சிந்தனை செய் மனமே!
- டி. கலைமணி
ஒவ்வொரு மனிதரும் ஒவ்வொரு வழியில் சிறந்தவர்தான்.
யாரும் யாரை விடவும் உயர்ந்தவர் என்றோ தாழ்ந்தவர் என்றோ மதிப்பு மிக்கவர் என்றோ ! அறிவானவர் என்றோ! அழகானவர் என்றோ! உங்களையும், நீங்கள் மற்றவரையும் நினைக்க வேண்டாம்..
இந்த பூமியில் ஒவ்வொரு மனிதர்களுமே சிறப்புக்குரியவர் தான். அனைவருமே தத்தம் துறைகளில் சிறப்பானவர்களே
வெட்ட வெளியில், உச்சி வெயிலில் வியர்வை சிந்த நிலத்தில் உழைத்து களைப்பவர்கள் (ஆண் - பெண்) யாருக்கும், எல்லோருக்கும் உள்ளதைப் போல், சுயமரியாதை, கோபம், வலி, மகிழ்ச்சி, பசி, உறக்கம், இழிசொல்லின் வலி, புறக்கணிப்பின் வலி போன்ற தனிமனித உணர்ச்சிகள் அத்தனையும் அனைவருக்கும். உண்டு ..
உண்மையில் உயர்ந்தவர் தாழ்ந்தவர் யாருமில்லை, சில வாய்ப்புகள்தான் யார் இந்தப் பொழுதில் அவசியமானவர் என்பதை புரிய வைக்கிறது.
இந்த புரிதலை உணர்ந்து கொள்பவர்கள் மனிதர்கள்..
பொய் சொன்னால் பாவம்..
ஏமாத்தினால் பாவம்..
என்று நம்மதான் ..
பயந்து வாழ்கிறோம்
ஆனால் நமக்கு இவற்றை செய்தவர்கள் நல்லாத்தான் வாழுதுங்க .
(சென்னையைச் சேர்ந்த டி. கலைமணி, பக்தி, தத்துவம் என பல் சுவை பாடல்கள், கவிதைகள் எழுதுவதில் கை தேர்ந்தவர்