- தி. மீரா
பரமபத விளையாட்டு என்பது ஒரு சாதாரண விளையாட்டு மட்டும் அல்ல. இதை மிகவும் ஆர்வமாக முன்னோர்கள் வைகுண்ட ஏகாதசி நாள் மகா சிவராத்திரி போன்ற நாட்களில் விளையாடுவார்கள். குழந்தைகளையும் விளையாடச் சொல்வார்கள்.அது மிகவும் விறுவிறுப்பாகச் செல்லும் ஒரு விளையாட்டு. இன்றும் விளையாடுவது பழக்கத்தில் ஒரு சில இடங்களில் உள்ளது. அதில் ஆழமான ஆன்மீகத் தத்துவம் மறைந்து உள்ளது.
பொதுவாக 1 முதல் 100 வரை எண்கள் கொண்ட பலகையில் விளையாடப்படுகிறது. குலுக்கல் டைம்ஸ் அல்லது தாயக்கட்டை மூலம் முன்னேற வேண்டும். ஏணி வந்தால் மேலே ஏறி முன்னேற்றம் கிடைக்கும். பாம்பு வந்தால் கீழே விழுந்து பின்னடைவு ஏற்படும். 100-ஐ அடைவதே இலக்கு (பரமபதம்).
இந்த விளையாட்டு மனித வாழ்க்கையை பிரதிபலிக்கிறது. வாழ்க்கை தான் இந்த பரமபத விளையாட்டு. இது நமது வாழ்க்கை பயணத்தை தான் குறிக்கிறது. 1 முதல் 100 வரை செல்லும் பாதை, மனிதன் பிறப்பு முதல் மோட்சம் வரை செல்லும் பயணமாக கருதப்படுகிறது.
ஏணி என்பது நல்ல குணங்களை குறிக்கிறது. ஏணிகள் நம்முடைய நல்ல பண்புகளை குறிக்கின்றன. அதாவது சத்தியம் (உண்மை), அன்பு, தானம், பொறுமை, நேர்மை. இவை மனிதனை உயர்த்தி வாழ்க்கையில் முன்னேற்றம் தருகின்றது.வாழ்வில் நாம் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய மதிப்பீடுகள்.
பாம்பு என்பது கெட்ட குணங்களை குறிக்கிறது. பாம்புகள் நம்முடைய தீய குணங்களை குறிக்கின்றன. அதாவது,
பொய், கோபம், பேராசை, பொறாமை, வெறுப்பு, அலட்சியம்.

இவை மனிதனை கீழே தள்ளி, முன்னேற்றத்தை தடுக்கின்றது.அத்தகைய குணங்களால் மனிதன் உயர்வான இலட்சியத்தை இழந்து விடுகிறான்.
குலுக்கல் டைஸ் வாழ்க்கையில் அதிர்ஷ்டத்தை குறிக்கிறது.தாயக்கட்டை மூலம் நாம் நகர்ந்து செல்வது நாம் எடுக்கும் முடிவுகள் ஒவ்வொரு முறையும் குறிக்கிறது.அதனால் ஏற்படும் பின் விளைவுகள் நாம் சந்திக்கிறோம்.தீதும் நன்றும் பிறர் தர வாரா என்பதே.
ஆகவே நல்ல குணங்களால் மட்டுமே நிலையான முன்னேற்றம் கிடைக்கும் என்பதே உண்மை.
இறுதி இலக்கு என்பது கடவுளின் திருவடி என்பதே அல்லது வாழ்க்கையில் நமக்கு ஏற்படும் தெளிவு எனக் கூறலாம்.
பரமபதம் (மோட்சம்) 100 ஆம் இடம், வாழ்க்கையின் இறுதி இலக்கு ஆன்மிக உயர்வு, கடவுளை அடைதல்.
"நல்ல பண்புகள் உயர்த்தும்; தீய பழக்கங்கள் தாழ்த்தும்; வாழ்க்கை ஒரு சோதனை இறுதியில் நற்குணமே வெற்றி பெறும்."இந்தப் பயணத்தில் நாம் ஏறுவதும் இறங்குவதும் நமது கையில்தான் உள்ளது.நமது வாழ்க்கைக்கு நாம் மட்டுமே பொறுப்பு என்பதே
(ஈரோட்டைச் சேர்ந்த பாவலர் முனைவர் தி. மீரா, ஆசிரியர், தென்தமிழுக்காக கட்டுரைகள், கவிதைகள் படைத்து வருகிறார், கிரியேட்டிவ் எழுத்தாளர்)
Joseph Vijay Vs Udayanidhi Stalin: சட்டசபை திமுக தலைவராக உதயநிதி ஸ்டாலின் தேர்வு!
Vijay Record: 828 நாட்களில்.. இதுவே முதல் முறை...தமிழக அரசியல் வரலாற்றை மாற்றி எழுதிய விஜய்!
CM Vijay: எல்லாமே 10.. விஜய்யின் பதவியேற்பு விழா சென்டிமென்ட்டை கவனிச்சீங்களா?
கறுப்பு நிற கோட்டில்.. வித்தியாசமான கெட்டப்பில் பதவியேற்பு விழாவில் விஜய்!
CM Joseph Vijay: "C ஜோசப் விஜய் எனும் நான்"... தமிழக முதல்வராக பதவியேற்றார் விஜய்!
Vijay Sarkar: இது தான் விஜய் சர்க்கார்.. 9 அமைச்சர்களுடன் உற்சாக பதவியேற்பு.. உற்சாகத்தில் தவெக!
Assembly Protem Speaker: தற்காலிக சபாநாயகராக சோழவந்தான் எம்எல்ஏ கருப்பையா பதவியேற்றார்!
MK Stalin Attacks: எடுத்த எடுப்பிலேயே பணம் இல்லைன்னு பேச ஆரம்பிக்காதீங்க விஜய்.. மு.க.ஸ்டாலின்
CM Vijay Speech: கஜானாவில் என்ன இருக்கோ.. முதல்ல வெள்ளை அறிக்கை.. பிறகுதான் வேலையே.. விஜய்
{{comments.comment}}