இனிய புத்தாண்டு 2026.. புத்தாண்டை சந்தோஷமாக கொண்டாட தயாரோவோம்!

Su.tha Arivalagan
Dec 31, 2025,12:25 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


தென்தமிழ் இணையதளத்தில் பயணிக்கும் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.


டிசம்பர் 31, 20 25 புதன்கிழமை இவ் வருடத்தின் இறுதி நாளில் நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோம். இன்று நள்ளிரவு 12:00 மணிக்கு புத்தாண்டு 20 26 பிறக்கிறது. இந்த நாள் ஒரு அற்புதமான நாள் ஏனெனில், 20 25- க்கு விடை கொடுத்து புதிய நம்பிக்கைகளுடன், ஆர்வத்துடன், மகிழ்ச்சியுடன் வரவேற்கக் கூடிய அற்புதமான தருணம். ஜனவரி 1, வியாழக்கிழமை  20 26 -ஐ வரவேற்க பல நாடுகளில் உள்ள மக்கள்  கொண்டாட்டங்கள், பல கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு புது வருடத்தை வரவேற்க தயார் நிலையில் உள்ளனர்.


புத்தாண்டு 20 26 : இல் ஜனவரி மாதம் வரும் விசேஷ நாட்கள், பண்டிகைகள் மற்றும்விரத நாட்கள் பற்றி பார்ப்போம்..




ஜனவரி 1 - ஆங்கில புத்தாண்டு,பிரதோஷம்.

ஜனவரி 2- ஆருத்ரா அபிஷேகம்.

ஜனவரி 3 -பௌர்ணமி.

ஜனவரி 4 -பிரதமை.

ஜனவரி 6- சங்கடஹர சதுர்த்தி.

ஜனவரி 7- ஸ்ரீ தியாக பிரம்ம ஆராதனை.

ஜனவரி 9- தேய்பிறை சஷ்டி விரதம்.

ஜனவரி 11- அஷ்டமி, கூடாரை வெல்லும் உற்சவம்.

ஜனவரி 12- நவமி, திரைலோக்கிய கௌரி விரதம்.

ஜனவரி 13- தசமி.

ஜனவரி 14 -ஏகாதசி விரதம், போகி பண்டிகை.

ஜனவரி 15 -தைப் பொங்கல்.

ஜனவரி 16 -மாட்டுப் பொங்கல், திருவள்ளுவர் தினம்.

ஜனவரி 17- உழவர் திருநாள், மாத சிவராத்திரி.

ஜனவரி 18 -தை அமாவாசை.

ஜனவரி 19- பிரதமை. திருவோண விரதம்.

ஜனவரி 21-  மதுரை மீனாட்சி தெப்ப உற்சவம்.

ஜனவரி 22 -சதுர்த்தி விரதம்.

ஜனவரி 23 -வசந்த பஞ்சமி.

ஜனவரி 24 -சஷ்டி விரதம்.

ஜனவரி 25- சூரிய சந்திர விரதம்  .

ஜனவரி 26- இந்திய குடியரசு தினம். வாஸ்து நாள்.

ஜனவரி 27 -கார்த்திகை விரதம்.

ஜனவரி 28 - சுபமுகூர்த்தம்.

ஜனவரி 29- ஏகாதசி விரதம் .

ஜனவரி 30- பிரதோஷம்.

ஜனவரி 31- கரிநாள்.


தென்தமிழ் வாசகர்கள் அனைவருக்கும் பிறக்கும் புத்தாண்டு 2026 உடல்நலம், நீள் ஆயுள், நிறை செல்வம்,உயர் புகழ், மெய்ஞானம்  பெற்று மேலோங்கி வாழ தென் தமிழ் சார்பாக இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். வரைந்து எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி.