விஜய்க்கு எங்கு சென்றாலும் வேல் பரிசு...பாஜக ஓட்டுக்களை குறி வைக்கிறதா தவெக?

Feb 23, 2026,05:20 PM IST

சென்னை : தவெக தலைவர் விஜய் எங்கு சென்றாலும் அவருக்கு வேல் பரிசாக கொடுக்கப்படுவதை கவனித்தீர்களா? திருச்சி மரக்கடை பகுதியில் முதல் முறையாக விஜய், மக்களை சந்திக்க வரும் போது துவங்கி, இன்று நடைபெற்ற வேலூர் நிகழ்ச்சி வரை பெரும்பாலானவற்றில் அவருக்கு ரசிகர்களும், தொண்டர்களும், நிர்வாகிகளும் வேல் பரிசாக வழங்கி வருகிறார். ஒரு சில ஊர்களில் மட்டும் தான் இது மிஸ்ஸிங்.


சேலம் கூட்டத்தில் வேல், இரட்டை செங்கோல் பரிசாக வழங்கப்பட்டது. இன்று நடந்த வேலூர் கூட்டத்திலும் வேல், வாள், இரட்டை யானை வடிவங்கள் ஆகியன விஜய்க்கு பரிசாக வழங்கப்பட்டன. இதுவரை  தேர்தல் சமயம், பொதுக் கூட்டங்கள் என்றால் வழக்கமாக கட்சி தலைவருக்கு செங்கோல் பரிசாக வழங்குவார்கள். ஆனால் இந்த முறை தமிழக சட்டசபை தேர்தல் வேலைகளை துவங்கியது முதலே பல்வேறு கட்சி தலைவர்களுக்கும் வேல் பரிசாக வழங்கப்படுகிறது. அதுவும் விஜய்க்கு கொஞ்சம் அதிகமாகவே வழங்கப்படுகிறது.


வேல் என்பது முருகப் பெருமானின் கையில் இருக்கும் ஆயுதம் என்பது அனைவருக்கும். இது வெற்றி, ஞானம் ஆகியவற்றின் அடையாளம் என்றும் ஆன்மீகத்தில் சொல்லுவார்கள். இது காலம் காலமாக இருந்து வருவது. ஆனால் எந்த தேர்தலிலும் இல்லாமல் இந்த தேர்தலில் மட்டும் வேலுக்கு ஏன் இத்தனை முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. "வெற்றிவேல் வீரவேல்" என்ற முருக பக்தர்களின் முழக்கமே அரசியல் கூட்டங்களில் முழங்க துவங்கி உள்ளது. முருகன் மீது திடீர் பாசம் வர என்ன காரணம் என்று யோசித்து பார்த்தால் அனைத்து கட்சிகளின் அரசியல் வியூகங்களும் புரியும்.




பாஜக., மதவாத கட்சி என எப்போதும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சிப்பது தான் வழக்கம். அதே போல் அவர்களும், திமுக மற்றும் காங்கிரசை இந்துக்களுக்கு எதிரான கட்சிகள் என விமர்சித்து வருகிறார்கள். இதனால் நடக்க இருக்கும் தமிழக சட்டசபை தேர்தலில் ஆளும் கட்சியான திமுக.,விற்கு எதிராக  திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றுவது தொடர்பான விவகாரத்தை கையில் எடுக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதை உண்மை என உறுதிப்படுத்தும் வகையில் சமீபத்தில் தமிழகம் வந்த போது பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா ஆகியோரும் மேடையில் பேசி விட்டு சென்றார்கள். அது மட்டுமல்ல, மார்ச் 01ம் தேதியன்று மதுரை வரும் பிரதமர் மோடி, திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய உள்ளார். வழக்கமாக அவர் மதுரை வந்தால் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு மட்டும் தான் செல்வார். ஆனால் இது தேர்தல் நேரம் என்பது இந்த முறை திருப்பரங்குன்றம் செல்ல உள்ளார்.


இதனால் பெரும்பான்மையினராக இருக்கும் இந்துக்களின் ஓட்டுக்கள் பாஜக கூட்டணிக்கு தான் செல்லும். விஜய் கிறிஸ்தவ சமுதாய ஓட்டுக்கள், சிறுபான்மையினர் ஓட்டுக்கள், இளைஞர் ஓட்டுக்களை தான் குறி வைக்கிறார் என ஏற்கனவே சொல்லப்பட்டு வருகிறது. இதற்கிடையில் திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் இதுவரை விஜய் தனது நிலைப்பாட்டை சொல்லாததால், அவர் இந்துக்களுக்கு எதிரானவர் என சிலர் கூறி வருகிறார்கள். இந்த பிம்பத்தை உடைப்பதற்காக தான், விஜய்க்கு போகிற இடமெல்லாம் வேலை பரிசாக வழங்குகிறார்கள். விஜய்யும் கையில் வேலுடன் போஸ் கொடுக்க, அந்த போட்டோவை வைத்தே அதிக போஸ்டர்களில் பயன்படுத்தி வருகின்றனர் தவெக.,வினர்.


சமீப காலமாக விஜய், திமுக.,வை தான் நேரடியாகவும், அதிகமாகவும் தாக்கி பேசி வருகிறார். பாஜக பற்றி பெரிதாக பேசுவது கிடையாது. இன்று நடைபெற்ற வேலூர் கூட்டத்திலும், இந்த தேர்தலில் திமுக-என்டிஏ இடையே தான் போட்டி என்ற முதல்வர் ஸ்டாலின் பேச்சை கிண்டல் செய்யும் வகையில் தான் விஜய் பேசி உள்ளார். திமுக எதிர்ப்பு ஓட்டுக்களை கவரும் வகையில் பேசி வரும் விஜய், சத்தமில்லாமல் பாஜக ஓட்டுக்களையும் குறிவைக்கிறாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. பாஜக., முருகன் பற்றிய பிரச்சாரத்தை தீவிரமாக துவங்குவதற்கு முன், வேலை கையில் பிடித்துக் கொண்டு, இந்துக்களின் ஓட்டுக்களை கவர்ந்து விடலாம் என தவெக திட்டமிட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

news

"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!

news

"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

news

பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார்.. சிறைப்பட்டார் செக்கிழுத்தார் அது செக்கல்ல!

news

ஆசிரியர் ஓர் அகல்விளக்கு

அதிகம் பார்க்கும் செய்திகள்