும்பி, சிட்டுக்குருவி, நத்தை, வண்ணத்துப்பூச்சி, வெட்டுக்கிளி எனப் பல நண்பர்களைச் சந்தித்து, அவர்களையும் தன்னுடன் அழைத்துச் சென்றது. நத்தை மெதுவாகச் சென்றாலும், சித்து அதையும் அன்புடன் தன்னுடன் அழைத்துச் சென்றது.
அப்போது வழியில் ஓர் எறும்புத்தின்னியைச் சந்தித்தனர். அது சித்துவிடம், “நீ எனக்கு மிகவும் பிடித்த நண்பன்! நாம் இருவர் மட்டும் அந்த ப் பக்கம் உள்ள கடைக்குச்சென்று வரலாம்,” என்று கூறி, சித்துவை மற்றவர்களிடமிருந்து பிரித்து அழைத்துச் சென்றது.
எறும்புத்தின்னியின் எண்ணத்தைப் புரிந்துகொண்ட மற்ற நண்பர்கள் சித்துவைக் காப்பாற்ற அதன் பின்னால் சென்றனர் எறும்புத்தின்னி சித்துவை கடித்துத் தின்ன சென்ற போது சிந்துவின் நண்பர்கள் சத்தமிட்டுத் திசைதிருப்பியபோது, சித்து அங்கிருந்து தப்பித்து நண்பர்களுடன் சேர்ந்தது.
தனக்கு ஏற்பட்ட ஆபத்தை உணர்ந்த சித்து, “இனி யாரிடம் பழகுகிறோம் என்பதில் கவனமாக இருப்பேன்!” என்று கூறியது. நண்பர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் ஒன்றாகத் திரும்பினர்.
(சு.மலர்விழி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி, தி.புதுப்பட்டி.திருமங்கலம் ஒன்றியம், மதுரை மாவட்டம்)