நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கும் தீபாவளி

Nov 08, 2026,10:22 AM IST

- பன்முகக் கவிஞர் க. முருகேஸ்வரி


ஆவலோடு எதிர்பார்க்கும் தீபாவளிப் பண்டிகை  

அடுத்தமாதம் என்றே நாள்காட்டியில் காட்டியிருக்கும்

ஆனாலும் ஓயாது  தீபாவளி பேச்சிருக்கும்


புத்தாடை வாங்கும் உற்சாகம்‌ உடனினிக்கும்

பட்டாசு வெடிப்பது பந்தயத்தில் இடம்பிடிக்கும்


துப்பாக்கிச்சூடும் விளையாட்டில் தூள் கிளப்பும் 

அதிரசமும் முறுக்கும் அடுக்களையை ஆக்கிரமிக்கும்


இட்லிக்கு மாவாட்ட ஆட்டுஉரல் அதகளிக்கும்

ஆடுரிக்கும் இடமெல்லாம் ஆள்சேர்ப்பு அதிகரிக்கும் 




முதல்நாள் ராத்திரியோ

தூக்கமும் வரமறுக்கும் 


அப்பாவின் உற்சாகக்குரல் அதிகாலையிலே எழுப்பிவிடும்

ஐ...தீபாவளி என்று மனம் ஆனந்தக் கூத்தாடும் 


நல்லெண்ணெய் குளியலுடன் தீபாவளி ஆரம்பிக்கும்

மஞ்சள் வைத்த புத்தாடை  புதுப்பொலிவை உரித்தாக்கும்

பெரியோரின் ஆசி பெற தமிழ்ப்பண்பாடும் தழைத்திருக்கும்


சரவெடியைப் பற்றவைக்க தீபாவளி கலகலக்கும் 

இட்லியும் கறிக்குழம்பும் போட்டி போட்டு விருந்தளிக்கும்

நண்பர் கூட்டம் ஒன்றுகூடி கதைபேச கலகலக்கும்

திகட்டத் திகட்‌ட தீபாவளி கொண்டாட்டம் குதூகலிக்கும்

சிறு வயது தீபாவளி நினைக்கும் போதே நெஞ்சினிக்கும்


தீபாவளித் திருவிழா நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கும்


(கவிஞர் க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வயலாநல்லூர், பூவிருந்தவல்லி திருவள்ளூர் . 25 வருட பணி அனுபவம் உள்ளவர். தமிழ்நாடு அரசின் டாக்டர் எஸ் ராதாகிருஷ்ணன் மாநில நல்லாசிரியர் விருது பெற்றவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, வகுப்பறை அனுபவம், சினிமா  போன்ற தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். you tube Channel களில் பட்டிமன்றம் பேசியுள்ளார். சிங்கப்பூர் பொழில் பண்பலையில் கவிதைகள் எழுதுகிறார்.. சிங்கப்பெண், அருந்தமிழ் தாரகை விருதுகள் பெற்றுள்ளார்).

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கும் தீபாவளி

news

தேசத்தின் திருவிழா.. தீபாவளி!

news

தீபங்கள் ஒளி சிந்த தீமைகள் விலக, இருளின் இமை மூடி அருள் வழி திறக்க.. தீபாவளி வாழ்த்துகள்

news

ஆசைகளைக் குறைத்து… அன்பை நிறைத்து.. நடுத்தரக் குடும்பத்தின் தீபாவளி!

news

Happy Deepavali மக்களே.. பட்டாசு சுட்டுச் சுட்டு போடட்டுமா.. பாதுகாப்பாக கொண்டாடுங்கள்!

news

தமிழகத்தில் தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை: 27 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

news

"பொய் வழக்கு...தில்லுமுல்லு அரசியல்!" – மன்னன் கைதுக்கு எடப்பாடி பழனிசாமி, செல்லூர் ராஜு கண்டனம்

news

கொளத்தூர் தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு டிஸ்சார்ஜா? அமைச்சர் அருண்ராஜ் விளக்கம்

news

கோவை பெரியார் அறிவுலகத்தில் ஊழல்? எழுத்தாளர் பெருமாள் முருகன் குற்றச்சாட்டிற்கு அமைச்சர் விளக்கம்

அதிகம் பார்க்கும் செய்திகள்