ஐக்கிய அமீரகத்தில்.. ஜிம்னாஸ்டிக்ஸ் - ஏரோபிக்ஸில் அசத்தும் சாதனைச் சிறுமிவேதா ஸ்ரீ!

Su.tha Arivalagan
Feb 11, 2026,04:03 PM IST

- தெ.நாராயண லெட்சுமி, B.E


ராஸ் அல் கைமா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ்: ஐக்கிய அரபு எமிரேட்ஸில் படித்து வரும் வேதாஸ்ரீ இளம் வயதிலேயே ஏரோபிக்ஸ் மற்றும் ஜிம்னாஸ்டிக்ஸ் இரண்டிலும் சக்கை போடு போட்டு வருகிறார். வருங்காலத்தில் மிக்ச சிறந்த ஐிம்னாஸ்ட் ஆக உருவெடுத்தாலும் உருவெடுப்பார் என்பதில் சந்தேகமே இல்லை.


ஆ.ச. வேதா ஸ்ரீ, ராஸ் அல் கைமாவில் உள்ள இந்தியன் பள்ளியில், 2ம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளியின் வருடாந்திர விளையாட்டு விழாவில், ஜிம்னாஸ்டிக்ஸ் மற்றும் ஏரோபிக்ஸ் ஆகிய இரு துறைகளிலும் தனது அசாத்திய திறமையை வெளிப்படுத்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார் மாணவி வேதா ஸ்ரீ.




ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில், உடல் நெகிழ்வுத்தன்மை, துல்லியமான சமநிலை மற்றும் நேர்த்தியான அசைவுகள் மூலம் தனது கடின உழைப்பை மேடையில் நிரூபித்தார். அவரது ஒவ்வொரு அசைவும் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது.


ஏரோபிக்ஸ் பிரிவில், துரிதமான இசைக்கு ஏற்ப, முகத்தில் புன்னகை மாறாமல் அவர் ஆடிய ஒத்திசைவான நடனம், பள்ளி வளாகம் முழுவதையும் உற்சாகத்தில் நனைய வைத்தது.


இளம் வயதிலேயே கடின உழைப்பு, சுய ஒழுக்கம் மற்றும் விடாமுயற்சி ஆகியவற்றைத் தனது தாரக மந்திரமாகக் கொண்டு வேதா ஸ்ரீ முன்னேறி வருகிறார். விளையாட்டும் கல்வியும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்பதைத் தனது சாதனையின் மூலம் இந்தச் சிறுவயதிலேயே வேதா ஸ்ரீ நிரூபித்துக் காட்டியுள்ளார் என்பதில் சந்தேகம் இல்லை..




பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் வேதா ஸ்ரீயின் இந்தச் சாதனையைப் பாராட்டி, அவரது எதிர்காலம் சிறக்க வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றனர். இந்த செய்தியை நம்முடன் பகிர்ந்து மகிழ்ந்துள்ளார் வேதாஸ்ரீயின் தாயார் தெ. நாராயணலட்சுமி.


(தெ. நாராயணலட்சுமி, ஐக்கிய அரபு அமீரகத்தின் ராஸ் அல் கைமாவில் வசித்து வருகிறார்)