தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2026 : அறிவிக்கப்பட்ட திட்டங்களும், ஒதுக்கப்பட்ட நிதியும்

Su.tha Arivalagan
Aug 06, 2026,11:33 AM IST

சென்னை : 2026-2027ம் நிதியாண்டிற்கான தமிழ்நாட்டிற்கான வேளாண் துறை பட்ஜெட்டை அந்த துறையின் அமைச்சர் வினோத் இன்று சட்டசபையில் தாக்கல் செய்தார். இதில் அவர் வெளியிட்ட வேளாண் துறைக்கான அறிவிப்புகள் மற்றும் அவற்றிற்காக ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடு குறித்த விபரங்கள் இதோ...


தமிழக வேளாண் பட்ஜெட் 2026 முக்கிய அறிவிப்புகள் :


- விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்திற்காக ரூ.7,432 கோடி நிதி ஒதுக்கீடு

- உயிர்ம உரப் பயன்பாட்டை ஊக்குவிக்க விவசாயிகளுக்கு ரூ.4,000 சிறப்பு ஊக்கத்தொகை

- ரூ.122.51 மண்வளப் பாதுகாப்பு இயக்கம் தொடங்கப்படும்

- ரூ.4 கோடியில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மண்வள அட்டைகள் வழங்கப்படும்.

- பயறு வகைகள் மற்றும் எண்ணெய்வித்துப் பயிர்களில் தன்னிறைவுக்கான இயக்கத்திற்கு

ரூ.203.46 கோடி நிதி ஒதுக்கீடு

- எல் நினோ காரணமாக 12 மாவட்டங்களில் பெரும் தாக்கம் ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது

- மக்காச்சோள உற்பத்தி மேம்பாட்டுத் திட்டத்திற்காக ரூ.36 கோடி நிதி ஒதுக்கீடு

- காட்டுப்பன்றிகளால் ஏற்படும் பயிர் இழப்புகளைத் தடுக்க காட்டுப்பன்றி சேதத் தடுப்புத் திட்டத்திற்காக ரூ.7.35 கோடி நிதி ஒதுக்கீடு

- வேளாண் தொழில்நுட்பம் உங்கள் விரல் நுனியில் என்ற அடிப்படையில் ஒவ்வொரு உழவருக்கும் AI அடிப்படையிலான உழவர் செயலி; இதற்காக ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு

- சாமை, தினை, வரகு, குதிரைவாலி, பனிவரகு போன்ற பயிர்களின் சாகுபடியை இருமடங்காக அதிகரிக்க தமிழ்நாடு குறுதானிய இயக்கம் அமைக்கப்படும். இத்திட்டத்திற்காக ரூ.7.61 கோடி நிதி ஒதுக்கீடு

- மழை, வெயிலிலிருந்து விளைப் பொருட்களை பாதுகாக்க 43,500 தார்ப் பாய்கள் திட்டத்திற்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு




- தொழில்நுட்பமும், பாரம்பரியமும் சங்கமிக்கும் திருவிழாவாக வேளாண் கண்காட்சி நடத்தப்படும். இதற்காக ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு

- 5 விவசாயிகளுக்கு சிறந்த உயிர்ம விவசாயிக்கான நம்மாழ்வார் விருது வழங்கப்படும்; இதற்காக ரூ.11 லட்சம் நிதி ஒதுக்கீடு

- விதை சுத்திகரிப்புத் திறனை அதிகரிக்க 3 புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படும்.

இதற்காக ரூ.7.1 கோடி நிதி ஒதுக்கீடு

- கரும்பு சாகுபடிப் பரப்பை அதிகரிக்க கரும்பு சாகுபடி மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும்.

இதற்காக ரூ.9 கோடி நிதி ஒதுக்கீடு

- வெற்றி இல்லத்தரசி வீட்டுத் தோட்டம் திட்டம் செயல்படுத்தப்படும். இதற்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு. மாடித்தோட்டம் அமைக்க இடுபொருள் தொகுப்புகள், காய்கறி விதைத் தொகுப்புகள், பழச்செடித் தொகுப்புகள், நீரியல் தோட்டம், செங்குத்துத் தோட்டம், நிழல்வலைக் குடில்கள் அமைக்க இந்த நிதி பயன்படுத்தப்படும்.

-  மாநில அளவில் பயிர் விளைச்சல் போட்டிக்காக அஞ்சலை அம்மாள் பெயரில் விருது வழங்கப்படும். அஞ்சலை அம்மாள் பெயரில் முதல் பரிசு ரூ.2.50 லட்சம், 2ஆவது பரிசு ரூ.1.50 லட்சம், 3ஆவது பரிசு ரூ.1 லட்சம் வழங்கப்படும்.

