தீபங்கள் ஒளி சிந்த தீமைகள் விலக, இருளின் இமை மூடி அருள் வழி திறக்க.. தீபாவளி வாழ்த்துகள்

Nov 08, 2026,09:06 AM IST

-வி.ராஜேஸ்வரி


நரகனை அழித்து வதம்தனை செய்த நாளாம்!

விதியதன் வழியில் விடையாகக் கிடைத்த நாளாம்!

அசுரனை அழித்து ஆண்டவன் அருள் பெற்ற நாளாம்!

புத்துயிர் பெற்றுப் புதுப்பொலிவுடன் பிறந்த நாளாம்!

இந்தத் தீபாவளித் திருநாள்!


தீபங்கள் ஒளி சிந்த

தீமைகள் விலக,

இருளின் இமை மூடி 

அருள் வழி திறக்க,

வாழ்த்துப் பூக்களால் 

வாழ்க்கை இனிக்க,

இனிப்புக்களோடு

இதயங்கள் சுவையாக,

புத்தாடைகள் பளபளக்க புதுப்பூவாய் முகம் சிரிக்க,

பட்டாசுகள் படபடக்க 

சிட்டாக சிறுவர்கள் சிலுசிலுக்க,

இனிப்புகள் இடம்மாற  இன்பங்கள் 

இகம் சேர,

இனிதே ஒளிர்ந்துள்ளது!




இந்தத் தீபாவளித் திருநாளிலே, 

அழகு தீபங்கள் ஏற்றி 

ஆசைப் புத்தாடை அணிந்து,

இன்சுவைப் பலகாரம் உண்டு,

ஈந்து உள்ளம் மகிழ்ந்து,

உலகெங்கும் பட்டாசு ஒலிக்க,

ஊரெல்லாம் 

ஒன்றாகிக் களிக்க,

எண்ணெய்க் குளியல் முடித்து,

ஏகமாய் சுற்றத்துடன் இணைந்து,

ஐப்பசித் திங்கள் நன்னாளில்,

ஒளியின் சுடரில் மிளிர்ந்து,

ஓராயிரம் இன்பத்தில் திளைத்து,

ஔடதமாய் மனது ஒளிர்ந்து,

இஃதே எங்கள் தீபாவளி என்று வியக்கும் வண்ணம் கொண்டாடி மகிழ்வோம்!

இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள்!


(வி. ராஜேஸ்வரி, உதவியாளர், மதுரா கல்லுரி, மதுரை)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தீபங்கள் ஒளி சிந்த தீமைகள் விலக, இருளின் இமை மூடி அருள் வழி திறக்க.. தீபாவளி வாழ்த்துகள்

news

ஆசைகளைக் குறைத்து… அன்பை நிறைத்து.. நடுத்தரக் குடும்பத்தின் தீபாவளி!

news

Happy Deepavali மக்களே.. பட்டாசு சுட்டுச் சுட்டு போடட்டுமா.. பாதுகாப்பாக கொண்டாடுங்கள்!

news

தமிழகத்தில் தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை: 27 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

news

"பொய் வழக்கு...தில்லுமுல்லு அரசியல்!" – மன்னன் கைதுக்கு எடப்பாடி பழனிசாமி, செல்லூர் ராஜு கண்டனம்

news

கொளத்தூர் தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு டிஸ்சார்ஜா? அமைச்சர் அருண்ராஜ் விளக்கம்

news

கோவை பெரியார் அறிவுலகத்தில் ஊழல்? எழுத்தாளர் பெருமாள் முருகன் குற்றச்சாட்டிற்கு அமைச்சர் விளக்கம்

news

அதிமுக பிரமுகர் மன்னன் கைது: தவெக எம்எல்ஏ-விடம் ரூ.30 கோடி பேரம் பேசிய விவகாரத்தில் நடவடிக்கை!

news

தீபாவளி பண்டிகை 2026 : தமிழகம் முழுவதும் இன்று ரேஷன் கடைகள் இயங்கும் - அரசு அறிவிப்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்