கணினிக் கல்யாணி.. A Science சிறுகதை!
- சுதா திருநாராயணன்
ஹெட்ஃபோனில் பாட்டைக் கேட்டுக் கொண்டே கம்ப்யூட்டரில் கேம் விளையாடிக் கொண்டிருந்த கல்யாணிக்கு கரண்ட் கட் ஆனது கோபத்தை கொடுத்தது.”இன்வெர்டெர்ல கம்ப்யுட்ட்ர ஆபரேட் பண்ணாதே” கமலின் குரல் உள்ளிருந்து வந்தது. ”அப்புறம் சாஃப்ட்வேர் மால்வேர்(malware) ஆயிடும்”. பிசியை ஷட் டௌன் பண்ணு, தொடர்ந்து ஆணைகள் வந்தன. "எப்ப பாத்தாலும் கேம் விளையாடிண்டே இருக்கியே கொஞ்சம் மத்த விஷயமும் கத்துக்கறியா?” “ம் சொல்லு”
"ஆப்லெட்னா”......(applet)
“எனக்கு ஆம்லெட் தான் தெரியும்”
“குறுக்கே பேசாதே, நல்ல எஃபெக்ட் க்ரியேட் செய்ய ஜாவா ஆப்லெட்ஸ் உபயோகமாகும்.
“எதுல”
“வெப் டிசைன்ல”
"யுஎம்பிசியில் விண்டோஸ் எக்ஸ்பி 7 இருக்கு”
“என்னது 7 ஜன்னலா?”
“ஹய்யோ உனக்கு போய் சொன்னேனே”
“சரி போதும், நான் வித்யாட்ட கேட்டுக்கறேன்”
மின்சார இணைப்பு வந்து விட்டதால் மீண்டும் மானிட்டரை ஆன் செய்தாள் கல்யாணி. வித்யா ஆன் லைனில் வந்தாள். அவளுடன் சாட்டிங் துவங்கினாள்.
“கரண்ட் கட்ஆனா பிசி யூஸ் பண்ணாதேங்கறான் கமல்”
“ஏன் யுபிஎஸ் என்ன ஆச்சு?”
“அது 15 நிமிஷம் தான் வொர்க் பண்ணுமாம்”
“அதுக்குத் தான் இங்க வந்துட்டா நல்லா இருக்கும். பவர் கட்டே கிடையாது இங்க” என்றாள் வித்யா.
“யாரு கார் ஓட்ட கத்துக்கறது? இப்ப மூக்கண்ணாடிய காணோம்.”
“கூகுள் சர்ச் போட்டுப் பாரேன்” கடித்தாள் வித்யா.
”அறுக்காதே, கமல் பாக்கெட் பீசி வாங்கப் போறானாம். மொபைல் ஃபோன் ஃபீச்சர்ஸ் இருக்காமே!”
”ஆமா, நான் டாப்லெட்(tablet) பீசிவச்சிருக்கேன்,ஹைப்ரிட் டெக்னாலஜி, டிஜிடல் பென் போறும் ஆபரேட் பண்ண”
“கான்ஃபிகரேஷன், டேட்டா பேஸ் எல்லாம் சரியா வருமா?”
”இரு இரு பேட்டரி சார்ஜ் இல்ல பவர் போர்ட் பண்ணனும்”
“நான் அனுப்பிய ஃபைல ஃபோல்டர்ல போட்டியா?”
“இல்ல அது க்ரேடு அவுட் (greyed out) ஆயிடுத்து”
“அப்ப பேக் அப் கொடுக்க வேண்டியது தானே. பிட் மேப் வேற அனுப்பி இருந்தேனே”
“அதெல்லாம் பிக்செல்ஸ் வச்சு எடிட் பண்ணிட்டேன்”
”கல்யாணி, கல்யாணி வேலைய முடிச்சுட்டியா? ஹேய் இது என்ன ஒரே கம்ப்யூட்டர் கனெக்டெட் வர்ட்ஸ்” என்று கேட்டுக் கொண்டே வந்தாள் சீமா, வீட்டு எஜமானி.
“நீதானே கம்ப்யூட்டர் கதை எழுதச் சொன்னே”
“அட ராமா, கமல் உனக்கு ஹெல்ப் பண்ணலையா?” சீமா வினவினாள்.
“கமலுக்கு ஒண்ணும் தெரியலை”
”ஹூம் இரண்டு ரோபோட் இருந்தும் ஒன்றும் பிரயோஜனமில்லை எனக்கு, ஆமா, நீ யாரோட சாட் பண்ணின” என்று கேட்டாள் சீமா, கல்யாணி என்ற ரோபோட்டை பார்த்து.
“அது என்னோட ஆன் லைன் ஃப்ரெண்ட் ரோபோட் வித்யா” என்று கல்யாணி பதிலளித்த உடன் வாய் மூடி அமர்ந்தாள் சீமா.
(சுதா திருநாராயணன், கேலக்ஸி பப்ளிகேஷன்ஸ், அனிச்சம் மின்னிதழ், மங்கையர் மலர், கல்கி, அன்னை ஸ்வர்ணாம்பாள் நினைவு சிறுகதை போட்டி ஆகியவை நடத்திய போட்டிகளில் பரிசு பெற்றவர். தி ஹிந்து லிட் ஃபார் லைஃப் நடத்திய சிறுகதை போட்டியில் 1200 சிறுகதைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 சிறுகதைகளில் இவருடையதும் ஒன்று. பல சமையல் குறிப்புகள் மற்றும் துணுக்குகள் எழுதியுள்ளார்)