Proverbs: அரைக் காசை ஆயிரம் பொன்னாக்கியவளும் பொண்டாட்டி..

Su.tha Arivalagan
May 14, 2026,04:49 PM IST

தமிழ் மொழியின் சிறப்பம்சங்களில் ஒன்றான பழமொழிகள் (Proverbs), வாழ்க்கையின் ஆழமான தத்துவங்களையும் அனுபவங்களையும் மிகச் சுருக்கமாகக் கூறக்கூடியவை.


டி. கலைமணி தொகுத்துக் கொடுத்துள்ள சில முக்கியமான தமிழ் பழமொழிகளை நாம் இங்கே பார்ப்போம்.


1.அரைக் காசை ஆயிரம் பொன்னாக்கியவளும் பொண்டாட்டி! ஆயிரம் பொன்னை அரைக் காசாக ஆக்கிறவளும் பொன்டாட்டி.


2.பொய் சொன்ன வாய்க்கு போசனம் சிடையாது.


3. வாழ்க்கை ஒரு வெங்காயம் : அதை உரிக்கும் போது கண்ணீர் வரும்


4.சங்கு சுட்டாலும் வெண்மை தரும்  


5. வளரும் பயிர் முளையிலே தெரியும்




6. தாயும் பிள்ளையும் ஆனாலும் வாயும் வயிறும் வேறு.


7. மதியார் வாசலை மிதிக்க வேண்டாம்.


8. கட்டியவனுக்கு ஒரு வீடு: கட்டாதவனுக்கு பல வீடு.


9. கினற்று நீரை வெள்ளம் கொண்டு போகுமா?


10. கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் பண்ணுகிறதா?


11.உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா?


12. புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்டது போல


13. மாமியார் உடைத்தால் மண்கலம், மருமகள் உடைத்தால் பொன்கலம்


14. கல்லைக் குத்துவானேன் கைநொகிறதென்று அழுவானேன்.


15. ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்.


16. ஆத்திரக் காரனுக்கு புத்தி மட்டம்.


17. காலை நேரம் பொன்னான நேரம்


18. தன் வினைத் தன்னைச் சுடும் ஓட்டப்பம் வீட்டைச் சுடும்


19. உழைப்பவனுக்கு வெகுமதி, விதைப்பவனுக்கு அறுவடை


20. சோழியும் குடுமி சும்மா ஆடாது.


21. சமையல் மோசமானால் ஒரு நாள் நஷ்டம், அறுவடை மோசமானால் ஓரு வருடம் நஷ்டம் ,விவாகம் மோசமானால் வாழ்நாள் முழுவதும் நஷ்டம்.


22. வெள்ளம் வரும் முன் அணை போட வேண்டும்.


23. வீட்டைக் கட்டிப்பார், கல்யாணம் பண்ணிப் பார். 


24. விடிய விடிய இராமாயணம் கேட்டு சீதைக்கு இராமன் சித்தப்பா என்றானாம் .


25 .கேட்பது இராமாயணம், இடிப்பது பெருமாள் கோயிலை.


26 .விருந்தும் மருந்தும் மூன்று வேளை.


27 .விரலுக்கேற்ற வீக்கம்.


28. வச்சா குடும்பி, செரச்சா மொட்டை.


39. காக்கைக்கு தன் குஞ்சு பொன்குஞ்சு. 


30. பிள்ளையார் பிடித்து வைக்கக் குரங்காய் முடிந்தது.


(சென்னையைச் சேர்ந்த டி. கலைமணி, பக்தி, தத்துவம் என பல் சுவை பாடல்கள், கவிதைகள் எழுதுவதில் கை தேர்ந்தவர்)