தமிழக பட்ஜெ ட் 2026 : தவெக அரசால் பெயர் மாற்றப்பட்ட 2 திட்டங்கள்

Aug 05, 2026,12:55 PM IST

சென்னை: தமிழ்நாடு அரசின் 2026-27 நிதியாண்டிற்கான பட்ஜெட் அறிவிப்பில், முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் செயல்படுத்தப்பட்ட முக்கியச் நலத்திட்டங்களின் பெயர்களில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. நிதியமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்த இந்த பட்ஜெட்டில், மாணவர்களுக்கான மடிக்கணினி வழங்கும் திட்டம் மற்றும் ஏழை எளிய மக்களுக்கான வீட்டுவசதி திட்டம் ஆகியவற்றின் புதிய பெயர்கள் மற்றும் நிதி ஒதுக்கீடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.


2026-2027 ம் நிதியாண்டிற்கான தமிழக அரசின் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு தாக்கல் செய்யப்படும் இந்த முதல் பட்ஜெட்டை தமிழக நிதியமைச்சர் மரியவில்சன் சட்டசபையில் தாக்கல் செய்தார். இதில் திமுக அரசால் கடந்த ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட 2 முக்கிய திட்டங்களின் பெயர்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.


'வெற்றி மடிக்கணினி திட்டம்' :




திமுக ஆட்சியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் டிஜிட்டல் கற்றலை ஊக்குவிக்கும் வகையில் ‘உலகம் உங்கள் கையில்’ என்ற பெயரில் மடிக்கணினிகள் (Laptop) வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தது. இத்திட்டம் தற்போது ‘வெற்றி மடிக்கணினி திட்டம்’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பட்ஜெட்டில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.இத்திட்டத்தை மாநிலம் முழுவதும் திறம்பட செயல்படுத்தவும், மாணவர்களுக்கு உயர்தர மடிக்கணினிகளை தொடர்ந்து வழங்கவும் ரூ.2,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


'வெற்றி வீடு திட்டம்' :

கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழை எளிய மக்களின் சொந்த வீடு கனவை நனவாக்கும் பொருட்டு, திமுக அரசால் ‘கலைஞர் கனவு இல்லம்’ என்ற திட்டம் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வந்தது. இந்த வீட்டுவசதி திட்டம் தற்போது ‘வெற்றி வீடு திட்டம்’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் முதல் ஆண்டிலேயே 70,000 வீடுகள் கட்ட ஒப்புதல் வழங்கப்படும் என்று நிதியமைச்சர் மரிய வில்சன் தெரிவித்துள்ளார். இதற்காக ரூ.3,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.


மக்கள் நலனுக்கான தொடர் நடவடிக்கைகள் : 

இத்திட்டங்களின் பெயர்கள் மாற்றப்பட்டாலும், அவற்றின் மூலம் மக்களுக்குச் சென்றடையும் நன்மைகளும் சேவைகளும் எவ்வித தடங்கலுமின்றி மேலும் விரிவாகச் சென்றடையும் வகையில் அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ள கணிசமான தொகையானது கல்வி மற்றும் வீட்டுவசதித் துறைகளில் பெரும் மாற்றத்தையும் வளர்ச்சியையும் ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Santhi Sinnathambi Poem: விடுமுறைக்காகக் காத்திருந்தோம்.. காத்திருந்தோம்!

news

பட்ஜெட்டில் ஒன்றுமே இல்லை...ஸ்டிக்கர் ஒட்டும் அரசு : எடப்பாடி பழனிச்சாமி கடும் விமர்சனம்

news

தமிழக பட்ஜெ ட் 2026 : தவெக அரசால் பெயர் மாற்றப்பட்ட 2 திட்டங்கள்

news

ஆடியிலே அலைமோதி ஆர்ப்பரிக்கும் காவிரியில்!

news

சேலம் கோட்டை ஸ்ரீ பெரிய மாரியம்மன் கோவில் ஆடித் திருவிழா

news

திருநாவுக்கரசரை அசைத்துக் கூட பார்க்க முடியாத கொடும் விஷம்

news

விவாகரத்தில் விம்மிய தாய் உள்ளம்

news

முதல்வர் விஜயின் முதல் பட்ஜெட்.. சட்டசபையில் தாக்கல் செய்தார் நிதியமைச்சர் மரிய வில்சன்

news

ஆணவம், அழிவுக்கு வழிவகுக்கும்; தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும்.. மு.க.ஸ்டாலின்

அதிகம் பார்க்கும் செய்திகள்