சென்னை: உறுதியாக எனது அரசியல் பயணம் தொடரும். சீக்கிரமே எல்லா உண்மைகளும் வெளியே வரும் என்று தவெக தலைவர் விஜய் வீடியோ வெளியிட்டுள்ளார்.
விஜய்யின் கரூரில் பிச்சாரத்திற்கு பின்னர் இன்று வீடியோ வெளியிட்டுள்ளார். அக்கட்சி தலைவர் விஜய். இது குறித்து அவர் பேசுகையில், அனைவருக்கும் வணக்கம். எனது வாழ்க்கையில் இதுபோன்ற வலி மிகுந்த தருணத்தை பார்த்தது இல்லை. மனது முழுக்க வலி. வலி மட்டும் தான். இந்த சுற்றுப்பயணத்தில் மக்கள் என்னை பார்க்க வருகிறார்கள். அதற்கு ஒரே ஒரு காரணம் தான். என் மேல் அவர்கள் வைத்துள்ள அன்பும் பாசமும் தான். அந்த அன்புக்கும் பாசத்திற்கும் என்றும் கடைமை பட்டிருப்பேன். அதனால தான் இந்த சுற்றுப்பயணத்தில் மற்ற எல்லா விஷயங்களையும் தாட்டி மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பது தான் என் மனதில் ஆழமான எண்ணம். இனி மக்கள் பாதுாப்பே முக்கியம். இனி பாதுகாப்பான இடங்களையே கேட்போம்.

ஏற்கெனவே 5 மாவட்டங்களில் பிரச்சாரம் செய்தோம். அங்கெல்லாம் நடக்காமல் கரூரில் மட்டும் ஏன் நடக்கிறது. மக்களுக்கு தெரியும். கரூர் மக்கள் நடந்த உண்மைகளை சொல்லும் போது கடவுளே வந்து சொல்வது போல் இருக்கிறது. சீக்கிரமே எல்லா உண்மைகளும் வெளியே வரும். சிஎம் சார் என்னை பழிவாங்க நினைத்தால் என் மீது கை வையுங்கள். நான் வீட்டிலோ அலுவலகத்தில் தான் இருப்பேன். தொண்டர்கள் மீது கை வைக்காதீர்கள். என்னுடைய அரசியல் பயணம் இன்னும் ஸ்ராங்க, இன்னும் தைரியத்தோட தொடரும்.
நடக்கக்கூடாதது நடந்து விட்டது. நானும் மனிதன் தான். என்னால் எப்படி அந்த ஊரை விட்டு வர முடியும். வேறும் அசம்பாவிதங்கள் நடைபெறக்கூடாது என்பதால் கரூர் செல்வதை தவிர்த்தேன். கூட்ட நெரிசலில் சிக்கி பாதிக்கப்பட்டு காயம் அடைந்திருப்பவரையும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரையும் சந்திக்க விரைவில் கரூர் வருவேன். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் குணமடைய வேண்டிக் கொள்கிறேன். எங்களின் வலிகளையும் எண்ணங்களையும் புரிந்து கொண்டு எங்களுக்காக பேசிய அரசியல் தலைவர்களுக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் 4 மாவட்டங்களுக்கு நாளை 'ஆரஞ்சு அலர்ட்': வானிலை மையம் எச்சரிக்கை
மாறிப் போன வாழ்க்கை.. கடந்து போன வயது.. It changed my life
கூட்டணிக்கு வர விஜய்யிடம் காங்கிரஸ் வைத்த டிமாண்ட்...ஆடிப்போன தவெக
தவெக தேர்தல் அறிக்கை தயாரிக்க 12 பேர் கொண்ட குழு...பட்டியலை வெளியிட்ட விஜய்
வானுலகின் பேரொளியில், ஒரு பொக்கிஷம்.. Divine Gift!
மலை போல வந்ததா? மழை போல வந்ததா? .. ஒரு மொழித் தேடல்!
வேகம் விவேகமானதா..?
செம்மையாக வாழ வேண்டும்.. எப்படி தெரியுமா.. ஸ்டீபன் ஹாக்கிங் போல!
ஜனநாயகன் இழுபறி தொடர்கிறது.. பாரசக்திக்கு யுஏ கிடைத்தது.. திட்டமிட்டபடி நாளை ரிலீஸ்!
{{comments.comment}}