அத்தி வரதர் மார்ச் 01ம் தேதி மீண்டும் வெளியே வருகிறார்.. எந்த ஊரில் தெரியுமா?

Feb 23, 2026,05:19 PM IST

கும்பகோணம் : காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் குளத்திற்கு அடியில் இருக்கும் அத்தி வரதர் பற்றி அனைவருக்கும் தெரியும். கிட்டதட்ட 40 ஆண்டுகளுக்கு பிறகு தண்ணீருக்குள் இருந்து 2019ம் ஆண்டு வெளியே எடுக்கப்பட்ட இவரை தரிசனம் செய்வதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் காஞ்சிபுரத்தில் குவிந்தனர். ஆனால் அத்தி மரத்தால் செய்யப்பட்ட அத்தி வரதர் சிலை காஞ்சிபுரத்தில் மட்டுமல்ல, கோவில் நகரமான கும்பகோணத்திலும் உள்ளது என்பது பலரும் அறியாத ரகசியம்.


கும்பகோணத்தில் உள்ள மிக பழமையான கோவில்களில் வரதராஜ பெருமாள் கோவிலும் ஒன்று. 180 ஆண்டுகள் பழமையான இக்கோவிலில் மூலவராக வரதராஜ பெருமாள், ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார். கருவறைக்கு கிழக்கே இங்கு ஒரு பாதாள ரகசிய அறை உள்ளது. 

இக்கோவிலின் மிகப்பெரிய அதிசயம் மற்றும் ரகசியம், இங்குள்ள பாதாள அறையில் வீற்றிருக்கும் அத்தி வரதர் ஆவார். காஞ்சிபுரத்தில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அத்தி வரதர் குளத்திலிருந்து வெளியே எடுக்கப்படுவது போல, கும்பகோணத்தில் உள்ள அத்தி வரதர் சிலை 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளியே எடுக்கப்படும் என்பது பலரும் அறியாத தகவல்.




கோவிலின் உட்பிரகாரத்தில் ஒரு சிறிய சன்னதி போன்ற அமைப்பு உள்ளது. அதன் கீழே ஒரு ரகசிய பாதாள அறை அமைந்துள்ளது. அந்நியப் படையெடுப்புகளின் போது விக்கிரகங்களுக்குச் சேதம் ஏற்படாமல் காக்க, நம் முன்னோர்கள் மூலவர் சிலையை இந்தப் பாதாள அறையில் மறைத்து வைத்ததாகக் கூறப்படுகிறது. இந்தப் பாதாள அறைக்குள் அத்தி மரத்தினால் ஆன வரதராஜ பெருமாள் சிலை பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தைப் போல், இங்குள்ள அத்தி வரதர் எப்போதும் தண்ணீரிலோ அல்லது வெளியிலோ இருப்பதில்லை; மாறாக, ஒரு இருண்ட நிலவறையில் குடிகொண்டுள்ளார்.


பொதுவாக இந்தப் பாதாள அறை மூடப்பட்டே இருக்கும். இவரை தரிசனம் செய்ய யாரும் அனுமதிக்கப்படுவது கிடையாது. ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக இருகு்கும் இந்த அத்தி வரதர் ஒன்றரை அடி உயரம் கொண்டவர். 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே பாதாள அறையில் இருந்து இவர் வெளியே எடுக்கப்படுகிறார். இவரைத் தரிசிப்பது மிகுந்த புண்ணியமாகவும், தீராத வினைகளைத் தீர்க்கும் அருமருந்தாகவும் பக்தர்கள் கருதுகின்றனர்.


12 ஆண்​டு​களுக்கு பிறகு பாதாள அறையில் இருந்து எடுக்கப்பட்டு, மார்ச் 1-ந் தேதி முதல் 10 நாட்​களுக்கு பக்​தர்​கள் தரிசனம் செய்யவதற்கான ஏற்​பாடுகள் செய்​யப்​பட்​டுள்​ளது. 1915-ஆம் ஆண்​டுக்​குப் பின் பல்​வேறு காரணங்​களால் இந்த சிலை வெளியே எடுத்து வைக்​கப்​ப​ட​வில்​லை. சுமார் 98 ஆண்​டு​களுக்கு பிறகு கடந்த 2013-ஆம் ஆண்டு இந்த சிலை வெளியே எடுக்​கப்​பட்​டு, பக்​தர்​களின் தரிசனத்​துக்​காக வைக்​கப்​பட்​டது. பின்​னர் மீண்​டும் பாதாள அறை​யில் பாது​காப்​பாக வைக்​கப்​பட்​டது.மார்ச் 10ம் தேதி வரை காலை 08 மணி முதல் நண்​பகல் 12 மணி வரை, மாலை 05 மணி முதல் இரவு 08.30 மணி வரை இந்த அத்தி வரதரை தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

We The Leaders: புதிய அரசியல் இயக்கம்.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டி.. அண்ணாமலை அறிவிப்பு!

news

தமிழகத்தில் தீவிரம் அடையும் தென்மேற்கு பருவமழை: 4 மாவட்டங்களுக்கு நாளை ‘ஆரஞ்சு அலர்ட்’

news

Annamalai Politics: அண்ணாமலையின் அரசியல் எப்படி இருக்கும்?

news

பாஜகவிலிருந்து விலகினார்.. அண்ணாமலையின் புதிய சகாப்தம் இன்று தொடங்குகிறது!

news

இலங்கையில் பரிதாபம்.. முதியோர் இல்லத்தில் கோர தீ விபத்து.. 12 பேர் உயிரிழப்பு

news

மரம் வளர்ப்போம்! மழை பெறுவோம்! சுற்றுப்புறச் சூழலை பாதுகாப்போம்!

news

சிந்தனைச் சிதறல்.. உறவினும் மேலான ஒரு இதயம் தேவை!

news

உலக சுற்றுச்சூழல் தினம்.. கொண்டாடுவோம் இயற்கையை.. பாதுகாப்போம் பூமியை!

news

ஆசையே அலை போலே!

அதிகம் பார்க்கும் செய்திகள்