கார்த்திகை மாதத்தில் தீபம் ஏற்றி வழிபடுவது ஏன் தெரியுமா?

Su.tha Arivalagan
Nov 19, 2026,02:44 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


கார்த்திகை மாதம் நவம்பர் 17ஆம் தேதி செவ்வாய்க்கிழமை பிறந்துள்ளது. கார்த்திகை மாதத்தை திருமண மாதம் என்று இந்து சாஸ்திரம் கூறுகிறது.தமிழ் மாதங்களில் எட்டாவது மாதமான கார்த்திகை மாதம்  நாம் எட்ட வேண்டிய இலக்கு எது என்பதை காட்டும் மாதமாகும்.வழிகாட்டு மாதமாக இருப்பதால்தான் விளக்கு ஏற்றி கார்த்திகை மாதத்தில் கொண்டாடி வருகிறோம். இம்மாதத்தில் அதிகாலையிலும், மாலையிலும் தீபம் ஏற்றி வழிபாடு செய்வது சிறப்பான பலன்களை பெற்றுத் தரும் என்று சாஸ்திரத்தில்  கூறப்பட்டுள்ளது . 


அகத்தில் உள்ள இருளையும், புற இருளையும் இவ்விரண்டையும் நீக்கி ஆன்மீக வழியை காட்டும் அற்புதமான இந்த கார்த்திகை மாதத்தில் மிகச் சிறப்பான பண்டிகை கார்த்திகை தீபத்திருநாள். இந்த கார்த்திகை தீப பண்டிகை பழந்தமிழர் சங்க காலம் தொட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வந்தன. தமிழ் இலக்கியங்களில் கார்த்திகை தீப விழாவினை பற்றிய செய்திகளும் காணப்படுகின்றன.


கார்த்திகை மாதம் முழுவதும் பக்தர்கள் சுவாமி அய்யப்பனுக்கு மாலை அணிந்து விரதம் இருந்து சபரிமலை செல்வார்கள். இறைவனை தீப சொரூபத்தில் வழிபடும் மாதம் இது.சிவபெருமானை வழிபாடு செய்வது மிக சிறந்த பலன்களை தரும். திருமால்,பிரம்மா உட்பட்ட  முப்பத்து முக்கோடி  தேவர்களுக்கும் சிவபெருமான் ஜோதி வடிவில் காட்சி அளித்த நாள் திருக்கார்த்திகை என்று கருதப்படுகிறது. கார்த்திகை மாதம் பௌர்ணமி மற்றும் கார்த்திகை நட்சத்திரம் ஒன்று சேரும் நாளில் கொண்டாடப்படுகின்றது 


கார்த்திகை மாத பெயர் காரணம்:




கார்த்திகை மாதம் கருமையான மேகங்களைக்  கொண்டு அதிக அளவு மழை பொழியும் கார்காலம் ஆகும்.எனவே,  காந்தள்  பூக்கள் அதிக மலரும் மாதம்.ஆதலால் இம்மாதம் "கார்த்திகை" என பெயர் பெற்றது என்று கூறப்படுகிறது.


திருவண்ணாமலை உச்சியில் திருக்கார்த்திகை அன்று கார்த்திகை' மகா தீபம்' ஏற்றப்படுகிறது.அன்று லட்சக்கணக்கான பக்தர்கள்   கிரிவலம் மேற்கொள்வார்கள்.


கார்த்திகை மாதத்தில் வரும் விசேஷமான மற்றும் விரத நாட்கள் பற்றிய தகவல்களை பார்ப்போம்..


கார்த்திகை 4: வெள்ளிக்கிழமை சுப முகூர்த்தம், ஏகாதசி.

கார்த்திகை 6: ஞாயிற்றுக்கிழமை பிரதோஷம்.

கார்த்திகை 7: பௌர்ணமி இன்று இரவு 11:30 மணி முதல்.

கார்த்திகை 8: செவ்வாய் பௌர்ணமி, திருக்கார்த்திகை தீபம், இன்று இரவு 09: 24 மணி வரை பௌர்ணமி திதி.

கார்த்திகை 11:  வெள்ளி சங்கடஹர சதுர்த்தி.

கார்த்திகை 13: ஞாயிறு. சஷ்டி( தேய்பிறை)  சுப முகூர்த்தம்.

கார்த்திகை 15: செவ்வாய் அஷ்டமி( தேய்பிறை).

 கார்த்திகை 16 : புதன். நவமி திதி .

 கார்த்திகை 17 : வியாழன் தசமி.

கார்த்திகை 18: வெள்ளி.ஏகாதசி திதி சுபமுகூர்த்தம்.

கார்த்திகை 20: ஞாயிறுபிரதோஷம், சுப முகூர்த்தம்.

கார்த்திகை 21: திங்கள் மாத சிவராத்திரி.

கார்த்திகை 22: செவ்வாய். அமாவாசை திதி.

கார்த்திகை 24: வியாழன். சுப முகூர்த்தம்.

கார்த்திகை 27 :சதுர்த்தி திருவோண நட்சத்திரம்.

கார்த்திகை 28 :திங்கள். சுப முகூர்த்தம்.

கார்த்திகை 29: செவ்வாய். சஷ்டி விரதம்.


நவம்பர் 17ஆம் தேதி முதல் டிசம்பர் 15ஆம் தேதி வரை உள்ள, 29 நாட்கள் கொண்ட கார்த்திகை மாதம் நம் அனைவர் வாழ்விலும் ஒளி வீசும் மாதமாக அமைய வேண்டும்.


மேலும் இது போன்ற  சுவாரஸ்யமான  தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன்.எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி பாலசுப்ரமணி .