சனிப்பெயர்ச்சி பலன்கள் 2026: யாருக்கு லாபம்? பாதிக்கப்பட போகும் ராசிகள் யார்?

Feb 23, 2026,05:20 PM IST

வரும் 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 6 ஆம் தேதி (06.03.2026) வெள்ளிக்கிழமை காலை 8:26 மணிக்கு சனி பகவான் தனது இருப்பிடத்தை மாற்றுகிறார். அன்றைய தினம் சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீனம் ராசிக்கு பெயர்ச்சி ஆக உள்ளார். இந்த சனிப்பெயர்ச்சி 12 ராசிகளுக்கும் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும், இந்த சனிப்பெயர்ச்சியால் பலன் அடைய போகும் ராசிகள் எவை, பாதிப்புக்களை எதிர்கொள்ள போகும் ராசிகள் எவை, எந்தெந்த ராசியினர் என்னென்ன பரிகாரங்களைச் செய்ய வேண்டும் என்ற விரிவான தகவல்கள் இதோ...


சுப பலன்களைப் பெறும் ராசிகள்:


ரிஷபம், மிதுனம், கடகம், துலாம், விருச்சிகம் மற்றும் மகரம் ஆகிய ராசிகள் இந்தப் பெயர்ச்சியின் மூலம் நற்பலன்களைப் பெறுகின்றனர்.


பரிகாரம் செய்ய வேண்டிய ராசிகள்:




மேஷம், சிம்மம், கன்னி, தனுசு, கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசியினர் தகுந்த பரிகாரங்கள் மற்றும் வழிபாடுகளைச் செய்வது அவசியம்.


12 ராசிகளுக்கான விரிவான பலன்கள்:


மேஷம் (12-ஆம் இடம் - விரைய சனி) :


மேஷ ராசிக்கு இது விரைய சனியாக அமைவதால், தேவையற்ற செலவுகள் மற்றும் முதலீடுகளில் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

பலன்கள்: பொருள் நஷ்டம், அதிகப்படியான செலவு, தொழிலில் முடக்கம்.

வழிபட வேண்டிய தெய்வம்: ஐயப்பன் மற்றும் நவக்கிரக வழிபாடு.


ரிஷபம் (11-ஆம் இடம் - லாப சனி) :


ரிஷப ராசிக்கு லாப சனி என்பதால் யோகமான காலமாகும்.

பலன்கள்: பதவி உயர்வு, காரிய வெற்றி, தொழிலில் லாபம் மற்றும் புதிய சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும்.

வழிபட வேண்டிய தெய்வம்: சிவபெருமான் மற்றும் பார்வதி தேவி.


மிதுனம் (10-ஆம் இடம் - ஜீவன சனி) :


மிதுன ராசிக்கு ஜீவன சனி என்பதால் குடும்பத்திலும் உத்தியோகத்திலும் மாற்றங்கள் நிகழும்.

பலன்கள்: குடும்பத்தில் ஒற்றுமை, புதிய ஆற்றல் மிக்க முயற்சிகள் மற்றும் பெருந்தன்மையான செயல்பாடுகள் அமையும்.

வழிபட வேண்டிய தெய்வம்: விநாயகர் மற்றும் சனிஸ்வர பகவான்.


கடகம் (9-ஆம் இடம் - பாக்ய சனி) :


கடக ராசிக்கு பாக்ய சனி என்பதால் தடைபட்ட காரியங்கள் கைகூடும்.

பலன்கள்: குடும்பத்தில் மகிழ்ச்சி, உறவினர்கள் உதவி, வீடு மற்றும் வாகன யோகம் உண்டாகும்.

வழிபட வேண்டிய தெய்வம்: விநாயகர், குலதெய்வம் மற்றும் பெருமாள்.


சிம்மம் (8-ஆம் இடம் - அஷ்டம சனி) :


சிம்ம ராசிக்கு அஷ்டம சனி என்பதால் கவனமாக இருக்க வேண்டிய காலமாகும்.

பலன்கள்: கடும் குழப்பம், வீண் அலைச்சல்கள், வழக்குகளில் சிக்கல் மற்றும் பூர்வீக சொத்துக்களில் பிரச்சினைகள் வரலாம்.

வழிபட வேண்டிய தெய்வம்: சிவன், இஷ்ட தெய்வம் மற்றும் சனிஸ்வர பகவான்.


கன்னி (7-ஆம் இடம் - கண்ட சனி): 


கன்னி ராசிக்கு கண்ட சனி என்பதால் பொறுமை அவசியம்.

