சிந்தனை.. கணவன் சொல்லை மீறியதன் விளைவு : தாட்சாயிணி!
- டி. கலைமணி
இந்த உலகிற்கு நிகர் அன்னையும் தந்தையும் என தெரிவித்தவர்: விநாயகர்.
ஒருவர் சிரசினை மற்றொருவருக்கு பொருத்தும் இக்கால விஞ்ஞான முயற்சியின் ஆரம்பம்: விநாயகர்.
அக்கால அணுகுண்டு: பிரம்மாஸ்திரம்
கலப்பு திருமணம்: முருகன்.
அன்றே பெண்ணுக்கு சம உரிமை: அர்த்தநாரீஸ்வரர்.
கணவன் சொல்லை மீறியதன் விளைவு : தாட்சாயிணி
எல்லை தாண்டியதன் விளைவு : சீதா
கடவுளுக்கு பக்தியின் மிகுதியில் எச்சில் பழங்களை தந்தவர்: சபரி
தான் அணிந்த மாலையை தந்தவர்: ஆண்டாள்.
அறுசுவை அற்ற உணவை அளித்தவர் : விதுரர்
அதையும் விரும்பி உண்டவர்: பார்த்த அசுரரி
ஓர் சத்ரியன் சாமியார் ஆகலாம் : விஸ்வாமித்திரர்.
ஓர் பிராமணன் ஆயுதம் ஏந்தி போர்க்களம் புகலாம்: பிரசுராமர்.
தந்தை கூறியதால் ஏன் என்று மறுகேள்வி கேட்காமல் தாயின் தலையைக் கொய்தவர் : பரசுராமர்
ஓர் பட்டியலினத்தவர் மிகச் சிறந்த நாயன்மார் ஆகலாம்: நந்தனார்
ஓர் வேடுவனும் நாயன்மார் ஆகலாம்: கண்ணப்ப நாயனார்
ஒரு திருடனும் இதிகாசம் எழுதலாம்: வால்மீகி
கொடுத்த வாக்கை காப்பாற்ற இறுதிவரை பிரம்மச்சரியம்: பீஷ்மர்.
அடுத்தவர் மனைவியின் மீது ஆசை கொண்டால் அது விலங்கானாலும் மனிதராணாலும், இராட்சனாணாலும் ஏன் தேவாதி தேவரே ஆனாலும் தண்டனை உண்டு: வாலி, கீசகன், இராவணன், இந்திரன்.
(சென்னையைச் சேர்ந்த டி. கலைமணி பக்தி, தத்துவம் என பல் சுவை பாடல்கள், கவிதைகள் எழுதுவதில் கை தேர்ந்தவர்)