Happy Deepavali மக்களே.. பட்டாசு சுட்டுச் சுட்டு போடட்டுமா.. பாதுகாப்பாக கொண்டாடுங்கள்!

Nov 08, 2026,07:38 AM IST

- ஸ்வர்ணலட்சுமி


தீபாவளி வந்தாச்சு.. ஒரு பக்கம் மழையும் வந்தாச்சு. பல ஊர்களில் இன்று காலை முதல் நல்ல மழை பெய்கிறதாம். இருந்தாலும் தீபாவளியைக் கொண்டாடமல் இருக்க முடியாதே.. அதேசமயம், பாதுகாப்பாகவும் பட்டாசுகளை வெடித்து தீபாவளியைக் கொண்டாடுவோம்.


தீபாவளி என்பது தீபம்+ ஆவளி அதாவது  தீபங்களின் வரிசை அல்லது விளக்குகளின் வரிசை என்று பொருள். இந்த பண்டிகை இருளை நீக்கி ஒளியை தந்து அனைவர் வாழ்விலும் பிரகாசமாய் ஒளி வீசும்  பண்டிகையாகும். வண்ண வண்ணமான புத்தாடைகள், பட்டாசு, இனிப்புகள்,விருந்து மற்றும் பரிசுகளுடன் குடும்ப உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவரும் ஒன்று கூடி கொண்டாடும் பெரிய பண்டிகை தீபாவளி.


சந்தோஷமாக கொண்டாடும் தீபாவளி கொண்டாட்டத்தின் போது நாம் என்னென்ன செய்யக்கூடாது, என்னென்ன செய்யலாம் என்பதை பற்றி அறிந்து கொள்வோமா...


பாதுகாப்பான தீபாவளி கொண்டாட  செய்ய வேண்டியவை vs செய்யக்கூடாதவை  :


1. தீபாவளி என்றாலே பட்டாசு தான். பட்டாசு என்றாலே ஒரே குதூகலம் தான். விதவிதமான பல வண்ண பட்டாசுகள் மார்க்கெட்டுகளில் விற்கப்படுகின்றன. அதில் நல்ல பிராண்டட் அல்லது உண்மையான பட்டாசுகளை வாங்கவும்.  ஈரமான பட்டாசுகளை விலை மலிவு என்று பிராண்டட் அல்லாத பட்டாசுகளை வாங்க கூடாது.


2. புதுவிதமான பட்டாசுகளில் குறிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு குறிப்புகளை கட்டாயம் பின்பற்றி அதற்கு  தகுந்தாற்  போல் வெடிக்க வேண்டும். நண்பர்களுடன் சேர்ந்து அவர்கள் இப்படி வெடி வைக்கலாம்,அப்படி வைக்கலாம் என்று பாதுகாப்பு குறிப்புகளை படிக்காமல்  பின்பற்றக் கூடாது.


3. பட்டாசு வெடிக்கும் போது குழந்தைகளை தனியே விடாமல் வீட்டில் உள்ள பெரியவர்கள் அவர்களோடு பாதுகாப்பாக இருப்பது அவசியம்.


குழந்தைகள் வீதிகளில் அல்லது மொட்டை மாடியில்  பட்டாசு வெடிக்கும் பொழுது டிவி பார்க்க வேண்டும் என்று  பெரியவர்கள் வீட்டிலேயே இருக்கக் கூடாது.




4. கம்பி மத்தாப்பு போன்ற பட்டாசுகள் விடும் பொழுது ஒரு வாளி தண்ணீர் பக்கத்தில் வைத்துக் கொண்டு எரிந்து முடிந்த பட்டாசுகளை அதில் போடவும்.  கம்பி மத்தாப்பு, பென்சில்,சாட்டை போன்ற பட்டாசுகள்  முடிந்த உடன் அப்படியே தெருவில் தூக்கி போடக்கூடாது. அருகில் எந்த விதமான எரியும் பொருட்கள் இருக்கக்கூடாது.


5. பெரிய வெடி பட்டாசுகள் வெடிக்கும் பொழுது நீளமான ஊதுபத்தியை பயன்படுத்துவது அவசியம். சரவெடி,1000வாலா, பாம் போன்ற பட்டாசுகளை சிறிய ஊதுபத்தி,  கம்பி மத்தாப்பு  அல்லது தீப்பெட்டி வைத்துக்கொண்டு வெடிக்க கூடாது.


6. பட்டாசு வெடிக்கும் போது குழந்தைகளுக்கு நல்ல பருத்தி ஆடைகளை அணிவிக்க வேண்டும். மொத்தமான ஜீன்ஸ் போன்ற வகை ஆடைகள் அணிவது சிறந்தது. நைலான் துணிகள், பெரிய ஃபிராக், சுடிதார் துப்பட்டாவை முன்னால் போட்டுக் கொண்டோ, பேன்சி புடவைகள், பட்டுப் புடவைகள், மெலிதான  பாலியஸ்டர்  துணிகளை உடுத்திக் கொண்டு பட்டாசு வெடிக்க கூடாது.


7. முழுமையாக பற்ற வைக்கப்படாத பட்டாசுகளை தனியே ஓரமாக தள்ளி விட வேண்டும். மாறாக முழுமையாக பட்டாசு பற்ற வைக்கப்படாத நிலையில் மீண்டும் கொளுத்த முயற்சி செய்யக் கூடாது.


8. சரவெடி வெடிக்கும் பொழுது நன்றாக தரையில் படிந்த வண்ணம் வைத்து கொளுத்த வேண்டும். கையில் வைத்துக்கொண்டு சரவெடிகளையோ, வெடிக்கும் பட்டாசுகளையும் வைத்துக்கொண்டு கொளுத்தக் கூடாது. ஒரே நேரத்தில் பல பட்டாசுகளை கொளுத்த முயற்சிக்காதீர்கள்.


9. தீ பற்ற வைத்த பட்டாசுகளிடமிருந்து இடைவெளி விட்டு நிற்க வேண்டும். பட்டாசுகளில் தீ வைத்தவுடன் அது சரியாக பற்றவில்லை என்றால் அதன் அருகில் சென்று முகத்துக்கு அருகில் வைத்து கொளுத்தக் கூடாது.


10. ஒவ்வொரு முறை பட்டாசு வெடிக்கும் பொழுதும் சோப்பு அல்லது சானிடைசர் பயன்படுத்தி நன்றாக கைகளை கழுவ வேண்டும். பட்டாசுகளின் திரியை கிள்ளியவுடன் கையில் இருக்கும் மருந்தை அப்படியே ஆடைகளில் தடவிக் கொள்ளக் கூடாது. 


11. வீதிகளில் பட்டாசு வெடிக்கும் பொழுதும், மொட்டை மாடியில் கொளுத்தும் பொழுதும் அருகில் கரண்ட் கம்பிகள் இருக்கிறதா என்பதை பார்த்து வெடிக்க வேண்டும். கரண்ட் கம்பங்களின் அருகில் நின்று பட்டாசுகள் வெடிக்க கூடாது.


12. இப்பொழுது இன்ஸ்டாவிலும், யூ டியூப் மற்றும் பேஸ்புக்கில் ரீல்ஸ் போடுவது அனைவருக்கும் ஒரு வழக்கமாகிவிட்டது. அதில் ஒரு அலாதி பிரியம் அனைவருக்கும். எனவே, பட்டாசு வெடிக்கும் பொழுது வீடியோ எடுக்க வேண்டும் என்றால் பக்கத்தில் இருப்பவரிடம் மொபைல் போனைக் கொடுத்து எடுக்கச் சொல்ல வேண்டும்.


பட்டாசு வெடி வெடித்துக் கொண்டே செல்ஃபி எடுப்பது, தீப்பெட்டி குச்சியை வாயில் வைத்துக் கொள்வது, பட்டாசுகளை வாயில் வைத்துக்கொண்டு தீ பற்ற வைப்பது கட்டாயம் செய்ய கூடாது.


