ஓமனில் 'தமிழ்நாடு நாள் விழா - 2026' கோலாகலம்.. கலைப் போட்டிகள் மற்றும் சிறப்பு நிகழ்வுகளுடன்!

Su.tha Arivalagan
Oct 30, 2026,12:10 PM IST

மஸ்கட்: ஓமன் நாட்டில் இயங்கி வரும் தமிழர் பண்பாட்டு நடுவம் சார்பில் 'தமிழ்நாடு நாள் விழா - 2026' அக்டோபர் 30, வெள்ளிக்கிழமை அன்று மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட உள்ளது. 


ருசைலில் உள்ள மிடில் ஈஸ்ட் கல்லூரி (Middle East College - Students Hub) வளாகத்தில் இவ்விழா நடைபெறவுள்ளது.


தமிழ்ப் பண்பாட்டையும், இலக்கியத்தையும் வளர்க்கும் நோக்கில் அன்றைய தினம் காலை முதல் மாலை வரை பல்வேறு தனித்திறன் மற்றும் குழுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.


ஓமன் நேரப்படி இன்று காலை  8.15 - 8.45 - செய்யுள், கவிதை ஒப்புவித்தல் மற்றும் இலக்கியப் பேச்சுப் போட்டியாளர்களுக்கான வருகைப் பதிவு.


காலை 9.00 - 10.30: திருக்குறள் மற்றும் செய்யுள் ஒப்புவித்தல் போட்டி.




காலை 10.30 - 12.30: கவிதைகள் ஒப்புவித்தல் போட்டி.


மதியம் 12.30 - 1.30: இலக்கியப் பேச்சுப் போட்டி.


மதியம் 2.00 - 3.00: கண்கவர் குழு நடனப் போட்டி.


மதியம் 3.00 - 3.30: குறுங்காணொளிகள் (Short Videos) திரையிடல்.


மாலை 4.30 - 5.30: மழலைகளுக்கான மாறுவேடப் போட்டி.


மாலை நேரப் பண்பாட்டு விழா:


மாலை 4:00 மணிக்கு தமிழ்நாடு நாள் விழா முறைப்படி தொடங்கும். வரவேற்புரையைத் தொடர்ந்து, தமிழர்களின் பாரம்பரியக் கலைகளான பரதநாட்டியம், பறையிசை, மற்றும் சிலம்பாட்டம் ஆகிய கலை நிகழ்ச்சிகள் அரங்கேறவுள்ளன.


அதன்பின், மாலை 6:00 மணிக்குச் சான்றோர்களின் வாழ்த்துரையும், மாலை 6:30 மணி முதல் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு மற்றும் அனைத்துப் போட்டியாளர்களுக்கும் பங்கேற்புச் சான்றிதழ், ஊக்கப் பரிசுகள் வழங்கும் நிகழ்வும் நடைபெறும்.


முக்கியக் குறிப்புகள்:


போட்டியாளர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு மதியம் 12:00 மணி முதல் 3:00 மணி வரை மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாறுவேடப் போட்டி மற்றும் நடனப் போட்டியாளர்களுக்கும் மதிய உணவு வழங்கப்படும்.


அரங்கின் தாழ்தளம் போட்டியாளர்கள், நடுவர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. பெற்றோர்களும் பார்வையாளர்களும் மேல்தளப் பகுதியில் அமர்ந்து போட்டிகளைக் காணலாம்.


பர்க்கா, சோகார், இப்ரா, முலதா ஆகிய பகுதிகளிலிருந்து வரும் போட்டியாளர்கள் தங்களது வருகை நேரத்தை முன்னதாகவே தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


விழா அரங்கிற்கு வெளியே புத்தகக் விற்பனை அரங்குகளும், உணவுக்கூடப் பகுதியில் தேநீர் மற்றும் சிற்றுண்டி விற்பனை நிலையங்களும் அமைக்கப்பட்டிருக்கும்.


அரங்கத்தினுள் முழு அமைதியைக் காக்கவும், போட்டிகள் சிறப்பாக நடைபெறவும் பார்வையாளர்கள் மற்றும் பெற்றோர்கள் முழு ஒத்துழைப்பு நல்குமாறு தமிழர் பண்பாட்டு நடுவத்தின் பொறுப்பாளர்கள் அன்புடன் கேட்டுக்கொண்டுள்ளனர்.