சென்னை: தமிழகத்தில் 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திருத்தப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் இன்று (பிப்ரவரி 23, 2026) வெளியிட்டார்.சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளுக்குப் பிறகு (Special Intensive Revision - SIR), வெளியிடப்பட்டுள்ள இந்தப் பட்டியலில் தமிழகத்தின் ஒட்டுமொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 5 கோடியே 67 லட்சத்து 07 ஆயிரத்து 380 ஆக உள்ளது.
வாக்காளர் புள்ளிவிபரங்கள் :
எஸ்ஐஆர் பணிகளுக்கு முன்பு தமிழகத்தில் 6.41 கோடியாக இருந்த வாக்காளர் எண்ணிக்கை, இரட்டைப் பதிவுகள் மற்றும் உயிரிழந்தவர்களின் பெயர்கள் நீக்கப்பட்ட பிறகு தற்போது 5.67 கோடியாகக் குறைந்துள்ளது. இன்று வெளியிடப்பட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள விபரங்கள் இதோ...
தமிழக இறுதி வாக்காளர் பட்டியல் விபரம் :

மொத்த வாக்காளர்கள் - 5,67,07,380
ஆண் வாக்காளர்கள் - 2,77,38,925
பெண் வாக்காளர்கள் - 2,89,60,838
மூன்றாம் பாலினத்தவர் - 7,617
நீக்கப்பட்ட வாக்காளர்கள்- 74,07,207
12.51 லட்சம் பேர் முதல்முறையாக வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
3.99 லட்சம் மூத்த குடிமக்கள் பட்டியலில் உள்ளனர்.
அதிக வாக்காளர்களைக் கொண்ட தொகுதி - சோழிங்கநல்லூர் (செங்கல்பட்டு மாவட்டம்).
குறைந்த வாக்காளர்களைக் கொண்ட தொகுதி - சென்னை துறைமுகம்.
இன்றைய அறிவிப்பின்படி மாவட்ட வாரியாக வாக்காளர் விபரங்கள்,
சென்னை- 28.3 லட்சம் வாக்காளர்கள்
கடலூர்- 19.46 லட்சம் வாக்காளர்கள்.
கோவை, செங்கல்பட்டு, சோழிங்கநல்லூர் போன்ற பெரிய தொகுதிகள் உள்ளதால் இங்கு வாக்காளர் எண்ணிக்கை அதிகமாகப் பதிவாகியுள்ளது.
அனைத்து 234 தொகுதிகளின் விரிவான பட்டியலை அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலக இணையதளங்களில் இன்று மாலை முதல் பொதுமக்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்கள் பெயரை சரிபார்ப்பது எப்படி?
வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என்பதை உறுதிப்படுத்த அல்லது திருத்தங்கள் செய்ய இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளங்களை அணுகலாம் - voters.eci.gov.inelectoralsearch.eci.gov.in
இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டாலும் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள் அல்லது புதிய வாக்காளர்கள் தொடர்ந்து விண்ணப்பிக்கலாம் எனவும், தேர்தல் ஆணையத்தின் தொடர் திருத்த நடைமுறை அமலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Akshaya Tritiya 2026: அட்சய திருதியை.. எப்போது சாமி கும்பிடலாம்.. பஞ்சாங்கம் என்ன சொல்கிறது?
Kanakathara Sthothram: அட்சய திருதியை.. ஸ்ரீ ஆதி சங்கரர் அருளிய கனகதாரா ஸ்தோத்திரம் படிப்போம்!
அட்சய திருதியை.. சித்திரை மாத பொன்னான நாளிது.. மூன்றாம் பிறையில் வரும் நாளிது!
அட்சய திருதியை அன்று...இதை வைத்துப் பூஜை செய்வோம்.. காலத்தின் அவசியம் இது!
IPL 2026: கடைசி வரை போராட்டம்.. 10 ரன்கள் வித்தியாயசத்தில் வெற்றியை நழுவ விட்ட சென்னை சூப்பர் கிங்ஸ்
மகளிர் சக்தியை அவமதித்தவர்களுக்குத் தண்டனை நிச்சயம்.. பிரதமர் மோடி ஆவேச உரை!
எடுக்கவோ கோர்க்கவோ.. ஏட்டில் படித்ததை.. பார்த்து பார்த்து .. பரவசத்தில் புதுப் பூவாய் பூத்தேன்!
Priase the Husband Day: கணவரை மனசார பாராட்டுங்கள் இன்னிக்கு!
பூவிதா...! நான் உன்னை நேசிக்கிறேன்.. (மெல்லிய பூங்காற்று - 3)
{{comments.comment}}