ஜெயலலிதா இடத்தில் விஜய்...செங்கோட்டையனின் சட்டை பையை கவனிச்சீங்களா?

Feb 23, 2026,05:20 PM IST

வேலூர் : விஜய்யின் தவெக கட்சியில் இணைந்த பிறகு அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஆரம்பத்தில் மிக பரபரப்பாக பேசப்பட்டார். தவெக.,வினர் இடையே பெரும் எதிர்பார்ப்பையும். நம்பிக்கையையும் ஏற்படுத்திய செங்கோட்டையன், தற்போது மொத்தமாக தனது அரசியல் நிலைபாட்டையே மாற்றிக் கொண்டாரோ என்ற சந்தேகம், இன்று வேலூரில் நடைபெற்ற தவெக நிர்வாகிகள் சந்திப்பில் கலந்து கொண்ட செங்கோட்டையனை பார்த்த அனைவருக்கும் தோன்றி இருக்கும்.


எம்ஜிஆர் காலத்தில் இருந்தே அதிமுக.,வில் மிக முக்கியமான முகங்களில் ஒன்றாக இருந்து வந்தவர் செங்கோட்டையன். எம்ஜிஆருக்கு பிறகு ஜெயலலிதா காலத்திலும் அப்படி தான். 52 ஆண்டுகளுக்கும் மேலாக அதிமுக.,வில் அமைச்சர், எம்எல்ஏ, மாவட்ட செயலாளர் என பல பொறுப்புக்களை வகித்த செங்கோட்டையன், திடீரென கட்சி தலைமைக்கு எதிராக கழகக் குரல் எழுப்பி, அதிமுக.,விற்கு எதிராக செயல்பட்டார். இதனால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அதற்கு பிறகு அவர் என்ன செய்ய போகிறார் என பலரும் கவனித்துக் கொண்டிருந்த போது யாரும் எதிர்பாராமல் தவெக.,வில் சென்று இணைந்தார்.




விஜய் முன்னிலையில் தவெக.,வில் இணைந்த போதும் கூட தன்னுடைய சட்டை பையில் ஜெயலலிதாவின் படத்துடன் தான் இருந்தார் செங்கோட்டையன். இது பற்றி செய்தியாளர்கள் கேட்ட போது, அம்மா வழியில் என்றும் நடப்பவன் நான். அவரது விஸ்வாசி என்பது போன்று சொன்னார். எப்போதும் தன்னுடைய பையில் ஜெயலலிதா படம் இருக்கும் என்ற ரீதியில் அவரே விளக்கம் அளித்தார். சில நாட்களுக்கு முன்பு வரை அவர் அப்படி தான் இருந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக, குறிப்பாக சேலம் தவெக கூட்டத்தில் இருந்து அக்கட்சியில் ஆதவ் அர்ஜூனா, செங்கோட்டையன், புஸி ஆனந்த் போன்ற நிர்வாகிகள் ஓரங்கட்டப்படுகிறார்களோ என்ற சந்தேகம் எழுந்தது.


காரணம், அதற்கு முன்பு வரை நடந்த தவெக கூட்டங்கள் அனைத்திலும், விஜய்க்கு முன் செங்கோட்டையன், ஆதவ் அர்ஜூனா, புஸி ஆனந்த் போன்றவர்கள் பேசி வந்தார்கள். ஆனால் சேலம் கூட்டத்தில் அந்த மாவட்ட தவெக நிர்வாகி, ராஜ்மோகன், விஜய் ஆகிய 3 பேர் மட்டுமே பேசினார்கள். செங்கோட்டையன், ஆதவ் உள்ளிட்டோர் மேடை ஏற்றப்படக் கூட இல்லை. இன்று வேலூரில் நடந்த கூட்டத்திலும் அதே நிலை தான் இருந்தது. ஆதவ், செங்கோட்டையன் ஆகியோர் விஜய் வருவதற்கு முன்பு வரை பிரச்சார வாகனத்தின் மீது காணப்பட்டார்கள். ஆனால் நிகழ்ச்சி துவங்கியது முதல் அவர்கள் இருவரையும் காணவில்லை. அதே போல் சமீப காலமாக செங்கோட்டையனிடம் செய்தியாளர்கள் கூட அதிகம் மைக்கை நீட்டுவதில்லை. கட்சி தொடர்பான செய்தியாளர்களிடம் கேள்விகள், சந்திப்புகள் ஆகியவற்றில் அருண் ராஜ், நிர்மல் குமார் ஆகியோர் தான் பதிலளித்து வருகிறார்கள்.


அதை விட முக்கியமானது, 50 ஆண்டுகளாக செங்கோட்டையன் சட்டை பையில் ஜெயலலிதா படம் இருந்த இடத்தில், இன்று விஜய்யின் படம் இருந்தது. எப்போது அம்மா படத்தை வைத்திருப்பேன் என்றவர், இப்போது ஜெயலலிதாவின் படத்தை எடுத்து விட்டு, விஜய் படத்தை வைத்துள்ளாரே என பலரும் அதிர்ச்சியும், ஆச்சரியமும் தெரிவித்தனர். தவெக.,வின் தான் ஓரம் கட்டப்படுவதால், தனது செல்வாக்கை எப்படியாவது மீண்டும் தூக்கி நிறுத்த, விஜய் படத்தை சட்டை பையில் வைக்க துவங்கி விட்டாரா? இதனால் விஜய் ரசிகர்களிடம் தனக்கு மதிப்பு உயரும் என நினைக்கிறாரா? அல்லது இனியும் ஜெயலலிதாவின் படத்தை வைத்துக் கொள்வதில் என்ன பலன் கிடைக்க போகிறது என நினைத்து விட்டாரா? அல்லது ஜெயலலிதா படத்தை வைத்திருப்பது தொடர்பாக செங்கோட்டையனுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்பட்டால் படத்தை மாற்றி விட்டாரா? என்பது போன்ற சந்தேகங்கள் எழுந்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2026...இன்று இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

news

ஐபிஎல் டி20 கிரிக்கெட் 2026 : இன்று கோல்கத்தா-லக்னோ அணிகள் மோதல்

news

Chettinadu Kitchen: செட்டிநாட்டு அடுப்படியின் அதிரடியில்.. இது சைவமா ...அசைவமா??

news

தேவகோட்டையில் மாணவர்கள் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம்.. 100% வாக்களிக்க மக்களுக்கு அழைப்பு!

news

பங்குனி தேய்பிறை அஷ்டமி.. ஈரோடு ராட்டைசுற்றி பாளையம் காலபைரவர் கோவிலில் விசேஷம்!

news

சிவப்பழகி.. அவளன்றி ஓரணுவும் அசையாது.. அவளன்றி யார் பசியும் ஓயாது!

news

Vrischikasana: வேதாவின் யோகா.. ரப்பர் மாதிரி வளையுறாங்களேய்யா.. முயன்றால் முடியாததே இல்லை

news

புதுச்சேரி, கேரளா, அசாம் சட்டசபை தேர்தல் 2026...காலையிலேயே விறுவிறுப்பான வாக்குப்பதிவு

news

மதிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்