தீபாவளி ரிலீஸ்.. இப்படியும் மனிதர்கள் - எழுத்தாளர் இரா. கலைச்செல்வியின் புதிய நூல்!

Nov 08, 2026,11:12 AM IST

நமது தென்தமிழ் செய்தி இணையதளத்தில் நீண்ட காலமாக பயணிக்கும் எழுத்தாளர் இரா. கலைச்செல்வி அவர்களின் "இப்படியும் மனிதர்கள்" என்ற சிறுகதை தொகுப்பு தற்போது  வெளியாகி உள்ளது. சிறப்பான சிறுகதை தொகுப்பு.


அனைத்து கதைகளும் வாசிப்பு சுவாரசியத்தை தன்னகத்தே கொண்டவை. அத்தனையும் நம்பிக்கையூட்டும் கதைகள்.  பெண் மன உலகின் அவதானிப்புகளை அழகாக படம் பிடித்து காட்டியுள்ளார்.


இதில் உள்ள 15 சிறுகதைகளும் பல்வேறு மனிதர்களின் முகங்களை, படம் பிடித்து காட்டும் கண்ணாடியாக  உள்ளன. வாழ்க்கைக்கு வழிகாட்டும் சிறந்த சிறுகதைகளைக் கொண்டவை.




எழுத்தாளரைப் பற்றி: 


சிவகங்கைச் சீமையில் பிறந்து வளர்ந்த இவர், முதுகலை பட்டதாரி. தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் 32 ஆண்டுகள்  தகைசால் பணியாற்றி, அரசு துணைச் செயலாளராக பணி நிறைவு  பெற்று,  தற்சமயம் முழு நேர இலக்கியப் பணியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்.


எழுத்து, பேச்சு, கவிதை என பன்முக ஆளுமை  நிறைந்தவர்.  இதுவரை  ஏறத்தாழ நூறு சிறு கதைகளை எழுதியுள்ள இவர்,  தமிழ்மாமணி, சாதனைப் பெண், கலை ரத்னா, சேவா ரத்னா, தங்கத் தாரகை உள்ளிட்ட முப்பதுக்கும் மேற்பட்ட விருதுகளால் கௌரவிக்கப்பட்டவர்.  


முன்னணி இலக்கிய அமைப்புகள் இந்திய அளவில் நடத்திய சிறுகதை போட்டிகளில் முதல் மற்றும் இரண்டாம்  பரிசுகளை வென்று , சிறுகதை உலகில் தனக்கென தனி முத்திரை பதித்து வருகிறார்.  


உலக அளவில் நடைபெற்ற சிறுகதைப் போட்டியிலும் இவரது கதைகள் தேர்வு பெற்றுள்ளன.  இவர் எழுதிய குறுநாவலும் நாவல் போட்டியில் தேர்வு பெற்றுள்ளது. 


இவரது சிறுகதைகள் பல தொகுப்பு புத்தகங்களில் இடம் பெற்றுள்ளன. பல்வேறு விதமான கவிதைப் போட்டிகளிலும் பங்கெடுத்து வெற்றி பெற்றுள்ளார்.


இந்நிலையில் எழுத்தாளர் பத்மஸ்ரீ சிவசங்கரி அவர்களின் வாழ்த்துக்களோடு,  டாக்டர் சுதா சேஷய்யன் அவர்களின் வாழ்த்துரையோடு , சாகித்திய அகாடமி விருதாளர்கள் எழுத்தாளர் தமிழ்ச்செல்வன், எழுத்தாளர் மு. முருகேஷ் அவர்களின் அணிந்துரையோடு வெற்றிகரமாக இவரின் சிறுகதை தொகுப்பு தற்போது பிரசுரம் ஆகி உள்ளது. 


சாதாரண மனிதர்களின் அசாதாரண வலிகளை, அதில் இருந்து மீளும் வழிமுறைகளையும், படிப்பதற்கு வெகு சுவாரசியமான முறையில் ,  நம்பிக்கையூட்டும் கதைகளாக பதிவு செய்திருக்கிறார். 


வாழ்க்கையின்  பல சிக்கல்களுக்கிடையே துளிர்க்கும் மலராய்  பல சிறுகதைகள். சமூக அக்கறையுடன் வாழ்வின் எதார்த்தங்களை தடையில்லா வாசிப்பு சுவாரசியத்தோடு தனது கதைகளை இரா. கலைச் செல்வி செதுக்கி உள்ளார்.


இவரது புத்தகத்தை பாரதி புத்தகாலயம், எண்.7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, சென்னை 18 என்ற முகவரியில் பெறலாம்.


தொடர்புக்கு:  044-24332924

கைபேசி: 9444567935


புத்தகம் வேண்டுவோர் rksindira@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தீபாவளி ரிலீஸ்.. இப்படியும் மனிதர்கள் - எழுத்தாளர் இரா. கலைச்செல்வியின் புதிய நூல்!

news

Happy Deepavali.. நெடுந்தூர சொந்த ஊர் பயணம்!

news

நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கும் தீபாவளி

news

தேசத்தின் திருவிழா.. தீபாவளி!

news

தீபங்கள் ஒளி சிந்த தீமைகள் விலக, இருளின் இமை மூடி அருள் வழி திறக்க.. தீபாவளி வாழ்த்துகள்

news

ஆசைகளைக் குறைத்து… அன்பை நிறைத்து.. நடுத்தரக் குடும்பத்தின் தீபாவளி!

news

Happy Deepavali மக்களே.. பட்டாசு சுட்டுச் சுட்டு போடட்டுமா.. பாதுகாப்பாக கொண்டாடுங்கள்!

news

தமிழகத்தில் தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை: 27 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

news

"பொய் வழக்கு...தில்லுமுல்லு அரசியல்!" – மன்னன் கைதுக்கு எடப்பாடி பழனிசாமி, செல்லூர் ராஜு கண்டனம்

அதிகம் பார்க்கும் செய்திகள்