- தரமான பருத்தி உற்பத்தியைப் பெருக்கிட ஏதுவாக பருத்தி மறுமலர்ச்சி இயக்கம் செயல்படுத்தப்படும். இதற்காக ரூ.27.21 கோடி நிதி ஒதுக்கீடு.

- சிறிய தளிர்.. பெரிய ஆரோக்கியம் என்ற அடிப்படையில் தமிழ்நாடு தளிர்கீரைகள் திட்டம் செயல்படுத்தப்படும். இதற்காக ரூ.1.20 கோடி நிதி ஒதுக்கீடு

- தென்னை சார்ந்த பொருட்களுக்கு லாபகரமான விலை கிடைக்கச் செய்ய ஏதுவாக தமிழ்நாடு தென்னை பதப்படுத்தும் கழகம் செயல்படுத்தப்படும்.

இதற்காக ரூ.5.30 கோடி நிதி ஒதுக்கீடு.

- விவசாய நிலங்களில் நிரந்தரப் பசுமைக்காக வேளாண் காடுகள் திட்டம் செயல்படுத்தப்படும்; இதற்காக ரூ.17.70 கோடி நிதி ஒதுக்கீடு

- அரசு தோட்டக்கலைப் பண்ணைகளை மேம்படுத்த ரூ.2.3 கோடி ஒதுக்கீடு

- நீர் மேலாண்மைக்கான துளித் துளித் தண்ணீர் திட்டம் செயல்படுத்தப்படும். இதற்காக ரூ.785 கோடி நிதி ஒதுக்கீடு

- வெங்காய சேமிப்புக் கிடங்குகள் அமைப்பதற்காக ரூ.22 கோடி மதிப்பீட்டில் 57 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட நவீன சேமிப்பு வசதிகள் உருவாக்கப்படும்.

- நெல், சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய்வித்துகள். பருத்தி உள்ளிட்ட ஒன்பது பயிர்களை இரண்டு ஏக்கர் பரப்பளவில் பயிரிட்டு, அதிக மகசூல் பெறும் விவசாயிகளுக்கு, மாவட்ட அளவில் "வெற்றி விவசாயி விருது" வழங்கப்படும். முதல் பரிசாக 50 ஆயிரம் ரூபாய், இரண்டாம் பரிசாக 25 ஆயிரம் ரூபாய் என 90 பரிசுகள் வழங்கப்படும்; இதற்காக ரூ.67.50 லட்சம் மாநில நிதி ஒதுக்கீட்டில் வழங்கப்படும்.

- புளுபெரி அவகோடா, கிவி உள்ளிட்டட உயர் மதிப்பு கொண்ட பழ உற்பத்தியை அதிகரிக்க திட்டம் செயல்படுத்தப்படும்.

இதற்காக ரூ.1.87 கோடி நிதி ஒதுக்கீடு

- 1,720 ஏக்கரில் ரூ.1.51 கோடியில் மருத்துவப் பயிர்கள் சாகுபடி ஊக்குவிப்பு திட்டம்

- 100% மானியத்தில் 500 பண்ணைக் குட்டைகள் உருவாக்குதல் மற்றும் 75% மானியத்தில் 500 பண்ணைக் குட்டைகள் தூர்வாருதல் திட்டம் செயல்படுத்தப்படும்.இதற்காக ரூ.8.5 கோடி நிதி ஒதுக்கீடு

- வேளாண் இயந்திரங்களைப் பழுது நீக்கி பராமரிக்கும் 15 மையங்கள் அமைத்திட 50 சதவீதம் மானியம் வழங்கப்படும். இதற்காக ரூ.1.12 கோடி நிதி ஒதுக்கீடு

- இ- வாடகை 2.0 செயலி மூலம் வேளாண்மைப் பொறியியல் துறையின் இயந்திரங்களை வாடகைக்கு வழங்கும் சேவையை வலுப்படுத்த, 463 வேளாண் இயந்திரங்கள், கருவிகள் கொள்முதல் செய்யப்படும்

- 1000 விவசாயிகளுக்கு மானியத்தில் (அதிகபட்ச மானியம் 80%) மின்கட்டமைப்புடன் சாராத சூரிய சக்தியால் இயங்கும் பம்புசெட்டுகள் அமைக்க ரூ.23 கோடி ஒதுக்கீடு

- கியூ ஆர் கோடுடன் விதைச் சான்றிதழ் வழங்க ரூ.1 கோடி ஒதுக்கீடு