ஆணுக்கு சமமாய் நானும் தான்!

Su.tha Arivalagan
Dec 17, 2025,10:46 AM IST

- கவிஞர் சு நாகராஜன்


ஆதாம் ஏவாள் காலமது 

ஆண்டவர் படைத்த படைப்புகளில்

பெண்ணே நீ தான் பேரழகு 


ஆணுக்கு சமமாய் நானும் தான் 

ஆடை அணிந்து கொள்கிறேன் 

ஆனால் ஏனோ உன் கண்ணில் 

ஆராய்ச்சி கூடமாய் தெரிகிறதா 


இரவில் தனியே நடந்தாலும்

அந்த இரவும் பகலாய் எனக் காக்குமே 

உனக்குள் இருக்கும் சதையும் தான் 

என் உடம்பில் இருக்கும் மறவாதே 




போதைக்கு அடிமையாய் எனை தீண்டாதே 

என் பார்வையால் உன்னை எரித்திடுவேன் 

பெண் என்றால் மென்மை தான்_ நம்பாதே

எரியும் நெருப்பாய் உனக்கெதிராய் யுத்தம் செய்வேன்


(கவிஞர் சு நாகராஜன், கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுகிறார்)