- கலைவாணி கோபால்
சென்னை: சென்னையில் ஜனவரி 1, 2026 ஆங்கில புத்தாண்டு வருவதை முன்னிட்டு கடற்கரை சாலைகளில் சில போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
சென்னையில், எப்போதும் புத்தாண்டு என்றாலே அனைவரும் மனதிலும் வருவதும் மெரினா கடற்கரைதான். இதில் மக்கள் கூட்டம் அதிகம் வரும் என்பதால் யாருக்கும் எந்த பாதிப்பும் வராத வகையில் காவல்துறையினர் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து வழக்கம். இந்த வருடமும் அதேபோல செய்யப்பட்டுள்ளன.
என்னவெல்லாம் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்னென்ன என்பதை இப்போது பார்ப்போம்

கடற்கரை காமராஜர் சாலையில் இன்று இரவு 7 மணி முதல் நாளை காலை 6 மணி வரை போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடற்கரை உட்புறச் சாலைகளில் ஏழு மணி முதல் வாகனங்கள் நிறுத்த அனுமதி கிடையாது என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சுவாமி விவேகானந்தா சாலை தீவுத்திடல் மைதானம் உள்ளிட்ட இடங்களிலும் வாகனங்கள் நிறுத்தலாம் என அறிவிப்பு வெளியாகி உள்ளது . அனைத்து வாகனங்களும் கலங்கரை விளக்கம் சந்திப்பு வழியாக மட்டுமே வெளியே செல்ல அனுமதிக்கப்படும் என்றும், அதைத்தொடர்ந்து அடையார் மற்றும் காமராஜர் சாலை செல்லும் வழிகளில் வாகனங்கள் செல்லாமல் கிரீன்வேஸ் சாலை மந்தைவெளி வழியாக வாகனங்கள் செல்ல வேண்டும் என்றும் காவல்துறை அறிவித்துள்ளது.
மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் போக்குவரத்து துறை இத்தகைய வழித்தட மாற்றங்களை அறிவித்துள்ளது.
மெரீனா கடற்கரை மட்டுமல்லாமல் பெசன்ட் நகர் கடற்கரை உள்ளிட்ட இடங்களிலும் மக்கள் பெருமளவில் கூடுவார்கள் என்பதால் அங்கும் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தனிமை.. ஒரு வசீகரம்!
எங்கள் விவகாரத்தில் தலையிட நீங்கள் யார்?.. மதிமுக, விசிக, கம்யூ.களுக்கு காங். எம்.பி. கேள்வி
ஏன் கடவுளைப் புகழ்கிறோம்.. Why We Praise the Lord?
கேரள க்ரைம் ஸ்டோரி!
திருவாதிரையில் ஒரு வாய் களி.. சரி அதை விடுங்க.. களி பிறந்த கதை தெரியுமா?
சிவனுக்கு நெய்வேத்யமாக செய்யப்படும் திருவாதிரை களி.. எப்படிச் செய்யணும் தெரியுமா?
அமைதியான புத்தாண்டுக் கொண்டாட்டம்.. தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீஸ் பாதுகாப்பு!
இனிய புத்தாண்டு 2026.. புத்தாண்டை சந்தோஷமாக கொண்டாட தயாரோவோம்!
Happy New year 2026: புத்தாண்டுக் கொண்டாட்டத்திற்குத் தயாராகும் மக்கள் + காவல்துறையினர்!
{{comments.comment}}