பலன்கள்: காரிய தாமதம், கடன்கள் திரும்புவதில் சிக்கல் மற்றும் நிதானமற்ற போக்கு நிலவும்.

வழிபட வேண்டிய தெய்வம்: பெருமாள், மகாலட்சுமி மற்றும் சனிஸ்வர பகவான்.


துலாம் (6-ஆம் இடம் - ரோக சனி) :


துலாம் ராசிக்கு பொருளாதார ரீதியாக முன்னேற்றமான காலமாகும்.

பலன்கள்: வருமானம் உயரும், பாராட்டுகள் கிடைக்கும். இருப்பினும் ஆரோக்கியத்தில் மட்டும் கூடுதல் கவனம் தேவை.

வழிபட வேண்டிய தெய்வம்: விநாயகர் மற்றும் சக்கரத்தாழ்வார்.


விருச்சிகம் (5-ஆம் இடம் - பூர்வ புண்ணிய சனி) :


விருச்சிக ராசிக்கு செல்வச் செழிப்பு தரும் காலமாகும்.

பலன்கள்: அதிக வருமானம், சேமிப்பு உயர்தல் மற்றும் சகோதரர்கள் மூலம் வெற்றி கிடைக்கும்.

வழிபட வேண்டிய தெய்வம்: ஆஞ்சநேயர் மற்றும் துர்க்கை அம்மன்.


தனுசு (4-ஆம் இடம் - அர்த்தாஷ்டம சனி) :


தனுசு ராசிக்கு அர்த்தாஷ்டம சனி என்பதால் தொழிலில் விழிப்புணர்வு தேவை.

பலன்கள்: தொழிலில் தடை, வேலையாட்களால் பிரச்சினை மற்றும் சிலருக்கு பணி மாற்றம் ஏற்படலாம்.

வழிபட வேண்டிய தெய்வம்: பெருமாள் மற்றும் பைரவர்.


மகரம் (3-ஆம் இடம் - விமோசன சனி) :


மகர ராசிக்கு ஏழரை சனி விலகி, அதிர்ஷ்டக் காலம் தொடங்குகிறது.

பலன்கள்: திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள், வெளிநாட்டு பயணம் மற்றும் சமுதாயத்தில் செல்வாக்கு உயரும்.

வழிபட வேண்டிய தெய்வம்: விநாயகர் மற்றும் பெருமாள்.


கும்பம் (2-ஆம் இடம் - பாத சனி) : 


கும்ப ராசிக்கு பாத சனி என்பதால் பேச்சில் நிதானம் தேவை.

பலன்கள்: நிதி நெருக்கடிகள், வாக்குவாதங்களால் பிரச்சினை மற்றும் குடும்பத்தில் குழப்பங்கள் வரலாம்.

வழிபட வேண்டிய தெய்வம்: சனிஸ்வர பகவான் மற்றும் பார்வதி தேவி.


மீனம் (1-ஆம் இடம் - ஜன்ம சனி) :


மீன ராசிக்கு ஜன்ம சனி என்பதால் கடின உழைப்பு தேவைப்படும்.

பலன்கள்: உடல் உபாதைகள், தேவையற்ற அலைச்சல், வருமானக் குறைவு மற்றும் காரியத் தடைகள் ஏற்படலாம்.

வழிபட வேண்டிய தெய்வம்: ஆஞ்சநேயர் மற்றும் சனிஸ்வர பகவான்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

We The Leaders: புதிய அரசியல் இயக்கம்.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டி.. அண்ணாமலை அறிவிப்பு!

news

தமிழகத்தில் தீவிரம் அடையும் தென்மேற்கு பருவமழை: 4 மாவட்டங்களுக்கு நாளை ‘ஆரஞ்சு அலர்ட்’

news

Annamalai Politics: அண்ணாமலையின் அரசியல் எப்படி இருக்கும்?

news

பாஜகவிலிருந்து விலகினார்.. அண்ணாமலையின் புதிய சகாப்தம் இன்று தொடங்குகிறது!

news

இலங்கையில் பரிதாபம்.. முதியோர் இல்லத்தில் கோர தீ விபத்து.. 12 பேர் உயிரிழப்பு

news

மரம் வளர்ப்போம்! மழை பெறுவோம்! சுற்றுப்புறச் சூழலை பாதுகாப்போம்!

news

சிந்தனைச் சிதறல்.. உறவினும் மேலான ஒரு இதயம் தேவை!

news

உலக சுற்றுச்சூழல் தினம்.. கொண்டாடுவோம் இயற்கையை.. பாதுகாப்போம் பூமியை!

news

ஆசையே அலை போலே!

அதிகம் பார்க்கும் செய்திகள்