மறுசுழற்சி செய்யும் பொருட்களை பயன்படுத்துவோமா?

Su.tha Arivalagan
Mar 18, 2026,02:06 PM IST

- மயிலாடுதுறை த.சுகந்தி,M.Sc,B.Ed


மறுசுழற்சி செய்யும் பொருட்களை பயன்படுத்துவோமா?


தலைப்பை பார்த்ததும் மறுசுழற்சி என்றால் என்ன என்று கேட்கிறீர்களா?


வாங்க மறுசுழற்சி முறை  தெரிந்து கொண்டு இன்றைய தினத்தை சிறப்பாக கொண்டாடுவோம் .


உலக மறுசுழற்சி தினம் 




உலக மறுசுழற்சி தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 18 அன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாள் சுற்றுச்சூழலை பாதுகாக்க முக்கிய பங்கு வகிக்கிறது


மறுசுழற்சி என்பது பயன்படுத்திய பொருட்களை மீண்டும் பயன்படுத்துவது ஆகும். இது குப்பை அளவை குறைக்க உதவுகிறது. ஒரு பொருளை திரும்பத் திரும்ப உற்பத்தி செய்வதையும் குறைக்கிறது. இதன் மூலம் மறைநீரும் பாதுகாக்கப்படும் என்பதை உணர வேண்டும்.


இயற்கை வளங்களை பாதுகாக்க ஒரு சிறந்த வழி மறுசுழற்சி செய்வது என்பதை உணர வேண்டும். 

மறுசுழற்சி என்பது பயன்பாட்டிற்குப் பின் தூக்கி எறியப்படும் கழிவுப் பொருட்களைப் புதிய பொருட்களாக மாற்றும் செயல்முறையாகும். 


காகிதம், அட்டைப்பெட்டி, பிளாஸ்டிக் பாட்டில்கள், கண்ணாடி, அலுமினியம் மற்றும் எஃகு கேன்கள், பேட்டரிகள், மின்னணு சாதனங்கள் (மின் கழிவுகள்) மற்றும் ஜவுளிப் பொருட்கள் ஆகியவை பொதுவாக மறுசுழற்சி செய்யக்கூடிய முக்கியப் பொருட்களாகும். 


காகிதம் & அட்டை (Paper & Cardboard): செய்தித்தாள்கள், இதழ்கள், அலுவலகக் காகிதங்கள், அட்டைப்பெட்டிகள் போன்றவற்றை மிகவும் எளிய முறையில் மறுசுழற்சி செய்யப்படுகிறது. 


கண்ணாடி,பீங்கான், நெகிழிப் பொருட்கள் போன்றவையும் மறுசுழற்சி செய்யப்படுகின்றன. இதனை நாம் உணர்ந்து  மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களை அன்றாடம் பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் மாசு குறைக்கப்படுகிறது.இதனால் சுற்றுச்சூழல் மாசு அடைவதை குறைக்க முடிகிறது.


எளிதில் மக்கும் பொருட்களையும், மறுசுழற்சி செய்யும் பொருட்களை பயன்படுத்துவதால் மண்ணும் ,நீரும் காப்பாற்றப்படுகின்றன என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து பார்க்க வேண்டும். தொழிற்சாலைகளின் கழிவுகள் குறைகின்றன.இதைப் போல் தொடர்ந்து செய்து வந்தால் சுற்றுச்சூழல் சுத்தமாக இருக்கும் என்பதை உணர்ந்து பார்க்க வேண்டும் .


மனித ஆரோக்கியத்திற்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு மிக அவசியம் என்பதை குழந்தைகளுக்கும் மாணவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துவோம்.


“Reduce, Reuse, Recycle” என்ற கோட்பாடு முக்கியம் என்பதை இன்றைய தலைமுறையினருக்கு சொல்லிக் கொடுப்போம்.


நம் வீடுகளில் நான் பிளாஸ்டிக் பொருட்களில் மளிகைப் பொருட்களை வைப்பதற்கு பதிலாக கண்ணாடிப் பொருட்கள், சில்வர் பொருட்கள் மற்றும் பீங்கான் பொருட்களை பயன்படுத்துவோம். குழந்தைகளுக்கு பிளாஸ்டிக் பொருட்களில் உணவுப் பொருட்களை கொடுக்காமல் சில்வர் பொருட்களில் உணவுப்பொருட்களை கொடுப்போம்.


குக்கர்,அலுமினியம் போன்ற பொருட்களை பயன்படுத்தாமல் மண் பாத்திரங்களையும், இரும்பு சட்டிகளையும் பயன்படுத்துவோம். வீட்டில் செயற்கை அலங்கார பொருட்களை பயன்படுத்தாமல் இயற்கை  பொருட்களையே பயன்படுத்துவோம்.


கடைக்குச் செல்லும் பொழுது துணிப்பையை அவசியம் கொண்டு செல்வோம். அரசு மற்றும் தன்னார்வலர்  அமைப்புகள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் போது நம்மால் முடிந்த பங்களிப்பை செய்து கொடுப்போம். மரங்கள் வெட்டப்படுவது குறையும். இதன் மூலம் ஆற்றல் சேமிப்பு அதிகரிக்கும் என்பதால் நம் பூமியில் இயற்கை வளங்கள் செழிப்பாக காணப்படும் என்பதை உணர்ந்து செயல்படுவோம்.


இன்றைய நாளில் நெகிழிப் பொருட்களை பயன்படுத்த மாட்டோம். எளிதில் மக்கும் பொருட்களை பயன்படுத்துவோம் என்று அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொள்வோம்.


(த.சுகந்தி, மயிலாடுதுறையைச் சேரந்தவர். அருள் தமிழ் இலக்கியம்,மயிலாடுதுறை அமைப்பை நடத்தி வருகிறார். ஆத்திச்சூடி 109, நாலடியார், திருக்குறள்  போன்ற தொகுப்பு நூல்களில் சிறுகதை ஒன்று எழுதி உள்ளார். பாரதியார் நவீன ஆத்திச்சூடி எழுதி மகாகவி பாரதி விருது பெற்றுள்ளார். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கிறார்)