இடைக்கால பட்ஜெட்: தமிழக அமைச்சரவை பிப்., 5ல் கூடுகிறது
சென்னை: தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட் விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் பிப்., 5ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூடுகிறது.
பொதுவாக தேர்தல் நடைபெறும் ஆண்டுகளில், முழுமையான பட்ஜெட்டிற்குப் பதிலாக அரசின் அடுத்த சில மாதங்களுக்கான செலவினங்களை மேற்கொள்ள இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கமாகும். அந்த வகையில், 2026-27 நிதியாண்டிற்கான இடைக்கால பட்ஜெட் விரைவில் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
இதில் இடம் பெற வேண்டிய முக்கிய அறிவிப்புகள் மற்றும் நிதி ஒதுக்கீடுகள் குறித்து அமைச்சரவை ஆலோசித்து ஒப்புதல் அளிக்க உள்ளது. இந்த கூட்டத்தில், கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் தற்போதைய நிலை மற்றும் புதிய மக்கள் நலத் திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் பிப்ரவரி 5-ம் தேதி அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இந்தக் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.