திமுகவுக்கு அரசியல் தெரியும்.. விஜய்யும் இனிமேல் புரிந்து கொள்வார்.. எஸ்.வி.சேகர்

Su.tha Arivalagan
Oct 01, 2025,01:57 PM IST
சென்னை: திமுகவுக்கு அரசியல் என்றால் என்ன என்று தெரியும். விஜய்யும் கூட இனிமேல் அரசியலைப் பற்றிப் புரிந்து கொள்வார் என்று முன்னாள் எம்எல்ஏவும், நடிகருமான எஸ்.வி.சேகர் கூறியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் மீது தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்குமா, இதுகுறித்து விஜய் வீடியோ வெளியிட்டுள்ளாரே என்று செய்தியாளர்கள் இன்று எஸ்.வி.சேகரிடம் கேட்டனர். அதற்கு எஸ்.வி.சேகர் பதிலளித்துள்ளார்.



இதுதொடர்பாக அவர் கூறுகையில், விஜய் மீது தமிழ்நாடு அரசு ஒருபோதும் எந்த நடவடிக்கையும் எடுக்காது. ஏனெனில் விஜய் காவல்துறைக்கோ அல்லது அரசுக்கோ அதிகாரப்பூர்வமாக எழுத்துப்பூர்வமாக எந்த வாக்குறுதியையும் கொடுக்கவில்லை. எல்லாமே தவெகவின் உள்ளூர் நிர்வாகிகளால் கையெழுத்திடப்பட்டவை, அப்படியிருக்க அரசு எப்படிப் பழிவாங்கும்? 

அரசியல் என்றால் என்னவென்று திமுகவுக்குத் தெரியும். இதற்குப் பிறகு அரசியல் என்றால் என்னவென்று விஜய்க்கும் புரியும் என்றார் எஸ்.வி.சேகர்.