13. புஸ்வாணம், சங்கு சக்கரம் போன்ற பட்டாசுகளை வெடிக்கும் பொழுது தூர  நின்று பார்த்து போட்டோ எடுப்பது சிறப்பு. காலில் செருப்பு அல்லது ஷூ அணிந்து கொள்ள வேண்டும்.

 

இரண்டு புஸ்வாணங்களை வைத்துவிட்டு அதன் நடுவில் நின்று போட்டோ எடுப்பது,வீடியோ எடுப்பது,சங்கு சக்கரம் சுற்றும் பொழுது அதனைச் சுற்றி நடனமாடுவது போல் வீடியோ எடுக்க முயற்சி செய்யக் கூடாது.


14. சுவாசப் பிரச்சினைகள், ஆஸ்துமா இருக்கும் குழந்தைகள் பட்டாசு வெடிக்க வேண்டும் என விரும்பினால் அவர்களுக்கு மாஸ்க் அணிவித்து பட்டாசு வெடிக்க வேண்டும்.  நிறைய புகை வரும் பட்டாசுகளை வைத்து அதனை சுவாசிக்க கூடாது. பட்டாசுப் புகைகள் அவர்களுக்கு  சுவாசப் பிரச்சினை அதிகமாகும் வாய்ப்புள்ளது .


15. பட்டாசு வெடிக்கும் பொழுது முதலுதவி பெட்டியும்,ஒரு வாளி தண்ணீரும் பக்கத்தில் வைத்துக் கொண்டு வெடிக்க வேண்டும். ஏதாவது விபத்துகள் ஏற்படுமே யாயின்  உடனடியாக மருத்துவரை அணுகவும். சானிடைசர் கையில் பூசிக்கொண்டு பட்டாசு வெடிக்க கூடாது. சானிடைசர் கையில் பூசிக்கொண்டு, உடுத்தியிருக்கும் துணியில் பூசக்கூடாது. ஆடைகளில் வாசனை திரவியங்கள் (perfume) பூசிக்கொண்டு பட்டாசு வெடிக்க கூடாது.


அனைவருக்கும் தித்திக்கும் தீபாவளியாக அமைய வேண்டும் என்று தென் தமிழ் சார்பாக அனைவருக்கும் பாதுகாப்பான தீபாவளி நல்வாழ்த்துக்கள்.


மேலும் இது போன்ற சுவாரஸ்யமான தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன். எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி பாலசுப்ரமணி.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Happy Deepavali மக்களே.. பட்டாசு சுட்டுச் சுட்டு போடட்டுமா.. பாதுகாப்பாக கொண்டாடுங்கள்!

news

தமிழகத்தில் தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை: 27 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

news

"பொய் வழக்கு...தில்லுமுல்லு அரசியல்!" – மன்னன் கைதுக்கு எடப்பாடி பழனிசாமி, செல்லூர் ராஜு கண்டனம்

news

கொளத்தூர் தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு டிஸ்சார்ஜா? அமைச்சர் அருண்ராஜ் விளக்கம்

news

கோவை பெரியார் அறிவுலகத்தில் ஊழல்? எழுத்தாளர் பெருமாள் முருகன் குற்றச்சாட்டிற்கு அமைச்சர் விளக்கம்

news

அதிமுக பிரமுகர் மன்னன் கைது: தவெக எம்எல்ஏ-விடம் ரூ.30 கோடி பேரம் பேசிய விவகாரத்தில் நடவடிக்கை!

news

தீபாவளி பண்டிகை 2026 : தமிழகம் முழுவதும் இன்று ரேஷன் கடைகள் இயங்கும் - அரசு அறிவிப்பு!

news

Deepavali Special Buses: தீபாவளி பண்டிகை - தமிழ்நாடு முழுவதும் 15,659 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

news

தமிழகத்தில் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்: டிசம்பர் 20-க்குள் நடத்த தேர்தல் ஆணையம் திட்டம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்