Tamil Short Story: அன்னதானம்!
- பாரதிராஜன்
மஞ்சுளா & ராஜன் ஒய்வுபெற்ற அரசு ஊழியர்கள். ஒய்வூதியம் உண்டு. ஒரே மகள் ஸ்ரேயா பள்ளி &கல்லூரி படிக்கும் போது ஸ்காலர்ஷிப் மூலமாக படித்தாள்.
கேம்பஸ் மூலமாக வேலை, நல்ல சம்பந்தம் கிடைக்க அமெரிக்காவிலுள்ள அட்லாண்டா மாநிலத்தில் வாசம்.
ராஜன் பணிபுரிந்த காலத்தில் செய்ததை ஒய்வுபெற்ற பின்னரும் ஜூன் மாதங்களில் ஒரு மாணவனுக்கு புத்தகம் வாங்கபணம் வேறு மாணவனுக்கு தீபாவளி சமயத்தில் டிரஸ் வாங்க பணம் தருவதை வழக்கமாக கொண்டு
இருந்தார்
கொரானா காலத்தில் மக்கள் கஷ்டப்பட்டத்தை பார்த்த மஞ்சுளா வாரத்தில் ஒரு நாள் யாராவது இரண்டு பேருக்கு டிபன் வாங்கிக்கொடுங்க. நமக்கு இருக்க வீடு, உடை எல்லாம் இருக்கு என்றதும், ஒரு சனிக்கிழமை மாலை சுமாராக 6 மணிக்கு 2 டிபன் பாக்கெட் வாங்கி இருவரைத் தேடிக் கொடுப்பதற்குள் இரவு மணி 7/45.
அதற்குள் மஞ்சுவிடமிருந்து நிறைய முறை போன். வீட்டுக்குப்போய் நடந்ததை சொன்னார் ராஜன். அந்த சமயத்தில் இருவருடைய மனதிலும் ஒடிய எண்ணம், அவர்கள் வசிக்கும் பகுதியான அம்பத்தூரிலுள்ள ஒரு ஓட்டலில் மாதாமாதம் ஒவ்வொரு சனிக்கழமை இரண்டு பேருக்கு டிபன் கொடுக்க பணம் கொடுத்து அவரை கொடுக்கச் சொல்லி ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த ஏற்பாடு இன்று வரை தொடர்கிறது. மாதா முதலில் பணம் ஹோட்டல் முதலாளியிடம் கொடுக்கப்படும்.
மஞ்சுளா &ராஜன் இருவரும் இரண்டு முறை அமெரிக்கா சென்றபோதும் தொடர்ந்தது. இன்று வரை இது தொடர்கிறது.
(எழுத்தாளர் பாரதிராஜனின் இயற்பெயர் ரங்கராஜன் , பாரதியார் பாடல்கள் மேல் உள்ள காதலால் பாரதிராஜன் என்கிற புனைப்பெயரில் கதை கட்டுரை மற்றும் கவிதை எழுதி வருகிறார். சென்னை அம்பத்தூரில் வசித்து வருகிறார்)