- சு. மலர்விழி, மதுரை
மலைகளும் மரங்களும் சூழ்ந்த சுற்றுலாத் தலத்திற்கு மாலா தனது குடும்பத்தினருடனும் தோழியுடனும் சென்றிருந்தாள். ஜீப்பில் மலைப்பாதையில் பயணம் செய்தபோது, கரடுமுரடான சாலையால் அவளது தோழிக்கு தலைச்சுற்றலும் வாந்தியும் ஏற்பட்டன. தொடர்ந்து பயணிக்க முடியாததால், தங்குமிடத்திற்குத் திரும்புமாறு அவள் கேட்டுக்கொண்டாள்.
ஓட்டுநர், இன்னும் இரண்டு இடங்களைப் பார்த்துவிட்டு மெதுவாக அழைத்துச் செல்வதாகக் கூறினார். பயணிகள் முழுமையான சுற்றுலா அனுபவத்தைப் பெற வேண்டும் என்பதும், தன் பணியைச் சிறப்பாக நிறைவேற்ற வேண்டும் என்பதும் அவரது எண்ணமாக இருந்தது. ஆனால் தோழியின் உடல்நிலை மோசமடைந்ததால், மாலாவும் குடும்பத்தினரும் மீதமிருந்த இடங்களைத் தவிர்த்து திரும்ப முடிவு செய்தனர்.
திரும்பும் வழியில் ஓட்டுநர் ஒரு தேநீர்க் கடை அருகே வண்டியை நிறுத்தி அனைவரையும் ஓய்வெடுக்கச் செய்தார். அப்போது மாலாவின் தோழிக்கு மீண்டும் வாந்தி ஏற்பட்டது. ஜீப்பில் பட்டிருந்த வாந்தியை, மற்ற பயணிகளுக்கு அசௌகரியம் ஏற்படாதபடி, ஓட்டுநர் தண்ணீரால் கழுவித் துணியால் சுத்தம் செய்தார்.
மாலா, “இதை நாங்களே செய்துகொள்கிறோம்; நீங்கள் ஏன் சிரமப்படுகிறீர்கள்?” என்று கேட்டாள். அதற்கு அவர், “இது என் வண்டி. இதில் பயணம் செய்பவர்கள் சிரமமின்றி செல்ல வேண்டும். ஒருவரின் உடல்நிலை காரணமாக மற்றவர்களுக்கும் அசௌகரியம் ஏற்படாதபடி பார்த்துக்கொள்வது என் பொறுப்பு,” என்றார்.

பின்னர் அவர் தோழியின் உடல்நிலையை விசாரித்து, தேவையான மருத்துவ உதவி குறித்து மாலாவுடன் ஆலோசித்தார். பயணம் பாதுகாப்பானது என்பதை உறுதிசெய்த பிறகு, சாலையின் நிலைக்கேற்ப வேகத்தைக் குறைத்து, இடையிடையே நலத்தை விசாரித்தபடி அனைவரையும் பாதுகாப்பாகத் தங்குமிடத்திற்குக் கொண்டு சென்றார்.
மாலா அவருக்கு நன்றி தெரிவித்தபோது, “நீங்கள் அனைவரும் நலமாக இருப்பதே முக்கியம். சுற்றுலாத் தலங்களை வேறு நாளில் பார்க்கலாம்; ஆனால் உடல்நலத்தையும் பாதுகாப்பையும் அலட்சியப்படுத்தக் கூடாது,” என்றார்.
அன்று மாலாவும் குடும்பத்தினரும், கடமை என்பது வேலையை முடிப்பதிலேயே இல்லை; அந்த வேலையால் பயனடையும் மனிதர்களின் நலனையும் மதிப்பதில் உள்ளது என்பதை உணர்ந்தனர். மனிதநேயம் கலந்த கடமையே ஒருவரைச் சிறந்த மனிதராக உயர்த்துகிறது.
(சு.மலர்விழி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி, தி.புதுப்பட்டி.திருமங்கலம் ஒன்றியம், மதுரை மாவட்டம்)
The Mask We Wear
தமிழகத்தில் தீவிரமடையும் பருவமழை...கொட்டி தீர்க்கும் கனமழை : 5 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை
வங்கக்கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு - புயலாக மாறினால் முரசு என பெயர் சூட்டப்படும்!
கனாக் கண்டேனடி!
விழுந்தாலும் வேரூன்றி நிற்பேன்! - ரம்யாவின் கவிதைத் தோட்டம் (6)
கட்டுமரம் வாழ்க்கை!
"சீதனமாக அப்பா கொடுத்த ஸ்கூட்டர்!"
காத்திருப்பு.. ஒரு நிமிடக் கதை (43)
Short Story: கடமையின் பின்னே ஒரு மனிதநேயம்
{{comments.comment}}