- கவிஞர் மு. ரம்யா ஆனந்த்
பெரிய பெரிய கடைகளில்
பட்டாசுகள் குவிந்திருக்கலாம்…
ஆனால் எங்கள் வீட்டுத் தீபாவளியில்
சின்னச் சின்ன ஆசைகளே நிறைந்திருக்கலாம்!
பட்டியலிட்டு வாங்குவதற்கு
ஆயிரம் பொருட்கள் இருந்தாலும்,
பட்ஜெட் பார்த்துப் பார்த்துத்தான்
பாதிப் பொருட்கள் குறைந்திருக்கும்!
அப்பாவின் சட்டை இந்த வருடமும்
பழையதாகவே இருக்கலாம்…
அம்மாவின் ஆசைப் புடவை மட்டும்
அடுத்த தீபாவளிக்கு ஒத்திவைக்கப்படலாம்!

குழந்தைகளுக்குப் புத்தாடை வாங்க
கடைகளில் ஏறி இறங்குவார் அப்பா…
விலை கேட்டதும் மனதுக்குள் கணக்குப் போட்டு
சிரித்தபடியே வாங்கித் தருவார் அம்மா!
ஆயிரம் ரூபாய் பட்டாசு வாங்க
ஆசை இருந்தாலும்,
நூறு ரூபாய் பட்டாசுக்குள்ளேயே
நூறு சிரிப்புகளைத் தேடுவோம்!
பலகாரம் செய்யும் அம்மாவின் கைகளில்
வலிகள் ஆயிரம் இருந்தாலும்,
குழந்தைகள் சாப்பிடும் அழகைப் பார்த்ததும்
அத்தனை வலிகளும் மறந்துவிடும்!
கடன் தவணை ஒருபுறம்…
குடும்பச் செலவு மறுபுறம்…
இருந்தாலும் தீபாவளி அன்று
வீட்டில் மட்டும் சிரிப்புக்குப் பஞ்சமில்லை!
பக்கத்து வீட்டில் பட்டாசுச் சத்தம்…
எங்கள் வீட்டில் குழந்தைகளின் சிரிப்புச் சத்தம்…
அவர்களின் மகிழ்ச்சியைக் காணும்போது
பெற்றோரின் மனதில் ஆயிரம் தீபங்கள்!
பெரிய மாளிகை இல்லை…
விலை உயர்ந்த ஆடைகள் இல்லை…
ஆனாலும் ஒரே தட்டில் உணவு பகிர்ந்து,
ஒரே மனதோடு வாழும் உறவுகள் உண்டு!
வசதி குறைவாக இருக்கலாம்…
வாழ்க்கையில் வலிகள் நிறைய இருக்கலாம்…
ஆனால் அன்பு மட்டும் நிறைந்திருந்தால்
ஒவ்வொரு நடுத்தரக் குடும்பத்திற்கும்
தீபாவளி தினமும் திருநாள்தான்!
(கவிஞர் மு. ரம்யா ஆனந்த், D.T.Ed., M.A., M.Ed. கல்வித் தகுதிகளைப் பெற்றவர். கல்வித்துறையில் ஆர்வம் கொண்டவர். ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வருவதுடன், பெண்களின் உணர்வுகள், வாழ்க்கை அனுபவங்கள், தன்னம்பிக்கை மற்றும் மனித உறவுகளை மையமாகக் கொண்டு கவிதைகள் எழுதுவதிலும் ஆர்வம் கொண்டவர். தனது எழுத்துகளின் மூலம் வாசகர்களின் மனதில் நல்ல சிந்தனைகளையும் நம்பிக்கையையும் விதைப்பதை விரும்புகிறார்
ஆசைகளைக் குறைத்து… அன்பை நிறைத்து.. நடுத்தரக் குடும்பத்தின் தீபாவளி!
Happy Deepavali மக்களே.. பட்டாசு சுட்டுச் சுட்டு போடட்டுமா.. பாதுகாப்பாக கொண்டாடுங்கள்!
தமிழகத்தில் தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை: 27 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!
"பொய் வழக்கு...தில்லுமுல்லு அரசியல்!" – மன்னன் கைதுக்கு எடப்பாடி பழனிசாமி, செல்லூர் ராஜு கண்டனம்
கொளத்தூர் தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு டிஸ்சார்ஜா? அமைச்சர் அருண்ராஜ் விளக்கம்
கோவை பெரியார் அறிவுலகத்தில் ஊழல்? எழுத்தாளர் பெருமாள் முருகன் குற்றச்சாட்டிற்கு அமைச்சர் விளக்கம்
அதிமுக பிரமுகர் மன்னன் கைது: தவெக எம்எல்ஏ-விடம் ரூ.30 கோடி பேரம் பேசிய விவகாரத்தில் நடவடிக்கை!
தீபாவளி பண்டிகை 2026 : தமிழகம் முழுவதும் இன்று ரேஷன் கடைகள் இயங்கும் - அரசு அறிவிப்பு!
Deepavali Special Buses: தீபாவளி பண்டிகை - தமிழ்நாடு முழுவதும் 15,659 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
{{comments.comment}}