- மயிலாடுதுறை த.சுகந்தி,M.Sc,B.Ed
உங்கள் வாழ்வில் அற்புதம் நடக்க வேண்டுமா? அப்படின்னா இந்த தினத்தை கொண்டாடுங்கள்.
International Day of Awesomeness – சர்வதேச அற்புத தினம்
சர்வதேச அற்புத தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 10 அன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாள் மனிதர்களின் சிறப்புகளையும், திறமைகளையும் வெளிப்படுத்துவதற்காக கொண்டாடப்படும் ஒரு நாளாகும்.
வாழ்க்கையில் நம்முள் இருக்கும் சிறந்த குணங்களை வெளிப்படுத்தவும், தன்னம்பிக்கை மற்றும் நேர்மறை எண்ணங்களை வளர்ப்பதற்கும் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.

ஒவ்வொருவரும் தனித்துவமானவர்கள் என்பதை இந்த நாள் உணர்த்துகிறது. நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் சமூகத்தில் உள்ள நல்லவர்களை பாராட்ட இந்த நாளை சிறப்பாக கொண்டாடுவோம்.
நல்ல செயல்கள் செய்ய மற்றவர்களை ஊக்குவிக்க வேண்டும். தன்னம்பிக்கையுடன் வாழ வேண்டும் என்பதை நமக்கு உணர்த்துகிறது. சிறிய சாதனைகளையும் கொண்டாட வேண்டும். மனிதர்களின் நல்ல பண்புகளை மதிக்கும் தினமாகும். பிறருக்கு உதவி செய்வதன் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் பரப்பும் நாளாக கருதப்படுகிறது.
ஒவ்வொருவரின் திறமைக்கும் மதிப்பு அளிக்க வேண்டும் என்பதைக் கூறுகிறது. நேர்மறையான எண்ணங்களை வளர்க்க உதவுகிறது. நல்ல நண்பர்களை பாராட்டும் நல்ல வாய்ப்பாகவும் கொண்டாடப்படுகிறது. நாம் அனைவரும் நமக்கு பிடித்தமானதை படித்து, நமக்கு பிடித்தமான தொழிலை செய்து அல்லது பிடித்தமான வேலைக்கு சென்று மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து காட்டுவோம்.
அடுத்தவர்களை பார்த்து போட்டி, பொறாமை இல்லாமல் மகிழ்ச்சியாக வாழும் ஒவ்வொரு நாளும் நமக்கு அற்புதமான நாளாகும். போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து என்ற பழமொழிக்கு ஏற்ப நம்மிடம் இருப்பவையே சிறந்தது என்று எண்ணினால் நாம் மகிழ்ச்சியாக வாழ முடியும். நான் தான் சிறந்த அற்புதமானவர் என்றும் உணர முடியும் .
நம்முடைய திறமைகளை வளர்த்து சமூகத்தில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தி, நம் வாழ்க்கையில் நன்றி உணர்வை வளர்ப்பதற்கு இன்றைய தினம் கொண்டப்படுகிறது. நாம் செய்யும் எந்த ஒரு செயலையும் மகிழ்ச்சியாகவும், அடுத்தவர்களுக்கு பயனுள்ளதாகவும் செய்தால் அன்றைய நாள் நமக்கு அற்புதமாக அமையும் என்பதை உணர்ந்து கொள்வோம்.
மனிதர்களாகிய நாம் அனைவரும் அற்புதமானவர்கள் என்பதை உணர்ந்து கொள்வோம்.
(த.சுகந்தி, மயிலாடுதுறையைச் சேரந்தவர். அருள் தமிழ் இலக்கியம்,மயிலாடுதுறை அமைப்பை நடத்தி வருகிறார். ஆத்திச்சூடி 109, நாலடியார், திருக்குறள் போன்ற தொகுப்பு நூல்களில் சிறுகதை ஒன்று எழுதி உள்ளார். பாரதியார் நவீன ஆத்திச்சூடி எழுதி மகாகவி பாரதி விருது பெற்றுள்ளார். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கிறார்)
இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்
காங்கிரஸ் அணுகுமுறையால் திமுக கூட்டணிக்குத் தோல்வி.. திருமாவளவன் குற்றச்சாட்டு
பெண் சிங்கம்.. ராத்திரி 11 மணி.. தனி ஆளாய்.. மொத்த கும்பலையும் வேரறுத்த.. ரிதி ராஜ் ஐபிஎஸ்!
மீண்டும் போர் பதற்றம்: ஈரானிலிருந்து இந்தியர்கள் வெளியேற மத்திய அரசு அறிவுறுத்தல்!
மக்களின் குறை தீர்க்கும் தமிழ்நாடு அரசு.. முக்கிய இமெயில் முகவரிகள்.. நோட் பண்ணிக்கங்க!
முதல்வர் விஜயைச் சந்தித்து.. செஸ் விளையாடி.. ஜெயித்து வாழ்த்து பெற்றார் சாம்பியன் பிரக்ஞானந்தா!
தமிழ்நாடு மின் வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி உத்தரவு!
பா.ஜ.க-விலிருந்து விலகிய செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருணேஷ்.. அண்ணாமலையுடன் இணைகிறாரா?
ராஜ்யசபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு இன்று கடைசி நாள்.. தவெக ஆதரவுடன் எம்.பி ஆகும் காங்.
{{comments.comment}}