TN Elections Results: தபால் வாக்குகளில் திமுக முன்னிலை.. பெரம்பூரில் அதிர வைத்த விஜய்!
May 04, 2026,09:02 AM IST
சென்னை: தமிழ்நாடு முழுவதும் சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. முதலில் நடந்த தபால் வாக்குகள் எண்ணிக்கையில் பெருவாரியான தொகுதிகளில் திமுக முன்னிலை வகித்தது. அதேசமயம், பெரம்பூரில் தவெக தலைவர் விஜய் அபார வாக்குகளைப் பெற்று முன்னிலை பெற்றார்.
அதேமயம், திருச்சி கிழக்கு தொகுதியில் தவெக தலைவர் விஜய், தபால் வாக்குகளில் பின்னடைவைச் சந்தித்துள்ளார். இது அவரது தொண்டர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது முதல் சுற்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. அதில் திமுகவுக்கு பல தொகுதிகளில் தவெக கடும் போட்டியைக் கொடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் தவெகவினர் உற்சாகமடைந்துள்ளனர்.
சில சுற்றுக்கள் போன பிறகுதான் யார் உறுதியான நிலையில் முன்னிலை வகிக்கிறார்கள் என்பது தெரிய வரும்.