சிறிய கசிவும் கப்பலை மூழ்கடிக்குமா? .. கேட்டதுமே குழம்புதுல்ல.. வாங்க தெரிஞ்சுக்குவோம்!
- மயிலாடுதுறை த.சுகந்தி,M.Sc,B.Ed,B.A(Hindi)
சிறிய கசிவும் கப்பலையும் மூழ்கடிக்குமா?
தலைப்பை கேட்டதும் உங்களுக்கு கருத்து புரிந்து இருக்கும் தானே .
ஒவ்வொரு சொட்டு நீரையும் நாம் வீணாக்க கூடாது என்பதையும், தேவையில்லாமல் நீர் கசிவதை நாம் அலட்சியம் செய்யக்கூடாது என்பதை இந்த பழமொழி உணர்த்துகிறது.
செய்யும் தொழிலே தெய்வம் என்னும் பழமொழியை போல் நாம் செய்யும் ஒவ்வொரு தொழிலையும் போற்ற வேண்டும்.
இதற்கு என்ன தினம் கொண்டாடலாம் என்று தெரியுமா?
நாம் இன்று பிளம்பிங் (Plumbing)தொழில் செய்பவரை போற்றுவதற்கு இன்றைய தினத்தை கொண்டாடுவோம்.
National Plumbing Day தேசிய பிளம்பிங் தினம்
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 11 அன்று தேசிய பிளம்பிங் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் பிளம்பிங் தொழிலாளர்களின் முக்கியத்துவத்தை நினைவுபடுத்துவதற்காக கொண்டாடப்படுகிறது.
குடிநீர் மற்றும் கழிவுநீர் மேலாண்மையில் பிளம்பிங் தொழில் முக்கிய பங்கு வகிக்கிறது. சுகாதாரமான வாழ்க்கைக்கு நல்ல நீர்வழங்கல் அவசியம் தேவைப்படுகிறது. அதை உறுதிப்படுத்தும் பணியை பிளம்பர்கள் செய்கிறார்கள்.அவர்கள் இல்லாமல் நம்மால் சிறந்த பணியை செய்ய முடியாது என்பதை இன்றைய நாளில் நாம் உணர்ந்து பார்க்க வேண்டும்.
வீடுகள், மருத்துவமனைகள், பள்ளிகள் அனைத்திலும் பிளம்பிங் அமைப்பு தேவைப்படுகிறது. தூய்மையான குடிநீர் கிடைக்க பிளம்பிங் அமைப்பு உதவுகிறது. கழிவுநீர் வெளியேற்றத்தையும் பிளம்பிங் சீராக செய்கிறது.இப்படி அவசியமான செயலை செய்வதற்கு நமக்கு பிளம்பர்கள் தேவைப்படுகிறார்கள். அவர்கள் தொழிலை நாம் இழிவாக எண்ணாமல் அந்த தொழிலையும் உயர்வாக தோற்ற வேண்டும்.
இதனால் சுற்றுச்சூழல் பாதுகாப்பும் மேம்படுகிறது. பிளம்பர்கள் சமூகத்திற்கு அத்தியாவசியமான சேவையை வழங்குகின்றனர். அவர்களின் உழைப்பை பாராட்ட இந்த நாள் கொண்டாடப்படுகிறது. பிளம்பிங் தொழில் தொழில்நுட்ப அறிவும் திறமையும் தேவைப்படும் ஒன்று.
நீர் சேமிப்பிலும் பிளம்பிங் முக்கிய பங்கு வகிக்கிறது. கசிவுகளை சரிசெய்து நீர் வீணாவதைத் தடுக்கமுக்கியமாக பிளம்பர்கள் தேவைப்படுகிறார்கள். இந்த நாள் பிளம்பர்களின் சேவையை மதித்து அவர்களை நாம் உயர்வாக போற்ற வேண்டும். சுகாதாரமான சூழலை உருவாக்க பிளம்பர்கள் அவசியம் தேவைப்படுகிறார்கள் என்பதை உணர்ந்து பார்க்க வேண்டும்.
ஒவ்வொரு வீட்டிலும் தேவையில்லாமல் நீர் கசிந்து கொண்டிருந்தால் உடனடியாக பிளம்பர் மூலம் சரி செய்து கொள்ளுங்கள். பொது இடங்களில் தண்ணீர் கசிவதையும்,கழிவுநீர்கள் பொது இடங்களுக்கு செல்வதையும் தவிர்க்க நாம் முயற்சி செய்வோம்.
தேசிய பிளம்பிங் தினம் சமூகத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை உணர்ந்து கொள்வோம். நல்ல பிளம்பிங் அமைப்பு ஆரோக்கியமான வாழ்க்கையை தருகிறது. நகர வளர்ச்சிக்கும் பிளம்பிங் அவசியமானது என்பதை உணர்ந்து கொள்வோம்.
(த.சுகந்தி, மயிலாடுதுறையைச் சேரந்தவர். அருள் தமிழ் இலக்கியம்,மயிலாடுதுறை அமைப்பை நடத்தி வருகிறார். ஆத்திச்சூடி 109, நாலடியார், திருக்குறள் போன்ற தொகுப்பு நூல்களில் சிறுகதை ஒன்று எழுதி உள்ளார். பாரதியார் நவீன ஆத்திச்சூடி எழுதி மகாகவி பாரதி விருது பெற்றுள்ளார். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கிறார்)